தமிழ் - தமிழ் அகரமுதலி - மூகன் முதல் - மூட்டை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மூகன் | ஓர் அசுரன் ; ஊமையன் ; வறிஞன் . |
| மூகாத்தல் | வாய்பேசாதிருத்தல் . |
| மூகி | கேழ்வரகு . |
| மூகை | ஊமை ; ஈரற்குலை ; படைக்கூட்டம் ; சங்கஞ்செடி . |
| மூகைமை | ஊமையாயிருக்குந் தன்மை . |
| மூங்கர் | ஊமையர் . |
| மூங்கா | கீரிப்பிள்ளை ; ஆந்தை . |
| மூங்கி | பாசிப்பயறு . |
| மூங்கில் | புறக்காழுள்ள பெரும்புல்வகை ; புனர் பூசநாள் . |
| மூங்கிலரிசி | மூங்கிலினின்று உண்டாகும் விதை . |
| மூங்கிலாடை | மூங்கிலின் உட்புறத்தில் மெல்லிதாகவுள்ள தாள . |
| மூங்கிலுப்பு | நோய்கொண்ட மூங்கிற் கணுக்களினின்று வடியும் பிசின் . |
| மூங்கிற்குழல் | புல்லாங்குழல் ; பருகும் மது முதலியவற்றை வைக்க உதவும் மூங்கிற் பாண்டம் . |
| மூங்கிற்குழாய் | புல்லாங்குழல் ; பருகும் மது முதலியவற்றை வைக்க உதவும் மூங்கிற் பாண்டம் . |
| மூங்கிற்கோல் | காண்க : மூங்கிற்றண்டு . |
| மூங்கிற்பண்ணை | அடர்த்தியான மூங்கிற்காடு . |
| மூங்கிற்பத்தை | நீளவாக்கிற் பிளந்த மூங்கில் துண்டு , பிளாச்சு . |
| மூங்கிற்புதர் | நெருங்கி வளர்ந்த மூங்கில் தொகுதி . |
| மூங்கிற்றண்டு | மூஙங்கிற்கழி . |
| மூங்கு | காண்க ; மூங்கி . |
| மூங்கை | ஊமை . |
| மூங்கையான் | ஊமையன் . |
| மூச்சடக்குதல் | மூச்சை உள்ளடக்குதல் . |
| மூச்சடைத்தல் | மூச்சுத் திணறச்செய்தல் . |
| மூச்சடைப்பு | மூச்சுவாங்குகை ; முட்டுமூச்சு வாங்குகை . |
| மூச்சு | உயிர்ப்பு ; ஆண்மை ; பலம் ; முயற்சி . |
| மூச்சுக்காட்டுதல் | ஆண்மை காட்டுதல் ; ஆள் அரவஞ்செய்தல் . |
| மூச்சுப்பறிதல் | சுவாசம் வெளியே செல்லல் ; பலவீனப்படுகை . |
| மூச்சுப்பிடித்தல் | மூச்சை உள்ளடக்குதல் ; மூச்சுத் திணறுதல் ; இடுப்பில் சுளுக்கிக்கொள்ளுதல் ; கடுமையாக முயலுதல் . |
| மூச்சுப்பிடிப்பு | ஒரு மூச்சுநோய்வகை ; மூச்சை உள்ளே அடக்குகை ; இடுப்பிலுண்டாகுஞ் சுளுக்கு . |
| மூச்சுப்பேச்சு | பேசுகை ; உயிரிருக்கும் குறி . |
| மூச்சுவாங்குதல் | காண்க : மூச்சடக்குதல் ; பெருமூச்சு விடுதல் ; வெடிப்புக் காணுதல் ; இளைப்பினால் பெருமூச்சு வருகை ; இறுதிக்காலத்தில் நெடுமூச்சு விடுகை . |
| மூச்சுவிடாமல் | வாய்திறவாமல் ; இடைவிடாமல் . |
| மூச்சுவிடுதல் | உட்கொண்ட காற்றை வெளியிற் போக்குதல் ; வெடிப்புக் காணுதல் . |
| மூச்செறிதல் | காண்க : மூச்சுவிடுதல் . |
| மூச்சை | காண்க : மூர்ச்சை . |
| மூச்சொடுங்குதல் | மூச்சடங்கல் ; சாதல் . |
