தமிழ் - தமிழ் அகரமுதலி - முறித்தல் முதல் - முறைமை வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
முறித்தல் | ஒடித்தல் ; கீறுதல் ; நிறுத்திவிடுதல் ; தன்மை மாற்றுதல் ; நெசவுத்தறியில் உண்டை மறித்தல் . |
முறிதல் | ஒடிதல் ; தோல்வியுறல் ; குலைதல் ; நிலைகெடுதல் ; அழிதல் ; தன்மைமாறுதல் ; தப்புதல் ; துளிர்த்தல் ; பயனிலதாதல் ; அருள் மாறுதல் . |
முறிப்பத்திரம் | காண்க : முறிச்சீட்டு . |
முறிப்பு | கடுமை ; மாற்றுமருந்து ; செருக்கு ; காண்க : முரிப்பு ; நட்புமாறுகை . |
முறியடித்தல் | தோல்வியுறச்செய்தல் . |
முறியல் | காண்க : முறிவு . |
முறியன் | ஆணடிமை ; பயிரில் காணும் ஒரு நோய்வகை . |
முறியெழுதுதல் | பத்திரமெழுதுதல் . |
முறிவு | முறிகை ; பிளப்பு ; பிணக்கம் ; மாற்று மருந்து ; எலும்பு ஒடிகை ; வைரக் குற்றவகை . |
முறிவுமருந்து | மாற்றுமருந்து . |
முறுக்கடித்தல் | மறுத்தல் . |
முறுக்கவிழ்தல் | அரும்புமலர்தல் ; காண்க : முறுக்காறுதல் . |
முறுக்காணி | வீணை முதலியவற்றின் நரம்பினை இறுக்கும் கருவி . |
முறுக்காறுதல் | கயிற்றின் புரி ஒருநிலைப்பட்டு நேராதல் . |
முறுக்கிக்கொள்ளுதல் | கயிறு முதலியன திரித்தல் ; திருக்குதல் ; ஒடித்தல் ; வெற்றிலை உண்ணுதல் . |
முறுக்கிவிடுதல் | சுற்றிவிடுதல் ; திருகிவிடுதல் ; தூண்டிவிடுதல் ; பகையுண்டாக்குதல் . |
முறுக்கு | திரிக்கை ; திருகாணியின் சுற்று ; மாறுபாடு ; செருக்கு ; மிடுக்கு ; அரும்புத்தன்மை ; மாவினாற் செய்த பலகாரவகை ; வலிப்பு ; கடுமை ; நெறிப்பு ; நூலுருண்டை . |
முறுக்குடைத்தல் | காண்க : முறுக்குவாங்குதல் . |
முறுக்குதல் | காண்க : முறுக்கிக்கொள்ளுதல் ; சுழற்றுதல் ; மாறுபடுதல் ; செருக்குதல் ; சினத்தல் ; கைகால்களைப் பிசைந்து தேய்த்தல் . |
முறுக்குப்பண்ணுதல் | செருக்குக் காட்டுதல் . |
முறுக்குமீசை | முறுக்கிவிட்ட மீசை . |
முறுக்குவாங்குதல் | புரிநெகிழ்த்துதல் ; உடற் கட்டுவிடுதல் . |
முறுகல் | காய்ந்து கரிந்தது . |
முறுகு | திண்மை . |
முறுகுகொளுந்துதல் | வலிமைபெறுதல் . |
முறுகுதல் | திருகுதல் ; விரைதல் ; முதிர்தல் ; மிகுதல் ; கடுமையாதல் ; காந்திப்போதல் ; மீறுதல் ; செருக்குதல் . |
முறுகுநெய் | பதங்கெடக் காய்ந்த நெய் . |
முறுமுறுத்தல் | காண்க : முணுமுணுத்தல் . |
முறுவஞ்சி | முத்து . |
முறுவல் | பல் ; புன்னகை ; மகிழ்ச்சி ; செடிவகை ; இறந்தொழிந்த நாடகத்தமிழ் நூல்களுள் ஒன்று . |
முறுவலித்தல் | புன்னகைசெய்தல் . |
