தமிழ் - தமிழ் அகரமுதலி - ஆயலோட்டல் முதல் - ஆர்க்கை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஆர்க்கு | இலைக்காம்பு ; கிளிஞ்சில் வகை ; எருக்கு ; ஒரு மீன் . |
| ஆர்க்குவதம் | கொன்றைமரம் . |
| ஆர்க்கை | வாரடை ; கட்டுகை ; துரும்பு . |
| ஆயானம் | இயற்கைக் குணம் ; வருதல் . |
| ஆயி | தாய் ; ஆயா ; ஒரு சக்தி ; ஒரு மரியாதைச் சொல் . |
| ஆயிட்டு | ஆகையால் . |
| ஆயிடை | அவ்விடம் ; அக்காலத்து . |
| ஆயிரக்கால் மண்டபம் | ஆயிரம் தூண்களுள்ள கோயில் மண்டபம் . |
| ஆயிரக்காலி | மரவட்டை ; துடைப்பம் . |
| ஆயிரக்கிரணன் | சூரியன் . |
| ஆயிரங்கண்ணன் | இந்திரன் . |
| ஆயிரங்கண்ணோன் | இந்திரன் . |
| ஆயிரங்கண்ணுப் பானை | கலியாணத்தில் பயன்படுத்தும் வண்ணப்பானை . |
| ஆயிரங்கதிரோன் | காண்க : ஆயிரக்கிரணன் . |
| ஆயிரங்காய்ச்சி | மிகுதியாகக் காய்க்கும் தென்னை , பலா , மாப் போன்ற மரங்கள் ; துடைப்பம் . |
| ஆயிரங்காற்சடை | துடைப்பம் . |
| ஆயிரஞ்சோதி | சூரியன் . |
| ஆயிரநாமன் | ஆயிரம் திருப்பெயர்களையுடையவன் ; சிவன் ; திருமால் . |
| ஆயிரம் | ஓர் எண் . |
| ஆயிரம்பெயரோன் | காண்க : ஆயிரநாமன் . |
| ஆயிரமுகத்தோன் | வீரபத்திரன் . |
| ஆயிரவருக்கம் | உடற்கவசம் . |
| ஆயிரவாரத்தாழியன் | திருவடிகளில் ஆயிரம் வரி கொண்ட சக்கரத்தையுடையவன் ; புத்தன் . |
| ஆயில் | மதகரிவேம்பு ; செவ்வகில் ; அசோகு ; ஆயிலிய நாள் . |
| ஆயிலியம் | ஒன்பதாம் மீன் . |
| ஆயிழை | தெரிந்தெடுத்த அணிகலன் ; கன்னியாராசி ; அரிவாள்நுனி . |
| ஆயின் | ஆனால் ; ஆராயின் . |
| ஆயின்மேனி | மரகதவகை . |
| ஆயின்று | ஆயிற்று . |
| ஆயினும் | ஆனாலும் ; ஆவது ; உம்மைப் பொருளில் வரும் எண்ணிடைச் சொல் . |
| ஆயு | ஆயுள் ; எண்குற்றங்களுள் வாழ்நாளை வரையறுப்பது . |
| ஆயுகம் | வாழ்நாள் . |
| ஆயுசகன் | வாயு . |
| ஆயுசு | வாழ்நாள் . |
| ஆயுசுகாரகன் | சனி . |
| ஆயுசுமான் | நீண்ட ஆயுளுடையவன் ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று . |
| ஆயுட்கோள் | சாதகனுடைய ஆயுளைக் கணிப்பவனாகக் கருதப்படும் சனி . |
| ஆயுட்டானம் | சன்மலக்கினத்திலிருந்து எட்டாமிடம் . |
| ஆயுட்டோமம் | நீண்ட வாணாளின் பொருட்டுச் செய்யும் வேள்வி . |
| ஆயுதசாலை | படைக்கலக் கொட்டில் . |
| ஆயுதப்பயிற்சி | படைக்கலம் பயில்கை . |
| ஆயுதபாணி | கையில் ஆயுதம் கொண்டவன் . |
