தமிழ் - தமிழ் அகரமுதலி - ஆர்கதி முதல் - ஆரம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஆரணி | மாகாளி ; பார்வதி ; சிவசத்திபேதம் ; ஓர் ஊர் . |
| ஆரணியகன் | காட்டில் வாழ்வோன் . |
| ஆரணியசஷ்டி | மகப்பேற்றுக்காகப் பெண்டிர் ஆடிமாத வளர்பிறையில் நோற்கும் ஒரு நோன்பு . |
| ஆரத்தி | ஆலத்தி ; தீபாராதனை . |
| ஆரதக்கறி | மரக்கறி . |
| ஆரதம் | சைவ உணவு . |
| ஆரதி | காண்க : ஆரத்தி ; ஆலத்திப்பாட்டு . |
| ஆரதிகர்ப்பூரம் | கருப்பூரவகை . |
| ஆரநாளம் | காடி . |
| ஆரபடி | பொருள் பொருளாக வீரன் தலைவனாக வரும் நாடக விருத்தி . |
| ஆரபி | ஒரு பண் . |
| ஆரம் | சந்தனமரம் ; ஒருவகை மணப்பொருள் ; சந்தனக்குழம்பு ; காண்க : கடம்பு ; தோட்டம் ; அஞ்சன பாடாணம் ; காண்க : காட்டாத்தி , ஆரக்கால் ; பித்தளை ; மணிவடம் ; பூமாலை ; முத்து ; பதக்கம் ; அணிகலன் ; பறவைக்கழுத்துவரி ; ஆடுமாடுகளின் கழுத்தில் தொங்கும் தசை ; காளிதம் ; கோணம் ; சனி ; செவ்வாய் . |
| ஆர்கதி | திப்பிலி . |
| ஆர்கலி | கடல் ; மழை ; வெள்ளம் ; திப்பி . |
| ஆர்கோதம் | காண்க : சரக்கொன்றை . |
| ஆர்ச்சவம் | ஒத்த நோக்கம் . |
| ஆர்ச்சனம் | பொருளீட்டுகை ; அருச்சிக்கை . |
| ஆர்ச்சனை | பொருளீட்டுகை ; அருச்சிக்கை . |
| ஆர்ச்சி | ஆத்தி . |
| ஆர்ச்சித்தல் | காண்க : ஆர்ச்சனம் . |
| ஆர்ச்சிதம் | சம்பாத்தியம் ; கைப்பற்றப்பட்டது . |
| ஆர்த்தபம் | மகளிர் பூப்படைதல் ; மகளிர் தீட்டு . |
| ஆர்த்தவம் | மகளிர் பூப்படைதல் ; மகளிர் தீட்டு . |
| ஆர்த்தம் | துன்பம் அடைந்தது . |
| ஆர்த்தர் | எளியவர் ; நோயுற்றோர் ; பெரியோர் . |
| ஆர்த்தல் | ஒலித்தல் ; போர்புரிதல் ; தட்டுதல் ; அலர்தூற்றுதல் ; கட்டுதல் ; பூணுதல் ; மறைத்தல் ; மின்னுதல் . |
| ஆர்த்தன் | நோயுற்றோன் ; துன்புறுவோன் ; சான்றோன் . |
| ஆர்த்தார்க்கோன் | சோழன் . |
| ஆர்த்தி | வேதனை ; வில்லின் நுனி ; ஆர்வம் ; சிவசத்தியுள் ஒன்று . |
| ஆர்த்திகை | துன்பம் . |
| ஆர்த்தியம் | காட்டுத் தேன் . |
| ஆர்த்திரகம் | இஞ்சி . |
| ஆர்த்திராதரிசனம் | மார்கழித் திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் இறைவனைக் காணும் காட்சி . |
| ஆருத்திராதரிசனம் | மார்கழித் திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் இறைவனைக் காணும் காட்சி . |
| ஆர்த்திரை | திருவாதிரை . |
| ஆர்த்துதல் | ஊட்டுதல் ; நிறைவித்தல் ; நுகர்வித்தல் ; கொடுத்தல் . |
| ஆர்த்துபம் | பேரரத்தை . |
