தமிழ் - தமிழ் அகரமுதலி - போதாந்தம் முதல் - போர்வு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| போதாந்தம் | அறிவின் எல்லை , ஞானமுடிவு . |
| போதாந்தன் | கடவுள் . |
| போதாமை | குறைவு ; மனப்பிடித்தமின்மை . |
| போதாலயம் | அறிவிற்கிருப்பிடம் . |
| போதி | அரசமரம் ; அறிவு ; மலை ; காண்க : போதிகைக்கட்டை . |
| போதிக்கிறைவன் | புத்தன் . |
| போதிகன் | ஆன்மா . |
| போதிகை | குறுந்தறி ; தூண்மேல் வைக்கும் தாங்குகட்டை . |
| போதிகைக்கட்டை | குறுந்தறி ; தூண்மேல் வைக்கும் தாங்குகட்டை . |
| போதிசத்துவன் | அறிவு முதிர்ந்து அடுத்த பிறவியில் புத்தனாக ஆவதற்குரியவன் ; புத்தன் . |
| போதித்தல் | கற்பித்தல் ; விருப்பமுண்டாதல் ; தீயுரை புகட்டல் . |
| போதித்தலைவன் | புத்தன் . |
| போதிப்பகவன் | புத்தன் . |
| போதிப்பு | அறிவு ; படிப்பினை . |
| போதிமாதவன் | காண்க : போதிப்பகவன் . |
| போதிய | போதுமான . |
| போதியகுடி | மதிப்புள்ள குடும்பம் . |
| போதியவன் | கண்ணியவான் . |
| போதியார் | புத்தர் ; பௌத்தர் . |
| போதிவேந்தன் | காண்க : போதிப்பகவன் . |
| போதினன் | தாமரைப் பூவிலிருப்பவனான பிரமன் . |
| போது | மலரும்பருவத்து அரும்பு : மலர் ; செவ்வி ; காலம் ; தக்க சமயம் ; வாழ்நாள் ; பொழுது . |
| போதுகாலம் | பிள்ளைபெறுங் காலம் . |
| போதுசெய்தல் | மலருதல் ; உண்ணுதல் ; மூடுதல் ; குரல் மாறுதல் ; பேரரும்பாதல் . |
| போதுதல் | போதியதாதல் ; தகுதியாதல் ; ஒழுகுதல் ; மதிக்கப்படுதல் ; செல்லுதல் . |
| போதுபோக்கு | காண்க : பொழுதுபோக்கு . |
| போதுபோக்குதல் | காண்க : பொழுதுபோக்கு . |
| போதுவைகுதல் | காலம் நீட்டிக்கை . |
| போதை | மூதறிவு ; இலாகிரி மயக்கம் . |
| போதைப்புல் | காண்க : காவட்டம்புல் ; கருப்பூரப்புல் . |
| போந்த | தகுந்த ; பழகின ; தீர்மானமான . |
| போந்தி | வீக்கம் ; யானைக்கால் . |
| போந்திக்கால் | யானைக்கால் . |
| போந்தின்கண்ணிக்கோன் | பனம்பூமாலையையுடைய சேரன் . |
| போந்தின்றாரோன் | பனம்பூமாலையையுடைய சேரன் . |
| போந்து | காண்க : போந்தை ; பல்லி . |
| போந்தை | பனை ; இளம்பனைமரம் ; அனுடநாள் . |
| போபடி | சாடை . |
| போம் | ஓர் அசைச்சொல் . |
| போம்பல் | காண்க : நீர்க்கடம்பு . |
| போய்ப்பாடு | புகழ் ; பெரிதாயிருக்கை . |
| போயகாலம் | சென்ற காலம் . |
| போயிற்று | ஓர் அசைநிலை . |
| போர் | சண்டை ; மல்யுத்தம் ; இகல் ; செறிந்து பொருந்துகை ; குவியல் ; சாணி ; கதிர் வைக்கோல்களின் படப்பு ; சதயநாள் ; மரப்பொந்து . |
| போர்க்கடம் | சண்டை செய்வதாகிய வீரர் கடமை . |
| போர்க்கடா | சண்டைக்காக வளர்க்கப்படும் ஆட்டுக்கடா . |
| போர்க்கண் | காண்க : போர்க்களம்(ரி) . |
| போர்க்கதவு | பலகைகளை இணைத்த கதவு , இரட்டைக்கதவு . |
| போர்க்களத்தொழிதல் | போரிற் புறங்கொடாது வீரன் பூசற்களரியிலே பட்டதைக் கூறும் புறத்துறை . |
| போர்க்களம் | சண்டை செய்யுமிடம் . |
| போர்க்களரி | சண்டை செய்யுமிடம் . |
| போர்க்கோலம் | போருக்குரிய உடைதரித்தல் . |
| போர்கலத்தல் | போர்புரிதல் . |
| போர்ச்சேவகன் | படைவீரன் . |
| போர்ச்சேவல் | சண்டைக்காக வளர்க்கப்படும் சேவல் . |
| போர்த்தல் | தரித்தல் ; மூடுதல் ; சூழ்தல் . |
| போர்த்துக்கட்டுதல் | உள்ளுக்குள்ளே சரிப்படுத்துதல் ; மறைத்து அடக்கிக்கொள்ளுதல் . |
| போர்த்துமூடுதல் | மறைத்து அடக்கிக்கொள்ளுதல் . |
| போர்நிறம் | போர்ப்பொலிவு . |
| போர்ப்பறை | போர்முரசம் . |
| போர்ப்பு | மூடுகை ; நெற்போர் . |
| போர்ப்பூ | போரில் வீரர் அணிந்துகொள்ளும் அடையாளப்பூ . |
| போர்ப்பை | உழவுகாலின் உட்குழிவு ; களைக்கொட்டின் அடி . |
| போர்ப்பைக்காளை | பொலிகாளை ; உழவுக்குரிய காளை . |
| போர்ப்பையன் | பொலிகாளை ; உழவுக் குரிய காளை . |
| போர்பு | காண்க : போர்வு . |
| போர்போடுதல் | தானியமணிகளைப் பிரித்தபின் வைக்கோலை மழையிற் கெடாதபடி குவித்து மூடுதல் . |
| போர்மகள் | கொற்றவை , துர்க்கை , வெற்றித்திருமகள் . |
| போர்மடந்தை | கொற்றவை , துர்க்கை , வெற்றித்திருமகள் . |
| போர்முகம் | போர் முனைந்து நிகழுமிடம் . |
| போர்முரசு | காண்க : போர்ப்பறை . |
| போர்முள் | சேவலின் முன்னங்கால் முள் . |
| போர்முனை | காண்க : போர்முகம் . |
| போர்மூட்டுதல் | சண்டைசெய்யத் தூண்டுதல் ; பேதகஞ்செய்தல் . |
| போர்மை | அருள் . |
| போர்வு | தானியப்போர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 825 | 826 | 827 | 828 | 829 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
போதாந்தம் முதல் - போர்வு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சண்டை, புத்தன், காலம், மூடுதல், அறிவு, போதிப்பகவன், மறைத்து, அடக்கிக்கொள்ளுதல், போர்க்களம், செய்யுமிடம், போர்ப்பறை, போர்முகம், காளை, கொற்றவை, துர்க்கை, போர்வு, வளர்க்கப்படும், வெற்றித்திருமகள், பொலிகாளை, போர், வைக்கும், தாங்குகட்டை, தூண்மேல், குறுந்தறி, போதிகைக்கட்டை, பொழுதுபோக்கு, யானைக்கால், வீரர், போந்தை, சேரன், பனம்பூமாலையையுடைய, சண்டைக்காக

