தமிழ் - தமிழ் அகரமுதலி - ஆரம்பக்கொசு முதல் - ஆரீதம் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
ஆரிடம் | வழுக்குநிலம் ; முனிவர் சம்பந்தமானது ; ஆவையும் காளையையும் அலங்கரித்து அவற்றிடையே மணமக்களை நிறுத்தி நீர்வார்த்துக் கொடுக்கும் மணம் ; ஆவும் ஆனேறும் பரிசமாகப் பெற்றுக்கொண்டு கன்னியைத் தீமுன்னர்க் கொடுக்கும் மணம் ; முனிவர் அருளிய நூல் ; ஆகமம் . |
ஆரிடர் | முனிவர் . |
ஆரிடலிங்கம் | முனிவர்களால் அமைக்கப்பெற்ற சிவலிங்கம் . |
ஆரிடை | அரியவழி . |
ஆரிப்படுகர் | அரிதாய் ஏறி இறங்கும் வழி . |
ஆரிய | சிறிய ; மேலோரை விளிக்கும் சொல் . |
ஆரியக்கூத்து | கழைக்கூத்து . |
ஆரியகுச்சரி | மருத யாழ்த்திறவகை . |
ஆரியச்சி | ஆரியப்பெண் . |
ஆரியசத்தை | பௌத்தருக்குரிய மேலான உண்மைகள் . |
ஆரியத்திரிவு | காண்க : தற்பவம் . |
ஆரியப்பாவை | பாவைக்கூத்துவகை . |
ஆரியப் பூமாலை | அடங்காப் பெண் ; காத்தவராயன் மனைவி . |
ஆரியபூமி | காண்க : ஆரியாவர்த்தம் . |
ஆரியம் | கேழ்வரகு ; ஆரியாவர்த்தம் ; சமஸ்கிருதம் . |
ஆரியமொழி | வடமொழி . |
ஆரியவராடி | ஒரு பண் ; வராடிவகை . |
ஆரியவாசியம் | காண்க : ஓமம் . |
ஆரியவேளர் கொல்லி | செவ்வழி யாழ்த்திறவகையுள் ஒன்று . |
ஆரியவேளார் கொல்லி | செவ்வழி யாழ்த்திறவகையுள் ஒன்று . |
ஆரியன் | ஆரிய வகுப்பினன் ; ஆரியாவர்த்தவாசி ; பெரியோன் ; ஆசாரியன் ; அறிவுடையோன் ; ஆசிரியன் ; ஐயனார் ; மிலேச்சன் ; ஆதித்தன் . |
ஆரியாங்கனை | இல்லறத்தினின்று துறவுபூண்ட சமணத் தவப்பெண் . |
ஆரியாவர்த்தம் | இமயத்துக்கும் விந்தத்துக்கும் இடையே ஆரியர் குடியேறிய இடம் . |
ஆரியை | பார்வதி ; துர்க்கை ; உயர்ந்தோள் ; ஆசாள் ; வடமொழி யாப்புவகை . |
ஆரீதம் | பச்சைப் புறா ; கரிக்குருவி ; ஆரீதரால் செய்யப்பட்ட ஸ்மிருதி . |
ஆரம்பக்கொசு | சமுத்திராப்பழம் . |
ஆரம்பசூரன் | தொடக்கத்தில் சுறுசுறுப்புக் காட்டுவோன் . |
ஆரம்பம் | தொடக்கம் ; முயற்சி ; பாயிரம் ; பெருமிதம் ; பதற்றம் ; கொலை . |
ஆரம்பவாதம் | முதற்காரணம் இல்லாமலே காரியம் தோன்றுமென்னும் கொள்கை . |
ஆரம்பித்தல் | தொடங்குதல் ; ஒலித்தல் . |
ஆரல் | நெருப்பு ; கார்த்திகைமீன் ; ஆரால்மீன் ; மதில் ; சுவர்மேல் மறைக்கப்படும் மறைப்பு ; செவ்வாய் . |
ஆரவடம் | முத்துவடம் . |