| ஆர்த்துவம் | பேரரத்தை . |
| ஆர்தல் | நிறைதல் ; பரவுதல் ; பொருந்துதல் ; தங்குதல் ; உண்ணுதல் ; துய்த்தல் ; ஒத்தல் ; அணிதல் ; பெறுதல் . |
| ஆர்ப்பரவம் | ஆரவாரம் ; போர் . |
| ஆர்ப்பரித்தல் | ஆரவாரித்தல் . |
| ஆர்ப்பரிப்பு | ஆரவாரம் . |
| ஆர்ப்பாட்டம் | ஆரவாரம் ; வீண்பேச்சு . |
| ஆர்ப்பு | பேரொலி ; சிரிப்பு ; மகிழ்ச்சி ; போர் ; மாத்திரை கடந்த சுருதி ; கட்டு ; தைத்த முள்ளின் ஒடிந்த கூர் . |
| ஆர்பதம் | வண்டு ; உணவு ; நிழல் ; அரத்தை . |
| ஆர்பதன் | உணவு . |
| ஆர்மதி | கற்கடக ராசி ; நண்டு . |
| ஆர்மை | கூர்மை ; மதில் . |
| ஆர்வம் | அன்பு ; விருப்பு ; நெஞ்சு கருதின பொருள்கள்மேல் தோன்றும் பற்றுள்ளம் ; பக்தி ; ஏழு நரகத்துள் ஒன்று . |
| ஆர்வமொழி | உள்ளத்து நிகழும் அன்பை மிகுதியாக வெளிப்படுத்தும் ஓரலங்காரம் . |
| ஆர்வலன் | அன்புடையவன் ; கணவன் ; பரிசிலன் . |
| ஆர்வலித்தல் | அன்புகூர்தல் . |
| ஆர்வு | நிறைவு ; உண்ணுகை ; ஆசை . |
| ஆர்வை | கோரைப்பாய் . |
| ஆர | ஓர் உவமச்சொல் ; மிக . |
| ஆரக்கம் | செஞ்சந்தனம் ; அகில் . |
| ஆரக்கழுத்தி | கழுத்தில் தீயரேகையுள்ள பெண் . |
| ஆரக்கால் | சக்கரத்தின் ஆரம் . |
| ஆரக்குவதம் | சரக்கொன்றை . |
| ஆரகந்தி | திப்பிலி . |
| ஆரகம் | வகுக்குமெண் ; குருதி . |
| ஆரகன் | அழிப்போன் ; கள்வன் ; கபடன் . |
| ஆரகுடம் | பித்தளை . |
| ஆரகூடம் | பித்தளை . |
| ஆரகோதம் | காண்க : சரக்கொன்றை . |
| ஆரசகம் | அகில்மரம் . |
| ஆரங்கம்பாக்கு | பாக்குவகை . |
| ஆரஞ்சு | கிச்சிலி . |
| ஆரண்ணியகம் | வேதத்தின் ஒரு பகுதி . |
| ஆரணங்கு | தெய்வப்பெண் ; பேரழகி . |
| ஆரணத்தான் | வேதங்களை அருளிய பிரமன் . |
| ஆரணம் | காண்க : ஆரண்ணியகம் ; வேதம் . |
| ஆரணவாணன் | அந்தணன் . |
| ஆரணவுருவன் | சிவபெருமான் . |
| ஆரணன் | பிரமன் ; சிவன் ; திருமால் ; பார்ப்பான் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 87 | 88 | 89 | 90 | 91 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆர்கதி முதல் - ஆரம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மகளிர், ஆரவாரம், பித்தளை, திருவாதிரை, சரக்கொன்றை, உணவு, இறைவனைக், சிதம்பரத்தில், நாளில், பிரமன், காணும், ஆரண்ணியகம், மார்கழித், பேரரத்தை, காட்சி, போர், தீட்டு, திப்பிலி, ஆர்ச்சனம், கழுத்தில், ஆரக்கால், ஆரம், பொருளீட்டுகை, அருச்சிக்கை, ஆர்வம், துன்பம், ஆரத்தி, பூப்படைதல், ஒன்று

