தமிழ் - தமிழ் அகரமுதலி - முற்பால் முதல் - முறிசெய்தல் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
முற்பால் | காண்க : முன்பு . |
முற்பாற்கிழமை | பழமையான நட்புரிமை . |
முற்பிறப்பு | முற்பிறவி . |
முற்பூண் | தாலி . |
முற்பெரியான் | பிரமன் . |
முற்போக்கு | முன்னேற்றம் . |
முற்ற | முழுதும் ; மிகவும் . |
முற்றகப்படுதல் | முற்றுகையில் அகப்படுதல் . |
முற்றத்துறத்தல் | முழுதும் துறத்தல் . |
முற்றம் | வீட்டின் முன்பக்கம் ; தொட்டிமுற்றம் ; பரப்பு ; ஊரின் வெளியிடம் . |
முற்றல் | முதிர்ச்சி ; முற்றியது ; வைரங்கொள்ளல் ; முற்றிய காய் ; முடிதல் ; திண்மை ; மூப்பு ; முற்றுதல் ; வளைவு ; வெறுத்தல் . |
முற்றவிடுதல் | முதிரவிடுதல் ; காண்க : முற்றத்துறத்தல் . |
முற்றவும் | காண்க : முற்றிலும் . |
முற்றவை | அறிவுமுதிர்ந்தோர் கூடிய அவை : பாட்டி . |
முற்றவெளி | வெளியிடம் . |
முற்றளபெடை | அடியின் எல்லாச் சீர்க்கண்ணும் அளபெடை வரத் தொடுப்பது . |
முற்றறிவன் | எல்லாமறிந்தவனான கடவுள் . |
முற்றறிவு | எல்லாவற்றையும் அறியும் அறிவு . |
முற்றன் | முழுமையன் . |
முற்றாமை | முடிவுபெறாமை ; இயலாமை . |
முற்றாய்தம் | தனது மாத்திரையில் குறையாத ஆய்தவெழுத்து . |
முற்றாவுரு | குறை உரு . |
முற்றிக்கை | கோட்டை முதலியவற்றை முற்றுகையிடுதல் ; நெருக்கடி . |
முற்றித்தல் | முடித்தல் . |
முற்றிமை | முதிர்ந்த அறிவு . |
முற்றியலிகரம் | தனது மாத்திரையில் குன்றாத இகரம் . |
முற்றியலுகரம் | தனது மாத்திரையிற் குறையாத உகரம் . |
முற்றியார் | முற்றுகைசெய்தவர் . |
முற்றியைபு | அடியின் எல்லாச் சீர்க்கண்ணும் இயைபு வரத் தொடுப்பது . |
முற்றில் | சிறுமுறம் ; விசாகநாள் ; வீட்டுள் முன்னிடம் ; சிப்பிவகை . |
முற்றிலும் | முழுதும் . |
முற்று | முழுமை ; முழுமையானது ; முதிர்ச்சி ; முடிவு ; வினைமுற்று ; காண்க : முற்றுகை . |
முற்றுகரம் | காண்க : முற்றியலுகரம் . |
முற்றுகை | கோட்டை முதலியவற்றை வளைக்கை ; சூழுகை ; நிறைவேற்றுகை ; நெருக்கடி . |
முற்றுச்சொல் | வினைமுற்றாகிய சொல் . |
முற்றுணர்வு | காண்க : முற்றுமுணர்தல் . |
முற்றுத்தொடை | அளவடி நான்கு சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது . |
முற்றுதல் | முதிர்தல் ; முழுவளர்ச்சி பெறுதல் ; முதுமையாதல் ; பெருகுதல் ; வைரங்கொள்ளுதல் ; தங்குதல் ; நிறைவேறுதல் ; முடிதல் ; இறத்தல் ; போலுதல் ; செய்துமுடித்தல் ; அழித்தல் ; சூழ்தல் ; வளைத்தல் ; அடைதல் ; மேற்கொள்ளுதல் ; தேர்தல் . |
முற்றுப்பெறுதல் | முடிவடைதல் . |
முற்றும் | எல்லாம் ; முழுதும் ; முடிவு . |
முற்றுமடக்கு | ஒரு செய்யுளின் முதலடி முழுதும் பின் முன்றடிகளாக மடங்கிவரும் சொல்லணி வகை . |
முற்றுமுணர்தல் | எல்லாம் அறியுந் தன்மை . |
முற்றுருவகம் | உறுப்பும் உறுப்பியும் முற்றும் உருவகஞ் செய்யப்படும் அணி . |
முற்றுவிடுத்தல் | முற்றுகை நீக்குவித்தல் . |
முற்றுவினை | வினைமுற்று . |
முற்றூட்டு | முழு உரிமையாக்கப்பட்ட இறையிலி நிலம் . |
முற்றெதுகை | எல்லாச் சீர்க்கண்ணும் எதுகை வரத் தொடுப்பது . |
முற்றை | முன்பு . |
முற்றொப்பு | முழுதுமொத்திருக்கை . |
முறக்கன்னன் | முறம்போன்ற காதுடையவனாகிய கணபதி . |
முறண்டு | காண்க : முரண்டு . |
முறம் | தானியம் முதலியவற்றைப் புடைக்க உதவுங் கருவி ; விசாகநாள் . |
முறமுறத்தல் | தூய்மையாயிருத்தல் ; முறுமுறுப்பாதல் . |
முறமுறப்பு | தூய்மை ; முறுமுறுப்பு . |
முறி | துண்டு ; பாதி ; பத்திரம் ; ஓலையில் எழுதிய பற்றுச்சீட்டு ; துணி ; முருட்டுத்துணி ; தளிர் ; கொழுந்திலை ; இலை ; சேரி ; அறை ; மூலையிடம் ; சூலைநோய்வகை ; உயர்ந்த வெண்கலம் . |
முறிக்கட்டி | உயர்ந்த வெண்கலம் . |
முறிக்கலைச்சுருக்கு | துறவியின் முக்கோலிற் சுருக்கிக் கட்டிய சிறுதுணி . |
முறிகரை | இடிந்த கரை . |
முறிகுளம் | கரை உடைந்த குளம் ; வடிகால் நீர் தேங்குங் குளம் ; பூராட நாள் . |
முறிச்சல் | முறிகை ; குறைவு . |
முறிச்சி | அடிமைப்பெண் . |
முறிச்சீட்டு | உடன்படிக்கைச் சீட்டு ; அடிமையோலை . |
முறிசெய்தல் | அடிமையாக்குதல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 898 | 899 | 900 | 901 | 902 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முற்பால் முதல் - முறிசெய்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, முழுதும், சீர்க்கண்ணும், வரத், தொடுப்பது, எல்லாச், முற்றுகை, தனது, வினைமுற்று, முன்பு, முடிவு, விசாகநாள், முற்றியலுகரம், முற்றுமுணர்தல், முற்றும், குளம், வெண்கலம், உயர்ந்த, எல்லாம், நெருக்கடி, முதலியவற்றை, முதிர்ச்சி, வெளியிடம், முடிதல், அடியின், முற்றிலும், முற்றத்துறத்தல், அறிவு, கோட்டை, குறையாத, மாத்திரையில், சொல், முற்றுதல்