| ஆயுதபூசை | நவராத்திரியின் இறுதிநாளில் ஆயுதங்களுக்குச் செய்யும் பூசை . |
| ஆயுதம் | படைக்கலம் ; கருவி ; ஆயத்தம் ; இசைக்கிளையில் ஒன்று . |
| ஆயுதிகன் | பதினாயிரம் காலாட் படைக்குத் தலைவன் . |
| ஆயுநூல் | காண்க : ஆயுர்(ள்)வேதம் . |
| ஆயுர்ப்பாவம் | வாணாளின் போக்கு . |
| ஆயுர்வேதம் | மருத்துவ நூல் . |
| ஆயுள்வேதம் | மருத்துவ நூல் . |
| ஆயுர்வேதாக்கினி | கமலாக்கினி , தீபாக்கினி , காடாக்கினி என்னும் மூன்று தீ . |
| ஆயுவின்மை | அருகன் எண்குணத்துள் ஒன்று . |
| ஆயுள் | வாழ்நாள் ; அப்பொழுது . |
| ஆயுள்வேதர் | ஆயுள்வேதம் வல்லார் . |
| ஆயுள்வேதியர் | ஆயுள்வேதம் வல்லார் . |
| ஆயெறும்பு | எறும்புவகை . |
| ஆயோகம் | நீர்க்கரை ; துறைகளில் மரக்கலங்களைக் கட்டும் பந்தி ; அர்ச்சனை . |
| ஆயோதம் | மோர் ; வேட்டம் . |
| ஆயோதனம் | மோர் ; வேட்டம் . |
| ஆயோர் | அவர்கள் ; ஆனோர் . |
| ஆர் | நிறைவு ; பூமி ; கூர்மை ; அழகு ; மலரின் பொருத்துவாய் ; காண்க : ஆத்தி ; திருவாத்தி ; ஆரக்கால் ; தேரின் அகத்தில் செறிகதிர் ; அச்சு மரம் ; செவ்வாய் ; சரக்கொன்றை ; அண்மை ; ஏவல் ; பலர்பால் படர்க்கை வினைமுற்று விகுதி ; மரியாதைப் பன்மை விகுதி ; ஓர் அசை ; அருமையான . |
| ஆர்க்கங்கோடன் | காண்க : கொல்லங்கோவை . |
| ஆர்க்கம் | இலாபம் ; காண்க : ஆரகம் ; ஆரக்கம் ; சந்தனம் ; பித்தளை . |
| ஆயலோட்டல் | பயிர் சேதமாகாதபடி மகளிர் பறவைகளை விரட்டுகை . |
| ஆயவன் | அத்தகையவன் . |
| ஆயவியயம் | வரவுசெலவு . |
| ஆயன் | இடையன் . |
| ஆயனம் | ஆண்டு ; நெல்வகை ; கிரணம் . |
| ஆயனி | துர்க்கை . |
| ஆயா | மரவகை ; பாட்டி ; தாதி . |
| ஆயாசம் | களைப்பு ; மனவருத்தம் ; முயற்சி . |
| ஆயாமம் | அடக்குகை ; நீளம் ; அகலம் . |
| ஆயாள் | தாய் ; பாட்டி ; முதியவள் . |
| ஆயான் | தந்தை ; தமையன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 86 | 87 | 88 | 89 | 90 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆயலோட்டல் முதல் - ஆர்க்கை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஆயிரம், வாழ்நாள், ஆயுள்வேதம், ஒன்று, துடைப்பம், சொல், ஆயுதம், மருத்துவ, நூல், வல்லார், பாட்டி, விகுதி, வேட்டம், மோர், படைக்கலம், நீண்ட, ஆயிரக்கிரணன், மண்டபம், தாய், மீன், சூரியன், இந்திரன், வாணாளின், ஆயுள், ஆயிரநாமன், செய்யும்

