முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » முறையிடுதல் முதல் - முன்னவிலக்கு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - முறையிடுதல் முதல் - முன்னவிலக்கு வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
முறையிடுதல் | குறை சொல்லிக்கொள்ளுதல் . |
முறையிலார் | கீழ்மக்கள் . |
முறையின்வைப்பு | நூலழகு பத்தனுள் எடுத்துக் கொண்ட பொருள்களை வரிசைப்படி வைப்பது . |
முறையீடு | நீதிவேண்டிக் குறையிரக்கை . |
முறையுளி | நியமப்படி . |
முறையோர் | காண்க : முறைசெய்வோர் . |
முறைவன் | சிவபிரான் ; பாகன் . |
முன் | இடத்தால் முன் ; காலத்தால் முன் ; உயர்ச்சி ; முதல் ; பழைமை ; ஏழனுருபு ; மனக்குறிப்பு ; காண்க : முன்றோன்றல் . |
முன்கட்டு | முன்னாலே கைமடித்துக் கட்டுதல் ; வீட்டின் முன்பக்கம் . |
முன்கடை | வீட்டுவாயில் . |
முன்குடுமி | தலையில் முன்பக்கமாக வைத்துக் கொள்ளும் குடுமி . |
முன்கை | முன்னங்கை ; கைத்தலம் . |
முன்கோபம் | உடன்தோன்றுஞ் சினம் . |
முன்சொல் | பழமொழி . |
முன்பணம் | அச்சாரத்தொகை . |
முன்பன் | வலியுடையவன் ; தலைவன் ; நிதிச் சீட்டை நடத்துபவன் . |
முன்பனி | இரவின் முற்பகுதியில் பனி மிகுதியையுடைய மார்கழி தை மாதங்கள் . |
முன்பனிப்பருவம் | இரவின் முற்பகுதியில் பனி மிகுதியையுடைய மார்கழி தை மாதங்கள் . |
முன்பால் | முன்னாக . |
முன்பில் | இடத்தால் முன் ; காலத்தால் முன் ; உயர்ச்சி ; முதல் ; பழைமை ; காண்க : முன்றோன்றல் . |
முன்பிற்படி | முன்போல . |
முன்பிறந்தாள் | காண்க : முன்னவள் . |
முன்பிறந்தான் | தமையன் . |
முன்பின் | முந்தியும் பிந்தியும் ; ஏறக்குறைய . |
முன்பு | முன்னிடம் ; பழைமை ; மெய்வலி ; பெருமை ; முன்னால் . |
முன்புத்தை | முன்னிடம் ; பழைமை ; மெய்வலி ; பெருமை ; முன்னால் . |
முன்புள்ளார் | பழைமைக் குடியினர் . |
முன்புற்றை | காண்க : முன்பு . |
முன்மடி | ஆடையின் மடியிற் செய்துகொள்ளும் பை . |
முன்மறம் | காண்க : முன்கோபம் . |
முன்மாதிரி | எடுத்துக்காட்டு . |
முன்முறை | முற்பிறப்பு . |
முன்மொழி | பழமொழி ; தொகைமொழியில் இரண்டாவதாக வரும் மொழி . |
முன்மொழிந்துகோடல் | உத்தி முப்பத்திரண்டனுள் பின்னர் அடிக்கடி கூறவேண்டியவற்றை முன்னர் எடுத்துக்கூறும் உத்திவகை . |
முன்மொழிநிலையல் | தொகைமொழியுள் இரண்டாம் மொழிக்கண்ணே பொருள் சிறந்து நிற்கை . |
முன்வளம் | தோணியின் முன்பக்கம் ; முன்னிடம் . |
முன்வாய் | வாயின் முன்பக்கம் ; உதடு ; பொலிதூற்றுவதில் காற்றுக்கு எதிர்ப்பக்கம் . |
முன்றாதை | பாட்டன் . |
முன்றாய் | பாட்டி . |
முன்றானை | சீலைத்தலைப்பு ; மேற்போர்வை . |
முன்றானைவிரித்தல் | ஒருவனுக்குப் பெண்டாயிருத்தல் . |
முன்றிணைமுதல்வன் | குலமுன்னோருள் முதல்வன் . |
முன்றில் | வீட்டின் முன்னிடம் ; வெளியிடம் . |
முன்றுறை | துறைமுகம் . |
முன்றூதன் | சென்று அறிவிப்போன் . |
முன்றோன்றல் | முன்பிறந்தவன் ; தமையன் . |
முன்னங்கால் | முன்பக்கத்துக் கால் ; முழங்காலின் முன்பக்கம் ; பாதத்தின் மேற்புறம் . |
முன்னங்கை | கையின் முன்பகுதி . |
முன்னடி | வீட்டின் முகப்பிடம் ; அண்மை ; விளிம்பு ; பாட்டின் முதலடி ; முன்பு ; கோயிலின் வாயிலிலுள்ள சிறுதேவதை . |
முன்னடிவிளக்கு | முன்னால் கொண்டுசெல்லும் கைவிளக்கு . |
முன்னடைப்பன் | அசைபோடாமற் செய்யும் மாட்டுநோய்வகை . |
முன்னடையாளம் | முன்னறிகுறி . |
முன்னணி | தூசிப்படை . |
முன்னணிசு | தலைமுண்டாசுவகை . |
முன்னணை | மாட்டுத்தொட்டி ; கொண்டி மாட்டுக்கு முன்னங்காலிற் கட்டுந் தளை ; அணைக்குமுன் தாற்காலிகமாகப் போடும் அணை ; முன்பிறந்த குழந்தை அல்லது கன்று . |
முன்னதாக | முன்பு . |
முன்னந்தம் | முன்பார்வை . |
முன்னந்தலை | நெற்றியிலிருந்து உச்சிவரையுள்ள தலைப்பாகம் . |
முன்னம் | முற்காலம் ; கருத்து ; மனம் ; குறிப்பு ; இம் மொழி சொல்லுதற்கு உரியாரும் கேட்டற்கு உரியாரும் இன்னோரெனப் படிப்பார் அறியுமாறு செய்யப்படுவதாகிய செய்யுளுறுப்பு ; அரிமா ; சீக்கிரிமரம் . |
முன்னர் | முன்பு ; முற்காலத்தில் . |
முன்னல் | நினைவு ; நெஞ்சு . |
முன்னவள் | தமக்கை ; மூதேவி . |
முன்னவன் | கடவுள் ; சிவபிரான் ; தமையன் . |
முன்னவிலக்கு | குறிப்பினால் ஒன்றனை மறுத்து மேன்மை தோன்றச் சொல்லும் விலக்கணி வகை . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 900 | 901 | 902 | 903 | 904 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முறையிடுதல் முதல் - முன்னவிலக்கு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, முன், முன்பு, முன்னிடம், முன்பக்கம், பழைமை, தமையன், வீட்டின், முன்றோன்றல், முன்னால், உரியாரும், முன்னவள், முன்னர், மொழி, மெய்வலி, மாதங்கள், பெருமை, இரவின், உயர்ச்சி, காலத்தால், இடத்தால், சிவபிரான், முன்னங்கை, முன்கோபம், மிகுதியையுடைய, முற்பகுதியில், பழமொழி, மார்கழி