முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » முன்னறிகுறி முதல் - முனீந்திரன் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - முன்னறிகுறி முதல் - முனீந்திரன் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
முன்னறிகுறி | பின்னிகழ்ச்சிக்கு அறிகுறியாக முன்னிகழ்வது . |
முன்னன் | தமையன் . |
முன்னாடி | முன்னமே , முன்னதாக . |
முன்னிட்டி | விலங்கிற்கு உணவிடுந் தொட்டி . |
முன்னிடுதல் | நேரிடுதல் ; முந்துதல் ; சித்தமாயிருத்தல் ; உதவியாதல் ; முன்வைத்தல் ; எதிர்ப்படுதல் ; முன்போகவிடுதல் ; துணைக் கொள்ளுதல் ; நோக்கமாகக் கொள்ளுதல் . |
முன்னிருட்டு | முன்னிரவின் இருள் . |
முன்னிருப்பு | முன்னிலைமை ; மரபுவழி வந்த உடைமை ; கையிருப்புத்தொகை ; கணக்கில் முன்னேட்டிலிருந்து எடுத்தெழுதும் இருப்புத் தொகை . |
முன்னிரை | பெருந்தொகை . |
முன்னிலவு | முன்னிரவின் நிலவு . |
முன்னிலை | முன்னிற்பவர் ; முன்னிற்பது ; தன்மை முதலிய மூவிடங்களுள் ஒன்று ; காரணம் ; சமூகம் ; முதன்மையானது ; வெளிப்படும் இடம் . |
முன்னிலைக்காட்சி | இறைவனை அணித்துறக் காணுங் காட்சி . |
முன்னிலைப்படர்க்கை | முன்னிலைப் பொருளில் வழங்கும் படர்க்கைச்சொல் . |
முன்னிலைப்பரவல் | கடவுளை முன்னிலைப் படுத்திப் புகழ்தல் . |
முன்னிலைப்பாடு | பிணைப்பொருள் . |
முன்னிலைப்புறமொழி | முன்னிலையாரைப் படர்க்கையில் வைத்துப் பேசுதல் . |
முன்னிலைப்பெயர் | முன்னிலையிடத்து வரும் பெயர்ச்சொல் . |
முன்னிலையசை | முன்னிலையில் வழங்கும் அசைச்சொல் . |
முன்னிளவல் | முன்பிறந்தவன் ; தமையன் . |
முன்னீடு | முன்செல்லுகை ; முன்னிடுகை ; தலைமை ; பொறுப்பாளி ; பெண்டிர் காதணி ; முதல் அடைமானம் . |
முன்னீர் | நிலத்துக்குமுன் தோன்றியதான கடல் . |
முன்னுக்குவருதல் | வளர்ச்சியடைதல் . |
முன்னுதல் | கருதுதல் ; எதிர்ப்படுதல் ; அடைதல் ; அணுகுதல் ; பொருந்துதல் ; பின்பற்றுதல் ; கிளர்தல் ; படர்ந்துசெல்லுதல் ; முற்படுதல் ; நிகழ்தல் . |
முன்னுரை | முகவுரை ; பழமொழி ; முன்வரலாறு . |
முன்னுற | முன்பாக . |
முன்னுறவுணர்தல் | தலைவிக்கு முன்னுற்ற களவுநிலையைத் தோழி அறிதலைக் கூறும் அகத்துறை . |
முன்னுறுபுணர்ச்சி | காண்க : இயற்கைப்புணர்ச்சி . |
முன்னூல் | முதனூல் ; பழைய நூல் ; மறை , வேதம் . |
முன்னூற்கேள்வன் | கடவுள் . |
முன்னெண்ணம் | முன்னிகழ்ச்சிபற்றிய நினைவு ; முன்னாலோசனை . |
முன்னெற்றி | நெற்றியின் மேற்பாகம் . |
முன்னே | முன்பு ; எதிரில் . |
முன்னேர் | உழவில் முதலில் செல்லும் ஏர் . |
முன்னேர்க்குண்டை | உழவில் முந்திச்செல்லும் ஏர்மாடு . |
முன்னேரம் | இளம்பகல் ; விடியற்பொழுது ; அந்திவேளை . |
முன்னேற்றம் | வளர்ச்சியடைதல் ; முந்துதல் . |
முன்னேறுதல் | வளர்ச்சியடைதல் ; முந்துதல் . |
முன்னை | பழைமை ; அக்காள் ; அண்ணன் ; முன்னைமரம் ; காண்க : பீநாறி . |
முன்னைக்கணம் | சென்றகாலம் . |
முன்னையோர் | முன்னோர் ; பெரியோர் . |
முன்னைவினை | பழவினை . |
முன்னோடி | முதல் வழிகாட்டி ; முன்மாதிரி ; உளவுகாரன் . |
முன்னோர் | குலத்தலைவர் ; முற்பட்டோர் ; பழங்குடியினர் ; அமைச்சர் . |
முன்னோன் | விநாயகன் ; அருகன் ; கடவுள் ; குலத்தலைவன் ; தகப்பன் ; தமையன் . |
முனக்கம் | முணுமுணுக்கை ; புலப்பம் . |
முனகர் | கயவர் . |
முனகு | குற்றம் . |
முனகுதல் | முணுமுணுத்தல் ; புலம்புதல் . |
முனங்குதல் | முணுமுணுத்தல் ; புலம்புதல் . |
முனாது | முன்னிடத்துள்ளது ; முன்புள்ளது . |
முனி | வில் ; யானைக்கன்று ; பேய் ; முனிவன் ; புத்தன் ; அகத்திமரம் . |
முனித்துறை | சடங்கு . |
முனிதல் | வெறுத்தல் ; சினங்கொள்ளுதல் . |
முனிந்துரை | காண்க : வெந்தயம் . |
முனிமரபு | இறைமை ; தெய்வத்தன்மை . |
முனிமூத்திரம் | கல்லுப்பு . |
முனிமை | முனிவனுக்குரிய தன்மை . |
முனிவர் | இருடிகள் ; பதினெண்கணத்துள் ஒரு தொகுதியினர் . |
முனிவரன் | முனிவருள் சிறந்தோன் . |
முனிவன் | ஞானி ; கடவுள் . |
முனிவு | சினம் ; வெறுப்பு ; களைப்பு ; வருத்தம் ; முயற்சி . |
முனீந்திரன் | முனிவருள் சிறந்தவன் ; புத்தன் ; அருகன் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 901 | 902 | 903 | 904 | 905 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முன்னறிகுறி முதல் - முனீந்திரன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், தமையன், கடவுள், வளர்ச்சியடைதல், காண்க, முந்துதல், முணுமுணுத்தல், அருகன், புலம்புதல், முனிவன், முனிவருள், புத்தன், முன்னோர், உழவில், முன்னிலைப், தன்மை, வழங்கும், கொள்ளுதல், எதிர்ப்படுதல், முன்னிரவின்