முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » முருந்து முதல் - முழுகிக்கிடத்தல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - முருந்து முதல் - முழுகிக்கிடத்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| முருந்து | இறகின் அடிக்குருத்து ; மயிலிறகின் அடிக்குருத்து ; தென்னை முதலியவற்றின் அடி வெண்குருத்து ; கொழுந்து ; இளந்தளிர் ; வேரின் மேல்தண்டு ; குருத்தெலும்பு ; எலும்பு ; வெண்மை ; முத்து ; பூவின் தாள் . |
| முரைசு | காண்க : முரசு . |
| முல்லை | ஒரு பூக்கொடிவகை ; காட்டுமல்லிகைச் செடி ; காண்க : ஊசிமல்லிகை ; காடும் காடு சார்ந்த இடமும் ; முல்லைநிலப் பண்வகை ; சாதாரிப்பண் ; உரிப்பொருளில் ஒன்றாகிய இருத்தல் ; கற்பு ; சிறப்பியல்பு ; வெற்றி ; முல்லைப்பாட்டு ; முல்லைக்குழல் . |
| முல்லைக்காரன் | குத்தகைக்காரன் ; பண்ணை வேலை பார்ப்பவன் . |
| முல்லைக்குழல் | முல்லைக்கொடியால் அமைத்த வளையத்தை வாயினிடத்தே செறித்த இசைக்குழல் . |
| முல்லைச்சூட்டு | கற்பிற்கறிகுறியாகத் தலையில் அணியும் முல்லைப்பூவாலாகிய மாலை . |
| முல்லையர் | முல்லைநில மக்கள் . |
| முல்லையாழ்த்திறம் | செவ்வழிப்பண்ணினம் . |
| முல்லையாளர் | காண்க : முல்லையர் . |
| முலாம் | பொன்வெள்ளிப் பூச்சு . |
| முலை | கொங்கை , தனம் ; பாலூட்டு இனங்களின் உடலில் பாலுண்டாகும் இடம் . |
| முலைக்கச்சு | இரவிக்கை . |
| முலைக்கடுப்பு | பால் அதிகம் தங்குவதால் தனத்தில் உண்டாகும் வலி . |
| முலைக்கண் | முலையின் நுனிப்பகுதி . |
| முலைக்காம்பு | முலையின் நுனிப்பகுதி . |
| முலைக்கால் | முலை ; ஆட்டுக்கல் . |
| முலைக்கோள் | முலைப்பால் உண்ணுகை . |
| முலைத்தாய் | ஐவகைத் தாயருள் குழந்தைக்குப் பால்கொடுப்பவள் . |
| முலைப்பால் | தாய்ப்பால் . |
| முலைமுகம் | காண்க : முலைக்காம்பு ; மு¬ . |
| முலைவிலை | மணமகன் மணமகளுக்காகக் கொடுக்கும் பரிசப்பணம் . |
| முலைவெடிப்பு | முலைக்காம்பு புண்படுகை . |
| முழக்கம் | பேரொலி ; ஆரவாரம் . |
| முழக்கு | ஒலி . |
| முழக்குதல் | ஒலிப்பித்தல் ; விளம்பரம் பெறச் செய்தல் . |
| முழக்கோல் | அளவுகோல் ; எட்டு முழங்கொண்ட அளவுகோல் . |
| முழங்கால் | முழங்கால் மூட்டுக்கும் கணுக்காலுக்கும் இடையிலுள்ள உறுப்பு ; தொடையும் காலும் சேருமிடம் . |
| முழங்கால்சிப்பி | காலையும் தொடையையும் சேர்க்கும் எலும்புப்பூட்டின் மேற்பாகம் . |
| முழங்கால்சில் | காலையும் தொடையையும் சேர்க்கும் எலும்புப்பூட்டின் மேற்பாகம் . |
| முழங்கால்வாதம் | கீல்பிடிப்பு . |
| முழங்குதல் | பெரிதொலித்தல் ; பலருமறியக் கூறப்படுதல் . |
| முழங்கை | கையில் மணிக்கட்டுக்கும் தோளுக்கும் இடையிலுள்ள பாகம் ; கையின் மேற்பாகமும் அதன் கீழ்ப்பாகமும் கூடுமிடம் . |
| முழந்தாள் | காண்க : முழங்கால் . |
| முழந்து | காண்க : முழங்கால் . |
| முழம் | இருசாண் கொண்டதான முழங்கை நீள அளவு . |
| முழம்போடுதல் | கையால் முழவளவாக அளத்தல் ; ஆழம்பார்த்தல ; பொருந்தாப் பொய்பேசுதல் . |
| முழல் | கழற்சிக்கொடி . |
| முழவம் | முரசு ; குடமுழா . |
| முழவு | மத்தளம் ; காண்க : முழவம் ; பால் கறத்தற்குரிய பாண்டம் ; பாண்டம் முதலியன வார்ப்பதற்குரிய கரு . |
| முழவுக்கனி | பலாப்பழம் . |
| முழவுமண் | கருக்கட்டுங் களிமண் ; இனிது ஒலிக்க முழவில் வாய்ப்பூச்சிடும் கரிய சாந்து . |
| முழவுமேளம் | பறைவகை ; முழவு முதலிய கருவிகளின் கூட்டம் . |
| முழா | முரசு ; குடமுழா ; தம்பட்டம் . |
| முழாசு | சுடர் . |
| முழால் | தழுவுகை . |
| முழாள் | வயதுவந்த வேலையாள் . |
| முழி | விழி ; எலும்புப்பூட்டு . |
| முழித்தல் | விழித்தல் . |
| முழிதல் | உமிழ்தல் . |
| முழு | எல்லாம் ; பருத்த . |
| முழுக்க | முழுதும் . |
| முழுக்காட்டுதல் | நீராட்டுவித்தல் . |
| முழுக்காடுதல் | நீராடுதல் . |
| முழுக்காப்பு | ஆலயங்களில் தெய்வத்திருமேனி மீது சந்தனம் அப்பி அலங்கரிக்குஞ் சடங்கு . |
| முழுக்காளி | முத்துக்குளிப்பவன் ; ஒருவன் இறந்தால் அவன்பொருட்டு நீராடவேண்டிய நெருங்கிய உறவினன் . |
| முழுக்கு | நீராடல் ; மாதவிடாய் . |
| முழுக்குதல் | அமிழ்த்துதல் . |
| முழுக்குழவி | முதுகன்று . |
| முழுக | முழுவதும் . |
| முழுகாமலிருத்தல் | கருவுறல் . |
| முழுகிக்கிடத்தல் | முழவதும் முடங்கிக்கிடத்தல் ; ஈடுபட்டிருத்தல் ; நீரிலாழ்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 895 | 896 | 897 | 898 | 899 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முருந்து முதல் - முழுகிக்கிடத்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, முழங்கால், முலைக்காம்பு, முரசு, எலும்புப்பூட்டின், தொடையையும், மேற்பாகம், சேர்க்கும், முழவம், பாண்டம், முழவு, குடமுழா, காலையும், முழங்கை, அளவுகோல், முலை, முல்லையர், முல்லைக்குழல், பால், முலையின், அடிக்குருத்து, முலைப்பால், நுனிப்பகுதி, இடையிலுள்ள

