தமிழ் - தமிழ் அகரமுதலி - ஆமின் முதல் - ஆயர்பாடி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஆய்ச்சி | தாய் ; பாட்டி ; பெண் ; இடைச்சி . |
| ஆய்ஞன் | ஆராய்பவன் . |
| ஆய்த்தி | காண்க : ஆய்ச்சி . |
| ஆய்த்து | ஆயிற்று . |
| ஆய்தக்குறுக்கம் | மாத்திரை குறுகிய ஆய்தம் . |
| ஆய்தப்புள்ளி | ஆய்தவெழுத்து . |
| ஆய்தம் | மூன்று புள்ளி (ஃ) வடிவினதாகிய ஓரெழுத்து , சார்பெழுத்துகளுள் ஒன்று . |
| ஆய்தல் | நுணுகுதல் ; வருந்துதல் ; அழகமைதல் ; அசைதல் ; சோதனை செய்தல் ; பிரித்தெடுத்தல் ; ஆலோசித்தல் ; தெரிந்தெடுத்தல் ; கொண்டாடுதல் ; கொய்தல் ; காம்பு களைதல் ; குத்துதல் . |
| ஆய்தூவி | சூட்டுமயிர் ; தலைமேலுள்ள மெல்லிய இறகு . |
| ஆய்ந்தோர் | அறிஞர் ; புலவர் ; பார்ப்பார் . |
| ஆய்ப்பாடி | காண்க : ஆயர்பாடி . |
| ஆய்ப்பு | ஒடுங்குகை . |
| ஆய்மலர் | தாமரை . |
| ஆய்மா | காண்க : ஆவிமா ; சாரப்பருப்பு . |
| ஆய்மை | ஆராயுந்தன்மை ; நுண்ணிய பொருள் . |
| ஆய்வரல் | ஆராய்தல் ; கூடிவருதல் . |
| ஆய்வருதல் | ஆராய்தல் ; கூடிவருதல் . |
| ஆய்வாளர் | ஆராய்ச்சியாளர் . |
| ஆய்வு | ஆராய்கை ; அகலம் ; வருத்தம் ; நுணுக்கம் . |
| ஆய்வை | துயிலிடம் . |
| ஆயக்கசுரம் | முறைக்காய்ச்சல் . |
| ஆயக்கட்டு | குளப்புரவு ; ஊரின் மொத்த நிலவளவுக் கணக்கு ; பொய்ம்மொழி . |
| ஆயக்கட்டுமானியம் | அரசாங்கச் சட்டத்தின் படி (சாசனப்படி) ரொக்கமாக வசூலிக்கும் பணம் . |
| ஆயக்கர் | ஊர்ப்பணியாளருள் ஒருவகையார் . |
| ஆயக்கல் | காரக்கல் . |
| ஆயக்காரன் | சுங்கம் முதலிய வரிவாங்குவோன் . |
| ஆயக்காரி | பொதுமக்கள் . |
| ஆயக்கால் | வாகனத்தைத் தாங்கும் முட்டுக்கால் ; முட்டுக்கட்டை ; சிவிகைதாங்கி . |
| ஆயக்கோல் | வாகனத்தைத் தாங்கும் முட்டுக்கால் ; முட்டுக்கட்டை ; சிவிகைதாங்கி . |
| ஆயச்சாவடி | சுங்கத்துறை . |
| ஆயசம் | இருப்பாயுதம் ; இரும்புச்சட்டை ; இரும்பினாற் செய்யப்பட்டது . |
| ஆயசூரி | கடுகு . |
| ஆயத்தம் | முன்னேற்பாடு ; அணியம் , சித்தம் ; போருக்குத் தயார் ; கூர்மை ; கோபம் ; தள்ளுகை ; இசைக்கிளையில் ஒன்று . |
| ஆயத்தலம் | மறைவிடம் ; காண்க : ஆயத்துறை . |
| ஆயத்தார் | தோழியர் கூட்டம் ; |
| ஆயத்தி | நாள் ; எல்லை ; அன்பு ; வலி ; யாவரையும் தன்வயப்படுத்தி நிற்குந் தன்மை . |
| ஆயத்துறை | சுங்கச்சாவடி . |
| ஆயதம் | நீளம் ; அகலம் குறைந்து நீளமாயிருக்கும் வடிவம் ; அளவிற்பெருமை . |
| ஆயதனம் | ஆலயம் ; இடம் ; வீடு . |
