முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » முள்ளெலும்பு முதல் - முற்பாடு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - முள்ளெலும்பு முதல் - முற்பாடு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| முள்ளெலும்பு | முள்ளந்தண்டின் எலும்பு ; முதுகெலும்பு . |
| முளரி | தாமரை ; பதுமம் என்னும் ஒரு பேரெண் ; பிரமலோகம் ; முட்செடி ; காடு ; முள்ளுள்ள கள்ளி ; விறகு ; சமிதை ; நெருப்பு ; கடைக்கொள்ளி ; காய்ச்சல் ; நுண்மை . |
| முளரிப்பகை | தாமரைக்குப் பகையாகிய சந்திரன் . |
| முளரிப்பாவை | காண்க : மலர்மகள் . |
| முளரியான் | காண்க : மலர்மிசையோன் . |
| முளவு | முள்ளம்பன்றி ; முட்கோல் . |
| முளா | முள்ளம்பன்றி ; செடிவகை . |
| முளி | உலர்ச்சி ; வாட்டம் ; வற்றிய பொருள் ; உடல்மூட்டு ; மரக்கணு ; கணுக்கால் ; மரவகை . |
| முளித்தல் | உலர்தல் ; வறளுதல் ; காய்தல் . |
| முளிதல் | வேதல் ; உலர்தல் ; கெடுதல் ; முற்றுதல் ; தோய்தல் . |
| முளை | வித்தினின்று வெளிவருவது ; இளமை ; மரக்கன்று ; காண்க : முளையான் ; மூங்கில் ; மகன் ; புண்முளை ; தண்டாயுதம் ; மூலமுளை ; குறுந்தறி ; திரிகையின் கைப்பிடி ; பிளப்பில் அடிக்க உதவும் கூருடைய சிறு மரத்துண்டு ; கதவு முதலியவற்றின் குடுமி ; முனை . |
| முளைக்கட்டுதல் | செம்மண்கொண்டு துவரையைப் பதப்படுத்துதல் . |
| முளைக்காற்கோதை | நெல்முளைகளால் தொடுக்கப்பட்ட மாலை . |
| முளைக்கீரை | ஒரு கீரைவகை . |
| முளைக்குச்சி | நுகத்திற் செருகுங் கோல் . |
| முளைக்குடம் | பாலிகைக்குடம் . |
| முளைக்கொட்டு | கரகமெடுத்தல் முதலிய விழா இறுதியில் மகளிர் பாலிகையை எடுத்துக் கொண்டுபோய் நீரில்விடுஞ் சடங்கு ; மகளிர் ஆடுங் கும்மிக்கூத்து வகை . |
| முளைக்கோல் | குத்தி நாட்டிய கோல் . |
| முளைகட்டல் | திருமணம் முதலியவற்றில் ஒன்பதுவகைக் கூலங்களைப் பாலிகைகளில் விதைக்கும் ஒரு நற்சடங்கு . |
| முளைகட்டுதல் | காண்க : முளைக்கட்டுதல் . |
| முளைத்தண்ணீர் | நெல்முளைக்குப் பாய்ச்சிய நீர் ; முளை கிளம்பியதும் வயலினின்று வடிக்கும் நீர் . |
| முளைத்தல் | முளை முதலியன தோன்றுதல் ; உதித்தல் . |
| முளைத்தாலி | கழுத்தணியிற் கோக்கும் முளை போன்ற பொன்னணிகலன் . |
| முளைத்தானியம் | ஒன்பதுவகைக் கூலம் ; நனைத்து முளையுண்டானபின் உலர்த்தி வறுத்த தானியம் . |
| முளைத்திங்கள் | பிறைச்சந்திரன் . |
| முளைதெளித்தல் | மங்கல நிகழ்ச்சிகளின்போது பாலிகைகளில் ஒன்பதுவகைக் கூலம் விதைத்தல் ; முளைத்த விதையை வயலில் இடுதல் . |
| முளைப்பாலிகை | மங்கல நிகழ்ச்சிகளில் ஒன்பது வகைத் தானியத்தை முளைக்கவைத்த மட்பாண்டம் . |
| முளையடித்தல் | முளையையடித்து உட்செலுத்துதல் ; ஆப்பறைதல் ; நாணயத்தில் முத்திரை பதித்தல் . |
| முளையரில் | மூங்கில்தூறு . |
| முளையாணி | கதவு நிற்கும் இரும்பு ; தாழ்ப்பாள் விழும் இரும்புக்கூடு . |
| முளையான் | சிறுகுழந்தை . |
| முற்கட்டு | பாட்டின் தொடக்கத்திலுள்ள எடுப்பு . |
| முற்கந்தெரித்தல் | பல்லிசொல்லுதல் ; நாவாற்கொட்டுதல் ; சம்மதமின்மைக் குறிப்பாகச் சத்தங்காட்டுதல் . |
| முற்கம் | பல்லிசெய்யும் ஒலி ; நாவாற்கொட்டும் ஒலி ; பச்சைப்பயறு ; அவரை , துவரை முதலியன . |
| முற்கரம் | ஒரு படைக்கலவகை ; பெரிய தடி ; சம்மட்டி . |
| முற்கரவன் | குபேரன் . |
| முற்கான்னம் | பருப்புச்சோறு . |
| முற்கு | எழுத்தாகா ஒலி , நாவாற் கொட்டும் ஒலி . |
| முற்குளம் | பூராடநாள் . |
| முற்கூறு | முற்பகுதி ; தொடக்கம் . |
| முற்கொழுங்கால் | பூரட்டாதிநாள் . |
| முற்சனி | மகநாள் . |
| முற்சீர் | காண்க : முதற்சீர் . |
| முற்பக்கம் | முன்பகுதி ; சாந்திரமான மாதத்தின் முற்பகுதியான வளர்பிறை . |
| முற்பகல் | பகற்பொழுதின் முற்பகுதி ; முன்னாள் ; முற்காலம் . |
| முற்படர்தல் | முன்னே செல்லுதல் ; மேம்படுதல் . |
| முற்படுதல் | முந்துதல் ; முன் அமைதல் ; எதிர்ப்படுதல் . |
| முற்பணம் | காண்க : முன்பணம் . |
| முற்பவம் | முற்பிறப்பு ; பழைய பாவம் ; முற்பிறப்பின் பாவம் ; இப்பிறவியில் முன்செய்த பாவம் . |
| முற்பனி | காண்க : முன்பனி . |
| முற்பா | நால்வகைப் பாவினுள் முதலாவதாகிய வெண்பா . |
| முற்பாடன் | முற்பட்டவன் . |
| முற்பாடு | முன்னிடுகை ; முன்னிடம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 897 | 898 | 899 | 900 | 901 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முள்ளெலும்பு முதல் - முற்பாடு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, முளை, ஒன்பதுவகைக், பாவம், நீர், முதலியன, மங்கல, முற்பகுதி, பாலிகைகளில், கூலம், மகளிர், உலர்தல், முள்ளம்பன்றி, முளையான், கதவு, முளைக்கட்டுதல், கோல்

