தமிழ் - தமிழ் அகரமுதலி - ஆருகதம் முதல் - ஆலவன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஆரோபித்தல் | ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் . |
| ஆரோபிதம் | ஏற்றப்பட்டது ; கற்பிக்கப்பட்ட குற்றம் |
| ஆல் | அகற்சட்டி ; மரவகை ; நீர் ; வெள்ளம் ; கார்த்திகை ; நஞ்சு ; ஆமெனல் ; வியப்பு ; இரக்கம் ; தேற்றம் இவற்றைக் குறிக்கும் இடைச்சொல் ; ஓர் அசைநிலை ; மூன்றாம் வேற்றுமையுருபு ; தொழிற்பெயர் விகுதி ; எதிர்மறை வியங்கோள் விகுதி ; எதிர்கால வினையெச்ச விகுதி . |
| ஆல்வாட்டுதல் | சிறிது காயச்செய்தல் . |
| ஆலவாட்டுதல் | சிறிது காயச்செய்தல் . |
| ஆல்வு | அகன்றது . |
| ஆலக்கச்சி | அரிதாரம் . |
| ஆலக்கட்டி | துரிசு . |
| ஆலக்கரண்டி | அகன்ற கரண்டி . |
| ஆலக்கொடிச்சி | காண்க : ஆலக்கச்சி . |
| ஆலகண்டன் | கழுத்தில் நஞ்சுகொண்ட சிவன் . |
| ஆலகம் | காண்க : ஆமலகம் . |
| ஆலகாலம் | பாற்கடலில் தோன்றிய நஞ்சு ; நிலவாகை . |
| ஆலகாலி | காளி . |
| ஆலகிரீடை | காண்க : அலரி . |
| ஆலங்கட்டி | கல்மழை . |
| ஆலாங்கட்டி | கல்மழை . |
| ஆலங்காட்டாண்டி | வரிக்கூத்துவகை . |
| ஆலச்சுவர் | சார்புசுவர் ; ஆள்மட்டச் சுவர் . |
| ஆலசம் | சோம்பு . |
| ஆலசியம் | சோம்பு ; தாமதம் ; கவனக்குறைவு . |
| ஆலத்தி | காண்க : ஆரத்தி . |
| ஆலத்தியெடுத்தல் | ஆலத்தி சுற்றுதல் . |
| ஆலத்திவழித்தல் | ஆலத்தி சுற்றுதல் . |
| ஆலதரன் | நஞ்சைக் கழுத்தில் தாங்கியிருபப்வனான சிவன் . |
| ஆலந்தை | ஒரு சிறுமரம் . |
| ஆலம் | நீர் ; கடல் ; மழை ; மரவகை ; ஆகாயம் ; அகலம் ; மலர் ; கலப்பை ; நஞ்சு ; கருமை ; உலகம் ; புன்கு ; மாவிலங்கம் ; ஈயம் ; துரிசு |
| ஆலம்பம் | பற்றுக்கோடு ; தொடுகை ; கொல்லுகை . |
| ஆலம்பனம் | பற்றுக்கோடு ; தொடுகை ; கொல்லுகை . |
| ஆலம்பலிகிதம் | எழுத்துக்கூட்டிலக்கணம் . |
| ஆலம்பி | அரிதாரம் . |
| ஆலமர்கடவுள் | கல்லால மரத்தின்கீழ் தென்முகக் கடவுளாய் வீற்றிரூக்கும் சிவன் . |
| ஆலமர்செல்வன் | கல்லால மரத்தின்கீழ் தென்முகக் கடவுளாய் வீற்றிரூக்கும் சிவன் . |
| ஆலமரம் | மரவகை . |
| ஆலமுடையோன் | துரிசு . |
| ஆலமுண்டோன் | பாற்கடலில் தோன்றிய நஞ்சையுண்டவனாகிய சிவன் . |
| ஆலயம் | தேவாலயம் ; தங்குமிடம் ; நகரம் ; யானைக்கூடம் . |
| ஆலயவிஞ்ஞானம் | சாகும்வரை நிற்கும் உணர்ச்சி . |
| ஆவல் | ஒலி ; மயிற்குரல் . |
| ஆலலம் | திருமணத்தின்போது மணமகன் மணமகட்குக்கொடுக்கும் கூறைப் புடைவை . |