| ஆயதி | வருங்காலம் ; நீட்சி ; பெருமை ; பொருந்துகை . |
| ஆயந்தி | அண்ணன் மனைவி . |
| ஆயந்தீர்த்தல் | வரி செலுத்துதல் . |
| ஆயப்பாலை | பாலைப்பண்வகை . |
| ஆயம் | கமுக்கம் ; தோழியர் கூட்டம் ; வருத்தம் ; மேகம் ; மல்லரிப்பறை ; 34 அங்குல ஆழமுள்ள குழி ; வருவாய் ; குடியிறை ; கடமை ; சூதுகருவி ; கவற்றிற்றாயம் ; சூதாட்டம் ; பசுத்திரள் ; நீளம் ; மக்கள் தொகுதி ; பொன் . |
| ஆயமானம் | உயிர்நிலை ; இரகசியம் . |
| ஆயமுற்கரவலன் | குபேரன் . |
| ஆயமுற்கரவன் | குபேரன் . |
| ஆயமேரை | ஊர்ப்பணியாளர்களுக்குக் கொடுக்கும் தானியப் பகுதி . |
| ஆயர்பாடி | இடைச்சேரி . |
| ஆமின் | காண்க : அமீன் . |
| ஆமுகம் | தொடக்கம் . |
| ஆமுகர் | நந்திதேவர் . |
| ஆமென் | அப்படியே ஆகுக . |
| ஆமேற்பல்லூரி | கோரோசனை . |
| ஆமை | கூர்மம் ; ஓர் உயிரினம் ; ஒரு நோய் ; மணம் . |
| ஆமைத்தாலி | ஆமை வடிவுள்ள தாலி . |
| ஆமைதவழி | ஆமை சஞ்சரித்தலால் ஆகாதென்று விலக்கிய நிலம் . |
| ஆமைப்பலகை | ஆமை உரு அமைத்த மணை . |
| ஆமைப்பூட்டு | பூட்டுவகை . |
| ஆமைமடி | பால் நிரம்பச்சுரக்கும் சிறுமடி . |
| ஆமையாழ் | செவ்வழி யாழ்வகை . |
| ஆமையோட்டுக்கட்டி | பெரும் புண்கட்டி . |
| ஆமையோடு | ஆமையின் முதுகோடு . |
| ஆமோசனம் | கட்டுதல் ; ஒளிவீசுதல் ; விடுதலை செய்தல் . |
| ஆமோதம் | மகிழ்ச்சி ; மிகுமணம் . |
| ஆமோதனம் | எடுத்து மொழிந்ததற்கு உட்படுகை , முன்மொழிந்ததற்கு உட்படுகை . |
| ஆமோதித்தல் | உடன்பட்டதைத் தெரிவித்தல் . |
| ஆய் | அழகு ; நுண்மை ; சிறுமை ; மென்மை ; வருத்தம் ; இடைச்சாதி ; தாய் ; கடைவள்ளல்களுள் ஒருவன் ; மலம் ; பொன் ; அருவருப்புக்குறிப்பு ; முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி ; ஏவலொருமை விகுதி ; ஆக ; ஒரு விளியுருபு . |
| ஆய்க்குடி | இடைச்சேரி . |
| ஆய்க்குழல் | புல்லாங்குழல் . |
| ஆயக்குழல் | புல்லாங்குழல் . |
| ஆய்ச்சல் | வேகம் ; முறை ; பாட்டம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 85 | 86 | 87 | 88 | 89 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆமின் முதல் - ஆயர்பாடி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வருத்தம், கூட்டம், தோழியர், ஆயத்துறை, சிவிகைதாங்கி, நீளம், குபேரன், விகுதி, புல்லாங்குழல், உட்படுகை, இடைச்சேரி, முட்டுக்கட்டை, பொன், தாங்கும், செய்தல், ஒன்று, ஆய்தம், தாய், ஆயர்பாடி, ஆராய்தல், ஆய்ச்சி, வாகனத்தைத், அகலம், கூடிவருதல், முட்டுக்கால்