ஆரவம் | ஒலி ; பகை . |
ஆரவமர | காண்க : ஆறவமர . |
ஆரவலர் | காட்டாத்திப்பூ . |
ஆரவாரம் | பேரொலி ; பகட்டு ; துன்பம் . |
ஆரவாரித்தல் | மிக்கொலித்தல் . |
ஆரவை | கொந்தளிப்பு . |
ஆரற்சுவர் | மேலே மறைப்புடைய சுவர் . |
ஆராக்கியம் | அரசமரம் . |
ஆராகரியம் | அரசமரம் . |
ஆராவரியம் | அரசமரம் . |
ஆராட்சி | பழைய வரிவகை ; ஆள் நடமாட்டம் . |
ஆராட்டுதல் | தாலாட்டுதல் . |
ஆராத்தியர் | வீரசைவப் பார்ப்பனர் . |
ஆராத்திரியர் | வீரசைவப் பார்ப்பனர் . |
ஆராத்தொட்டி | மினிக்கி என்னும் மரம் . |
ஆராதகர் | அருச்சகர் . |
ஆராதனம் | பூசை ; சித்திக்கை ; உவப்பிக்கை ; சமைக்கை ; பெறுகை ; ஆவேசம் . |
ஆராதனை | பூசனை ; இறந்த சன்னியாசிகளுக்கு ஆண்டுதோறும் செய்யும் சடங்கு ; கிறித்தவர் கோயில் வழிபாடு . |
ஆராதித்தல் | பூசை செய்தல் ; உபசரித்தல் . |
ஆராதூரி | ஊதாரி ; அழிப்புக்காரன் . |
ஆராப்பத்தியம் | கடும்பத்தியம் ; அற்பம் . |
ஆராமம் | உபவனம் ; மலைச்சோலை ; தான்றி . |
ஆராமை | நிரம்பாமை ; பேரன்பு . |
ஆராமைசோராமை | தள்ளாமை . |
ஆராய்ச்சி | ஆய்வு ; பரிசீலனம் ; சோதனை ; தலையாரி . |
ஆராய்ச்சிமணி | முறை வேண்டுவோர் அசைக்கும்படி அரண்மனை வாயிலில் கட்டப்படும் மணி . |
ஆராய்ச்சியார் | கணக்குத் தணிக்கையாளர் ; கொலைத்தண்டனை நிறைவேற்றுவோர் ; நீதிமன்றத்தில் நாசர் உத்தியோகம் வகிப்பவர் . |
ஆராய்ச்சியாளன் | ஏதேனும் ஒரு பொருளைக் கூர்ந்து ஆராய்ப்பவன் . |
ஆராய்தல் | சோதித்தல் ; சூழ்தல் ; தேடுதல் ; சுருதி சேர்த்தல் . |
ஆரார் | பகைவர் . |
ஆரால் | மீன்வகை ; சேற்றாரால் . |
ஆராவம் | பேரொலி சத்தம் . |
ஆராவமுதம் | தெவிட்டாத அமிர்தம் . |
ஆராவமுது | காண்க : ஆராவமுதம் . |
ஆரி | அருமை ; மேன்மை ; அழகு ; சோழன் ; கதவு ; துர்க்கை ; பார்வதி ; பார்ப்பனி ; தோல்வி . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 88 | 89 | 90 | 91 | 92 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரம்பக்கொசு முதல் - ஆரீதம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, முனிவர், ஆரியாவர்த்தம், அரசமரம், பேரொலி, துர்க்கை, வீரசைவப், பார்வதி, ஆராவமுதம், பூசை, பார்ப்பனர், செவ்வழி, ஆரிய, மணம், கொடுக்கும், வடமொழி, கொல்லி, யாழ்த்திறவகையுள், சொல், ஒன்று