| ஆலவட்டம் | பெருவிசிறி ; விசிறி . |
| ஆலவன் | ஆலிலையில் பள்ளிகொள்ளும் திருமால் ; கடலில் தோன்றிய சந்திரன் . |
| ஆருகதம் | சமணமதம் ; நாவல்மரம் . |
| ஆருகதன் | சமணன் . |
| ஆருத்திரை | திருவாதிரை . |
| ஆருப்பியம் | வங்கமணல் . |
| ஆருபதம் | பித்தளை . |
| ஆருயிர் மருந்து | உணவு . |
| ஆருவம் | நீர் . |
| ஆருழலைப்படுதல் | வெப்பத்தால் தகிக்கப்படுதல் ; நீர்வேட்கையால் வருந்துதல் . |
| ஆரூடம் | ஏறியது ; கேட்பானது இராசிநிலை கொண்டு நினைத்த காரியம் கூறும் சோதிடம் . |
| ஆரூடன் | ஊர்தி முதலியவற்றில் ஏறினவன் ; சீவன்முத்தன் . |
| ஆரூபம் | ஒவ்வாமை ; நீங்காமை . |
| ஆரூர் | திருவாரூர் . |
| ஆரூர்க்கால் | கருப்பூரவகை . |
| ஆரூரன் | சுந்தரமூர்த்தி நாயனார் . |
| ஆரேவதம் | காண்க : சரக்கொன்றை . |
| ஆரை | நீராரை ; காண்க : ஆத்தி ; கோட்டை மதில் ; புற்பாய் ; அச்சுமரம் ; தோல் வெட்டும் உளி ; ஆரக்கால் . |
| ஆரைக்காலி | கோரைவகை . |
| ஆரைக்கீரை | நீராரைக் கீரை . |
| ஆரைபற்றி | உடும்பு . |
| ஆரொட்டி | கூவைக்கிழங்கு . |
| ஆரோக்கியசாலை | மருத்துவவிடுதி ; மருத்துவமனை . |
| ஆரோக்கியம் | நோயின்மை ; நலம் . |
| ஆரோகணம் | ஏறுகை ; கமகம் பத்தனுள் ஒன்று ; கற்படி ; தாழ்வாரம் ; வெளிப்போகை ; முன்வாயில் ; ஏணி . |
| ஆரோகணித்தல் | எழும்புதல் ; ஏறுதல் . |
| ஆரோகம் | வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று ; ஏறுகை ; உயர்ச்சி ; நீட்சி ; நிதம்பம் ; முளை . |
| ஆரோகி | இசையின் வர்ணபேதங்களுள் ஒன்று . |
| ஆரோசை | ஏற்றிப் பாடும் இசை . |
| ஆரோணம் | மீக்கோள் . |
| ஆரோதமடித்தல் | அருளால் கொடுஞ்செயலினின்றும் மனநெகிழ்தல் |
| ஆரோபணம் | ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் . |
| ஆரோபம் | ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 89 | 90 | 91 | 92 | 93 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆருகதம் முதல் - ஆலவன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சிவன், ஒன்று, தோன்றிய, ஆலத்தி, துரிசு, ஒன்றன், நஞ்சு, விகுதி, ஏற்றிக், தன்மையை, மற்றொன்றன், நீர், கூறுதல், மேல், மரவகை, மரத்தின்கீழ், கல்லால, கொல்லுகை, ஏறுகை, தொடுகை, வீற்றிரூக்கும், கடவுளாய், தென்முகக், கழுத்தில், ஆலக்கச்சி, காயச்செய்தல், சிறிது, அரிதாரம், பாற்கடலில், சுற்றுதல், சோம்பு, கல்மழை, பற்றுக்கோடு

