முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » மூட்டைதூக்கி முதல் - மூதுணர்ந்தோர் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - மூட்டைதூக்கி முதல் - மூதுணர்ந்தோர் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மூட்டைதூக்கி | பொருள்களைத் தூக்கிச் செல்லும் கூலியாள் . |
| மூடகருப்பம் | கருப்பத்திலிறந்த பிள்ளை ; பேறுகாலத்திற் குழந்தை எளிதில் வெளியேறாமற் செய்யும் நோய்வகை . |
| மூடத்தனம் | அறிவின்மை . |
| மூடதை | அறிவின்மை . |
| மூடபத்தி | காரணமறியாமற் செய்யும் பத்தி . |
| மூடம் | மந்தாரம் ; குளிர் ; எட்டு மரக்கால் கொண்ட முகத்தலளவை ; மறைந்த இடம் ; அறிவின்மை ; மயக்கம் ; ஐயம் . |
| மூடமதி | அறிவிலி . |
| மூடர் | அறிவில்லார் . |
| மூடல் | மூடுதல் ; மூடி . |
| மூடன் | அறிவில்லான் ; கீழ்மகன் . |
| மூடனம் | மிளகு ; அறிவின்மை . |
| மூடாத்துமா | மதிகேடன் . |
| மூடி | மூடுகருவி ; தேங்காய்மூடி ; கொத்துமல்லிப் பூண்டு ; மூடப்பெண் . |
| மூடிகம் | எலிவகை . |
| மூடிவைத்தல் | பாதுகாப்பாக வைத்தல் ; இரகசியமாக மறைத்துவைத்தல் . |
| மூடு | வேர் ; காரணம் ; சிறுதூறு ; பெண்ணாடு ; பூச்சிவகை ; அறிவிலான் ; நிலை . |
| மூடுகுப்பாயம் | மேற்போர்வை ; நீண்ட அங்கி . |
| மூடுசீலை | போர்த்தும் ஆடை . |
| மூடுதல் | போர்த்தல் ; மறைத்தல் ; சுற்றிக் கொள்ளுதல் ; நோய் முதலியன மிகுதல் . |
| மூடுதிரை | காண்க : மூடுசீலை . |
| மூடுபனி | அடர்ந்து பெய்யும் பனி . |
| மூடுபாறை | தூம்பின்மேல் மூடுங் கல் . |
| மூடுமந்திரம் | மிகக் கமுக்கம் , பரம இரகசியம் . |
| மூடுவழி | கோட்டை முதலியவற்றில் கட்டடத்தால் மூடிக் காக்கப்பட்ட வழி , சுருங்கை . |
| மூடை | பண்டமூட்டை ; தானியக்கோட்டை ; தனியாக்குதிர் . |
| மூண்டன் | மிளகு . |
| மூத்ததிகாரம் | தலைமையதிகாரம் . |
| மூத்தநாயனார் | சிவபிரானின் மூத்த புதல்வரான விநாயகர் . |
| மூத்தப்பன் | பாட்டன் . |
| மூத்தபிள்ளையார் | காண்க : மூத்தநாயனார் . |
| மூத்தம் | காண்க : முகூர்த்தம் . |
| மூத்தல் | முதுமையுறுதல் ; கேடுறுதல் ; முடிதல் . |
| மூத்தவன் | ஆண்டில் முதிர்ந்தவன் ; தமையன் ; மேலோன் . |
| மூத்தார் | கணவனுடைய தமையன் ; முதியவர் . |
| மூத்தாள் | முதியவள் , முன்பிறந்தாள் ; மூதேவி ; முதல் மனைவி . |
| மூத்திரக்கிருச்சிரம் | வருத்தத்துடன் சிறிது சிறிதாக மூத்திரம் போகச்செய்யும் நோய்வகை . |
| மூத்திரக்குண்டிக்காய் | இரத்தத்திலுள்ள கெட்டநீரைப் பிரித்து மூத்திரமாக்கும் உடலுறுப்பு . |
| மூத்திரக்குழல் | மூத்திரக்குண்டிக்காயுள் சிறுநீர் சுரக்குங் குழல் ; மூத்திரக் குண்டிக்காயினின்றும் மூத்திரப்பைக்குச் செல்லும் சிறுநீர்க் குழல் . |
| மூத்திரசங்கம் | நீரிழிவுநோய் . |
| மூத்திரசுக்கிலம் | சிறுநீருடன் விந்து இறங்கும் வெட்டைநோய் . |
| மூத்திரப்பை | உடலில் சிறுநீர் தங்கும் உறுப்பு . |
| மூத்திரபுடம் | அடிவயிறு . |
| மூத்திரபுரீடங்கள் | சலமலங்கள் . |
| மூத்திரம் | சிறுநீர் . |
| மூத்திரம்பெய்தல் | சிறுநீரை வெளிவிடுதல் ; புறக்கணித்தல் . |
| மூத்திராசயம் | காண்க : மூத்திரப்பை . |
| மூத்தோர் | முதியவர் ; பண்டிதர் ; அமைச்சர் . |
| மூத்தோன் | முதியவன் ; தமையன் ; விநாயகன் ; நாற்பத்தெட்டு வயதுக்குமேல் அறுபத்து நான்கு வயதுக்குட்பட்ட மனிதன் . |
| மூதண்டம் | பிரமாண்டம் ; பிரம அண்டத்தின் முகடு ; அறுகம்புல் . |
| மூதணங்கு | கொற்றவை . |
| மூதம் | இந்திரியம் . |
| மூதரித்தல் | மெய்ப்பித்தல் . |
| மூதலித்தல் | மெய்ப்பித்தல் . |
| மூதறிதல் | அறிவுமுதிர்தல் ; பழைமையான செய்திகளை அறிதல் . |
| மூதறிவாளன் | அறிவுமுதிர்ந்தோன் . |
| மூதறிவு | பேரறிவு . |
| மூதா | கிழட்டுப்பசு ; காண்க : இந்திரகோபம் . |
| மூதாக்கள் | முன்னோர் . |
| மூதாட்டி | முதியவள் . |
| மூதாதை | பாட்டன் . |
| மூதாய் | பாட்டி ; காண்க : இந்திரகோபம் . |
| மூதாளர் | முதியவர் . |
| மூதானந்தம் | பேரின்பம் ; தன் கணவன் இறந்தபோதே மனைவி உயிர்நீங்கிய பேரன்பைக் கண்டோர் கூறும் புறத்துறை . |
| மூதிக்கம் | காண்க : சிவனார்வேம்பு . |
| மூதிரி | எருமை . |
| மூதிரை | திருவாதிரை நாள் ; சிவபிரான் . |
| மூதில் | பழங்குடி ; பழைய மறக்குடி . |
| மூதிற்பெண்டிர் | மறக்குடி மகளிர் . |
| மூது | முதுமை ; ஈகை . |
| மூதுணர்தல் | நான்றாகவுணர்தல் . |
| மூதுணர்ந்தோர் | அறிவுமுதிர்ந்தோர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 904 | 905 | 906 | 907 | 908 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூட்டைதூக்கி முதல் - மூதுணர்ந்தோர் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, அறிவின்மை, தமையன், சிறுநீர், முதியவர், மனைவி, மூத்திரம், குழல், மறக்குடி, இந்திரகோபம், மெய்ப்பித்தல், மூத்திரப்பை, முதியவள், பாட்டன், மூடுதல், நோய்வகை, செய்யும், மூடி, மிளகு, மூத்தநாயனார், மூடுசீலை, செல்லும்