| மூசல் | மொய்த்தல் ; சாதல் ; கெடுதல் . |
| மூசாந்தம் | வெண்டாமரை . |
| மூசாப்பு | மந்தாரம் ; மூச்சுமுட்டல் . |
| மூசு | மொய்த்தல் ; இளங்காய் . |
| மூசுண்டை | தின்பண்டம் ; கேடுற்ற பணிகாரம் . |
| மூசுதல் | காண்க : மூசல் ; மோப்பம்பிடித்தல் . |
| மூசை | மண்ணாலான குகை , உலோகங்களை உருக்கி வார்ப்பதற்கான மட்கரு . |
| மூஞ்சி | முகம் . |
| மூஞ்சிசுண்டுதல் | முகங்கருகல் ; முகத்தைச் சுளித்தல் . |
| மூஞ்சுறு | எலிவகை ; மாட்டுநோய்வகை . |
| மூஞ்சூறு | எலிவகை ; மாட்டுநோய்வகை . |
| மூஞ்சை | கோணிய முகம் ; நீண்ட முகம் ; நீண்ட மூக்கு . |
| மூஞ்சையன் | முகங்கோணியவன் . |
| மூட்குதல் | அகப்பையால் எடுத்தல் ; சிக்கலை விடுவித்தல் . |
| மூட்சி | சினமிகுதி . |
| மூட்டங்கட்டுதல் | உலோகமுருக்கக் குழியுண்டாக்குதல் ; மேகம் ஒருங்குசேர்தல் ; மண் முதலியவற்றால் மூடுதல் ; ஆயத்தப்படுத்துதல் ; தொடங்குதல் . |
| மூட்டங்கலைத்தல் | மூடியுள்ள மூட்டத்தை நீக்குதல் . |
| மூட்டம் | மூடியிருப்பது ; மேகமூட்டம் ; உலைமுகம் ; மூடுதழல் ; மூடிய தானியக்குவியல் ; விறகு ; சொக்கப்பனை ; ஆயத்தம் ; கம்மக் கருவிவகை ; மகளிர்க்கு மகப்பேற்றின் பின்னும் அடுத்துவரும் மாதவிடாய்க்கு முன்னுமுள்ள காலம் . |
| மூட்டு | உடல் முதலியவற்றின் பொருத்து ; சந்திப்பு ; குதிரைக் கடிவாளம் ; கோள் ; கட்டு ; கட்டப்பட்டது ; தையல் ; மனவெழுச்சி ; மூடுகின்ற பொருள் ; மூடியிருப்பது . |
| மூட்டுதல் | மூளச்செய்தல் ; செலுத்துதல் ; இசைத்தல் ; தைத்தல் ; தூண்டிவிடுதல் ; அதிகப்படுத்துதல் . |
| மூட்டுநழுவல் | உடற்பொருத்துப் பிசகல் . |
| மூட்டுப்பூச்சி | பூச்சிவகை ; கம்பளிப்பூச்சி . |
| மூட்டுவாய் | பொருத்து . |
| மூட்டை | உள்ளே பண்டம் வைத்துக் கட்டப்பட்ட கட்டு ; பொதி ; பெரும்பொய் ; கம்பளிப்பூச்சி ; ஓர் அளவு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 903 | 904 | 905 | 906 | 907 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூகன் முதல் - மூட்டை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மூச்சை, மூங்கிற், மூங்கில், முகம், மொய்த்தல், மூச்சுவிடுதல், காணுதல், சாதல், மூசல், மாட்டுநோய்வகை, கட்டு, கம்பளிப்பூச்சி, பொருத்து, மூடியிருப்பது, வெடிப்புக், நீண்ட, எலிவகை, ஆண்மை, வைக்க, உதவும், முதலியவற்றை, பருகும், மூங்கி, புல்லாங்குழல், பாண்டம், மூங்கிற்றண்டு, ஊமையன், உள்ளே, மூச்சுத், உள்ளடக்குதல், மூச்சடக்குதல், பெருமூச்சு

