தமிழ் - தமிழ் அகரமுதலி - முனை முதல் - மூகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| முனை | நுனி ; பகை ; போர் ; போர்க்களம் ; பகைப்புலம் ; வெறுப்பு ; தவம் ; துணிவு ; திரள் ; முன் ; முகம் ; தலைமை ; கடலுள் செல்லும் நீண்டு கூரிய தரைப்பாகம் . |
| முனைகுலைதல் | ஊக்கங்குறைதல் . |
| முனைஞர் | படைத்தலைவர் . |
| முனைத்தல் | எதிர்த்தல் ; செயலில் முற்படுதல் ; மூண்டுநிற்றல் ; நிறை அதிகமாதல் . |
| முனைதல் | பொருதல் ; ஊக்கங்கொள்ளுதல் ; மூண்டுநிற்றல் ; சினத்தல் ; வெறுத்தல் . |
| முனைந்தோர் | காண்க : முனையோர் . |
| முனைப்பதி | பாசறை . |
| முறைப்புலம் | பாசறை . |
| முனைமழுங்குதல் | கூர்மை கெடுதல் ; ஊக்கங் குன்றுதல் . |
| முனைமுகம் | போர்க்களத்தின் முன்னிடம் ; போர்க்களம் ; போரின் தொடக்கம் . |
| முனைமேற்செல்லுதல் | பகைமேற் படையெடுத்தல் . |
| முனையிடம் | போர்க்களம் ; பாலைநிலத்தூர் . |
| முனையோர் | பகைவர் . |
| முனைவன் | கடவுள் ; முனிவன் ; தலைவன் ; புத்தன் ; அருகன் ; பகைவன் . |
| முனைவு | வெறுப்பு ; அவாவின்மை ; சினம் . |
| மூ | ஒர் உயிர்மெய்யெழுத்து (ம்+ஊ) ; மூப்பு ; மூன்று . |
| மூக்கடைப்பான் | காண்க : மூக்கடைப்பு ; மாட்டு நோய்வகை . |
| மூக்கடைப்பு | நீர்க்கோள் அடைப்பு ; மூக்குநோய் வகை . |
| மூக்கணாங்கயிறு | மாட்டிற்கு மூக்கிலிடுங்கயிறு . |
| மூக்கணை | காண்க : மூக்கணாங்கயிறு ; வண்டியின் முகப்பில் வண்டிக்காரன் இருந்தோட்டும் இடம் . |
| மூக்கணைமரம் | வண்டியின் ஏர்க்கால்மரம் . |
| மூக்கம் | சீற்றம் . |
| மூக்கர் | கீழ்மக்கள் . |
| மூக்கரிகத்தி | வெற்றிலையின் காம்பரிகருவி . |
| மூக்கறுத்தல் | மூக்கையறுத்தல் ; இழிவுபடுத்தல் ; அவமானஞ்செய்தல் . |
| மூக்கறுப்பு | இழிவு ; அவமானம் . |
| மூக்கறை | குறைமூக்குள்ளவர் ; குறை மூக்குள்ளது . |
| மூக்கறைச்சி | குறைமூக்குள்ளவள் ; செடிவகை ; அரிதாரம் . |
| மூக்கன் | எடுப்பான மூக்குள்ளவன் ; மீன் கொத்தி ; கீழ்மகன் ; கடுஞ்சினம் . |
| மூக்காங்கொழுந்து | மூக்குமுனை . |
| மூக்காந்தண்டு | மூக்கின் எலும்புள்ள மேற்பாகம் . |
| மூக்காலழுதல் | சிணுங்குதல் . |
| மூக்கிரட்டை | ஒரு கொடிவகை . |
| மூக்கில் | வசம்பு . |
| மூக்கில்வேர்த்தல் | இரையின் மோப்பத்தால் கழுகுக்கு மூக்கில் வேர்வை உண்டாதல் ; முன்னடையாளம் தெரிதல் . |
| மூக்கிலழகி | காண்க : நிலக்குமிழ் . |
| மூக்கிலி | காண்க : மூக்கறை ; பசலைவகை . |
| மூக்கு | நாசி ; பறவையலகு ; யானைத்துதிக்கை ; பாண்டத்தின் வாயிலுள்ள மூக்குப்போன்ற உறுப்பு ; வண்டிப்பாரின் தலைப்பகுதி ; முளைதோன்றும் வித்தின் முனை ; இலைக்காம்பு ; குறுநொய் ; முரட்டுப்பேச்சு . |
| மூக்குக்கண்ணாடி | பார்வை நன்கு தெரியுமாறு மூக்கின்மேல் அணியும் கண்ணாடி . |
| மூக்குக்குத்துதல் | சிறுமிகளின் மூக்கில் துளையிடுதல் . |
| மூக்குச்சளி | மூக்கினின்று வெளிப்படுஞ் சளி . |
| மூக்குச்சிந்துதல் | மூக்குச்சளியை வெளிப்படுத்துதல் . |
| மூக்குத்தி | மகளிர் மூக்கணி ; மூக்குவாளி ; கொடிவகை . |
| மூக்குத்தூள் | மூக்கால் உறிஞ்சப்படும் புகையிலைப் பொடி . |
| மூக்குப்பிடிக்கவுண்ணுதல் | நிரம்பவுண்ணுதல் . |
| மூக்குப்பீனசம் | மூக்கிற் சதைவளரும் நோய் ; பீனசநோய் . |
| மூக்குயர்த்தல் | பிறந்த குழந்தையின் மூக்கைச் சப்பையாகாம லிருப்பதற்காக இழுத்து விடுதல் . |
| மூக்குறிஞ்சுதல் | ஓசையுண்டாக மூக்கினால் மூச்சை உள்வாங்குதல் . |
| மூக்கூளை | காண்க : மூக்குச்சளி . |
| மூக்கை | மொட்டு . |
| மூக்கைச்சொறிதல் | எளிமைகாட்டுதல் . |
| மூக்கொலி | மூக்கின்வழிப் பிறக்கும் ஓசை . |
| மூக்கொலியன் | சங்கு . |
| மூகம் | மோனம் ; ஊமை ; வறுமை ; பைசாசவகை ; ஒரு மீன்வகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 902 | 903 | 904 | 905 | 906 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முனை முதல் - மூகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மூக்கில், போர்க்களம், வண்டியின், மூக்கறை, கொடிவகை, மூக்குச்சளி, மூக்கணாங்கயிறு, பாசறை, வெறுப்பு, மூண்டுநிற்றல், முனையோர், முனை, மூக்கடைப்பு