முறை | நீதி ; அடைவு ; நியமம் ; ஆள் மாறிமாறி வேலைசெய்யும் நியமம் ; தடவை ; பிறப்பு ; ஒழுக்கம் ; உறவு ; உறவுமுறைப் பெயர் ; அரச நீதி ; பழைமை ; ஊழ் ; கூட்டு ; நூல் ; தன்மை ; காண்க : முறையீடு ; கற்பு . |
முறைக்காய்ச்சல் | ஒன்றுவிட்டொருநாள் வருஞ்சுரம் . |
முறைக்காரன் | முறைப்படி வேலை பார்ப்போன் ; காண்க : முறைமாப்பிள்ளை ; கோயில் முதலியவற்றில் வேலை செய்யும் உரிமையுடையவன் . |
முறைகாரன் | முறைப்படி வேலை பார்ப்போன் ; காண்க : முறைமாப்பிள்ளை ; கோயில் முதலியவற்றில் வேலை செய்யும் உரிமையுடையவன் . |
முறைகேடு | நீதித்தவறு ; தகுதியற்ற செயல் ; ஒழுங்கின்மை ; தீ நடத்தை . |
முறைசிறத்தல் | ஒன்று ஒன்றனிற் சிறந்துவருதல் . |
முறைசெய்தல் | அரசநீதி அளித்தல் ; ஒறுத்தல் . |
முறைசெய்வோர் | கட்டளை நிறைவேற்றும் ஏவலாளர் . |
முறைத்தல் | ஏற விழித்துப் பார்த்தல் ; செருக்குறுதல் ; நெறித்து நிமிர்தல் . |
முறைத்துப்பார்த்தல் | ஏற விழித்து நோக்குதல் ; செருக்குறுதல் ; குதிரை முதலியன வெருண்டு நோக்குதல் . |
முறைநிலைப்பெயர் | காண்க : முறைப்பெயர் . |
முறைநீர் | நீர்ப்பற்றாக்குறைக் காலத்தில் வயலுக்கு முறைப்படி விடப்படும் பாசனநீர் . |
முறைப்படுதல் | அடைவுபடுதல் ; முறையிடுதல் . |
முறைப்பாடு | நீதிவேண்டிக் குறைகூறுதல் ; அரசிறை . |
முறைப்பு | விறைப்பு ; செருக்கு ; விலையேற்றம் . |
முறைப்பெண் | ஒருவனை மணம்புரியும் உறவு முறையுள்ள அத்தை அல்லது அம்மான் மகள் . |
முறைப்பெயர் | உறவுமுறை காட்டும் பெயர்ச் சொல் . |
முறைமயக்கி | காண்க : குப்பைமேனி . |
முறைமயக்கு | ஒழுங்கின்மை . |
முறைமாப்பிள்ளை | ஒருத்தியை மணம்புரியும் உறவுமுறையுள்ள அத்தை அல்லது அம்மான் மகன் . |
முறைமாறுதல் | ஒழுங்குதப்பி வருதல் ; முறைப்படி தண்ணீர் பாய்ச்சுதல் ; சாதி வழக்கத்திற்கு மாறாக மணம்புரிதல் . |
முறைமுதற்கட்டில் | அரியணை . |
முறைமை | உரிமை ; ஒழுக்கம் ; அடைவு ; உறவு ; அரசநீதி ; ஊழ் ; தன்மை . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 899 | 900 | 901 | 902 | 903 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முறித்தல் முதல் - முறைமை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, முறைப்படி, வேலை, முறைமாப்பிள்ளை, செருக்கு, உறவு, தன்மை, உரிமையுடையவன், செய்யும், கோயில், ஒழுங்கின்மை, முதலியவற்றில், செருக்குறுதல், அத்தை, அல்லது, அம்மான், மணம்புரியும், முறைப்பெயர், பார்ப்போன், நோக்குதல், அரசநீதி, ஒழுக்கம், முறுக்காறுதல், முறுக்கிக்கொள்ளுதல், முறிவு, மாற்றுமருந்து, ஒடித்தல், கடுமை, முதலியன, முறுக்குவாங்குதல், அடைவு, நியமம், நீதி, ஒன்று, செருக்குதல், சொல்