தமிழ் - தமிழ் அகரமுதலி - போன் முதல் - மக்கடித்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| போன் | எலி பிடிக்கும் பொறி ; பொறி ; மலைக்குகை ; உலைக்குந் துருத்திக்கும் இடையில் சாய்வாகச் செல்லும் அடுப்புப் பாகம் . |
| போனக்குருத்து | நுனியுள்ள வாழையிலை . |
| போனகச்சட்டி | அன்னம் பரிமாறும் சட்டி . |
| போனகத்தி | ஊட்டுந்தாய் ; சமைக்கிறவள் ; வெள்ளாட்டி . |
| போனகப்பெட்டி | உணவுப்பண்டங்களை வைக்கும் ஓலைக்கூடைவகை . |
| போனகம் | உணவு ; அன்னம் ; அப்பவருக்கம் உண்கை . |
| போனகாலம் | சென்ற காலம் . |
| போனபோக்கு | மனஞ்சென்ற வழி ; அழிவுநிலை . |
| போனம் | உணவு ; அன்னம் ; நிலக்கடம்புப் பூண்டு . |
| போனு | பொறி . |
| பௌ | ஒர் உயிர்மெய்யெழுத்து ( ப்+ஔ) . |
| பௌஞ்சு | சேனை . |
| பௌடம் | தைமாதம் . |
| பௌடிகம் | இருக்குவேதம் ; பதினெண் புராணத்துள் ஒன்று . |
| பௌத்தன் | புத்த சமயத்தினன் ; காண்க : பௌத்தாவதாரம் . |
| பௌத்தாவதாரம் | திருமால் பிறப்புகளுள் ஒன்று . |
| பௌத்திரம் | தூய்மை ; மலவாய்க்கு அருகில் உண்டாகும் கட்டிவகை . |
| பௌத்திரன் | பேரன் ; தூயன் . |
| பௌத்திரி | மக்களின் மகள் . |
| பௌதிகசாத்திரம் | இயற்பியல் நூல் . |
| பௌதிகதீட்சை | சைவசமய தீட்சைகளுள் ஒன்று . |
| பௌதிகம் | இயற்பியல் ; பூதசம்பந்தமானது ; உலகம் ; காண்க : கருநெல்லி . |
| பௌதிகன் | சிவபிரான் . |
| பௌதீகம் | காண்க : பௌதிகம் . |
| பௌமம் | பூமி சம்பந்தமானது . |
| பௌமன் | செவ்வாய் ; நரகாசுரன் . |
| பௌமி | பூமியின் புதல்வியான சீதை . |
| பௌர்ணசந்திரன் | வெள்ளுவா , நிறைமதி நாள் . |
| பௌர்ணமி | வெள்ளுவா , நிறைமதி நாள் . |
| பௌர்ணமை | வெள்ளுவா , நிறைமதி நாள் . |
| பௌரகம் | நகர்சூழ் சோலை . |
| பௌரணை | காண்க : பௌர்ணமி ; மரக்கன்று ; கடல் . |
| பௌரம் | நகரசம்பந்தமானது . |
| பௌரன் | நகர்வாழ்நன் . |
| பௌராணிகம் | புராணத்தைப் பின்பற்றும் மதம் . |
| பௌராணிகமந்திரம் | பிரணவம் இல்லாத மந்திரம் . |
| பௌராணிகன் | புராணக் கொள்கையுடையவன் ; புராணஞ் சொல்பவன் . |
| பௌரி | பெரும்பண்வகை . |
| பௌரிகன் | குபேரன் . |
| பௌரோகித்தியம் | புரோகிதத் தன்மை . |
| பௌலோமி | இந்திரன் மனைவி , புலோமசை ; புலோமசை மகள் . |
| பௌவம் | உப்பு ; கடல் ; நீர்க்குமிழி ; ஆழம் ; நுரை ; மரக்கணு ; நிறைநிலா ; பருவகாலம் . |
| பௌழியம் | இருக்குவேதம் . |
| பௌழியன் | பூழிநாட்டுத் தலைவனான சேர அரசன் ; இருக்குவேதக் கடவுள் . |
| பௌளி | ஒரு பண்வகை . |
| ம | ஒர் உயிர்மெய்யெழுத்து (ம்+அ) ; மத்திமம் எனப்படும் இசையின் எழுத்து ; சந்திரன் ; சிவன் ; யமன் ; காலம் ; பிரமன் ; திருமால் ; நஞ்சு . |
| மஃகான் | மகரவொற்று . |
| மக்கட்கதி | நாற்கதியுள் மக்களாய்ப் பிறக்கும் பிறப்பு . |
| மக்கட்சேவகம் | ஊழியம் . |
| மக்கட்சேவகன் | ஊழியன் . |
| மக்கட்டம்பிடித்தல் | இழுபறிப்படுதல் . |
| மக்கட்டாயம் | மகன்முறையாய் வரும் தாய உரிமை . |
| மக்கட்டு | அரையில் ஆடையின்மேற் கட்டுங் கட்டு ; மணிக்கட்டு . |
| மக்கட்டொகுதி | மக்கள்தொகை ; மக்கட் கூட்டம் . |
| மக்கட்பரப்பு | மக்கள்தொகை ; மக்கட் கூட்டம் . |
| மக்கட்பாடு | மக்களுடைய முயற்சி . |
| மக்கட்பேறு | குழந்தைச்செல்வம் . |
| மக்கடா | புத்தியீனன் . |
| மக்கடித்தல் | உருவழித்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 827 | 828 | 829 | 830 | 831 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
போன் முதல் - மக்கடித்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பொறி, நாள், நிறைமதி, வெள்ளுவா, ஒன்று, அன்னம், கூட்டம், மக்கட், பௌர்ணமி, மக்கள்தொகை, கடல், புலோமசை, மகள், உயிர்மெய்யெழுத்து, காலம், உணவு, இருக்குவேதம், பௌத்தாவதாரம், இயற்பியல், திருமால், பௌதிகம்

