முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » முழுகிப்போதல் முதல் - முள்ளுமுருங்கை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - முழுகிப்போதல் முதல் - முள்ளுமுருங்கை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| முழுகிப்போதல் | அமிழ்தல் ; அடியோடு கெடுதல் ; சொத்து மீட்கமுடியாதபடி கடனுள் அமிழ்ந்துபோதல் . |
| முழுகுதல் | நீராடுதல் ; அழுந்தியிருத்தல் ; அமிழ்ந்துபோதல் ; மாதவிடாய் அடைதல் ; சொத்து மீட்கமுடியாமல் கடனுள் அமிழ்ந்து போதல் . |
| முழுங்குதல் | விழுங்குதல் . |
| முழுச்சோம்பேறி | அதிகச் சோம்பலுள்ளவன்(ள்) . |
| முழுசு | காண்க : முழுது . |
| முழுசுதல் | உட்புகுதல் ; நெருங்கிப்போதல் ; முட்டுதல் . |
| முழுத்த | முதிர்ச்சிபெற்ற ; முழுதும் . |
| முழுத்தம் | காண்க : முகூர்த்தம் . |
| முழுத்துதல் | காண்க : முழுத்துவித்தல் . |
| முழுத்தும் | காண்க : முழுதும் . |
| முழுத்துவித்தல் | அமிழ்த்தல் . |
| முழுத்தொகை | மொத்தம் ; வட்டியுடன்கூடிய தொகை . |
| முழுது | எல்லாம் ; முற்றும் . |
| முழுசும் | மிச்சமின்றி . |
| முழுதும்பாவம் | அபாவம் நான்கனுள் முழுதுமின்மை . |
| முழுதொருங்குணர்ந்தோன் | அருகன் ; கடவுள் ; சிவபிரான் . |
| முழுதோன் | கடவுள் . |
| முழுந்து | எல்லாம் . |
| முழுநாள் | ஒர் இராசிக்குள்ளேயே முழுதும் அமையும் நட்சத்திரம் . |
| முழுநெறி | இதழொடிக்கப்படாத முழுப் பூ ; புறவிதழொடிக்கப்பட்ட முழுப் பூ . |
| முழுநோக்கு | ஒரு கோள் முழுப் பலத்தோடு நோக்குகை . |
| முழுப்பங்கு | நிலத்துரிமையில் உட்பிரிவில்லாத தனிப் பங்கு . |
| முழுப்புளுகன் | பெரும்பொய்யன் . |
| முழுப்பொய் | பெரும்பொய் . |
| முழுப்பொருள் | கடவுள் . |
| முழுமக்கள் | அறிவிலார் . |
| முழுமகன் | அறிவிலான் . |
| முழுமணி | துளையிடாத மணி ; குற்றமற்ற இரத்தினம் . |
| முழுமதி | நிறைநிலா . |
| முழுமன் | அறிவிலான் ; அரைக்கும்போது சிதையாது விழும் முழுத் தானியம் . |
| முழுமனை | 2400 சதுரஅடிகொண்ட நிலப்பகுதி . |
| முழுமுதல் | கடவுள் ; அடிமரம் . |
| முழுமுற்றும் | காண்க : முழுதும் . |
| முழுமூச்சு | விடாத் தீர்மானம் ; மூச்சுத் திணறுகை ; முழுவலுவுடன் செய்யும் முயற்சி . |
| முழுமை | எல்லாம் ; பருமை . |
| முழுவதும் | முழுமையும் . |
| முழுவல் | நீர்ப்பறவைவகை ; விடாது தொடர்ந்த அன்பு . |
| முழுவலயம் | முழுவட்டம் ; வெற்றி . |
| முழுவலி | நிறைந்த வலிமை ; முழுவலுவுடையவர் . |
| முழுவாசி | முழுமை ; முற்றின நென்மணி ; பெரும்பகுதியும் . |
| முழுவுதல் | முத்தமிடுதல் . |
| முழுவென்பு | எலும்புக்கூடு . |
| முழை | மலைக்குகை ; துடுப்பு . |
| மு¬ழுஞ்சு | மலைக்குகை ; துளை . |
| முழைத்தல் | துளைத்தல் ; எழுத்தில்லாவோசை ; எழுத்தில்லா மொழி . |
| முழைதல் | நுழைதல் . |
| முள் | மரஞ்செடிகளில் கூர்மையுடையதாய்ச் சிறுகுச்சிபோற் காணப்படும் பகுதி ; குத்தக்கூடிய கூர்மையுடைய பொருள் ; தாற்றுக்கோல் ; கடிவாளம் ; இறகினடி ; முள்வடிவாகச் செய்யப்பட்ட கருவி ; துலாக்கோலின் நடுவில் சமனிலையைக் காட்டும் ஊசி ; கடிகாரத்தில் காலத்தைக் காட்டும் ஊசி ; கூர்மை ; நுண்மை ; புறாவின் ஆண்குறி . |
| முள்காத்தல் | குந்தியிருத்தல் . |
| முள்குதல் | முயங்குதல் ; உட்செல்லுதல் . |
| முள்மகிழ் | ஒரு மரவகை . |
| முள்முருங்கை | ஒரு மரவகை . |
| முள்வறையன் | மரத்தை அரிக்கும் கறையான் . |
| முள்வாங்கி | முள்ளெடுக்குங் கருவி . |
| முள்வாயன் | ஒரு மரவகை . |
| முள்வேலி | முள்ளாலான அடைப்பு ; முட்களையுடைய இரும்புக்கம்பியாலான வேலி . |
| முள்ளங்கி | செடிவகை . |
| முள்ளடிக்கூலி | துப்பறிவதற்கரிய கூலி . |
| முள்ளந்தண்டு | முதுகிலுள்ள நடு எலும்பு . |
| முள்ளந்தண்டுக்கொடி | முள்ளந்தண்டிற்குள் அமைந்த நரம்புச்சவ்வு . |
| முள்ளம்பன்றி | முள் அடர்ந்துள்ள பன்றிவகை . |
| முள்ளி | முட்செடிவகை ; கத்தரிவகை ; மருதோன்றி ; காண்க : தாழை ; கள் ; வற்றிய பொருள் . |
| முள்ளிப்பூ | வரிக்கூத்துவகை . |
| முள்ளிலவம் | இலவுவகை . |
| முள்ளிலவு | இலவுவகை . |
| முள்ளுப்போடுதல் | இடையூறு செய்தல் ; முள்வேலிபோடுதல் . |
| முள்ளுமுருங்கை | காண்க : முள்முருங்கை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 896 | 897 | 898 | 899 | 900 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முழுகிப்போதல் முதல் - முள்ளுமுருங்கை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, முழுதும், கடவுள், எல்லாம், மரவகை, முழுப், கருவி, பொருள், காட்டும், கடனுள், இலவுவகை, முள்முருங்கை, முள், மலைக்குகை, அமிழ்ந்துபோதல், முழுது, சொத்து, அறிவிலான், முழுமை, முழுத்துவித்தல்

