முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » மகரந்தப்பொடி முதல் - மகாகோரம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - மகரந்தப்பொடி முதல் - மகாகோரம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மகரந்தப்பொடி | பூந்தேன் ; பூந்தாது . |
| மகரந்தம் | மலர்த்தாது ; பூந்தேன் ; கள் ; வண்டு ; குயில் ; செடிவகை . |
| மகரந்தவதி | பாதிரிப்பூ . |
| மகரந்தோய்த்தல் | செங்காவி நிறமூட்டுதல் . |
| மகரநீர் | கடல் . |
| மகரப்பகுவாய் | திறந்த சுறாவினது வாய்போலச் செய்யப்பட்ட ஒரு தலைக்கோலவகை . |
| மகரம் | சுறாமீன் ; முதலை ; குபேரனது ஒன்பது வகை நிதியுள் ஒன்று ; ஒரு பேரெண் ; காண்க : மகரக்குழை ; மகரராசி ; குறங்குசெறியணி ; தைமாதம் ; அபிநயக்கைவகை ; அரசசின்னத்துள் ஒன்று ; மணமேடை அலங்கரிப்பு ; காதல் ; மலர்த்தாது ; மங்கிய சிவப்புநிறம் ; தேவருலகம் . |
| மகரமாதம் | தைமாதம் . |
| மகரமீன் | சுறாமீன் . |
| மகரமுகம் | அபிநயவகை . |
| மகரமுயர்த்தோன் | காண்க : மகரக்கொடியோன் ; மீனைக் கொடியிலுடைய மன்மதன் . |
| மகரயாழ் | நால்வகை யாழினுள் மகரவடிவம் அமையப்பெற்றுப் பத்தொன்பது நரம்புடைய யாழ் . |
| மகரயூகம் | காண்க : மகரவியூகம் . |
| மகரராசி | பத்தாம் இராசி . |
| மகரரேகை | செல்வன் என்பதைக் காட்டும் குறியாக உள்ளங்கையில் அமையும் மீன்வடிவ வரி . |
| மகரவலயம் | காண்க : மகரப்பகுவாய் . |
| மகரவாகனன் | வருணன் . |
| மகரவாய் | காண்க : மகரப்பகுவாய் ; மகரமீனின் வாய்போலச் செய்யப்பட்ட நீர்த்தூம்பு . |
| மகரவாய்மோதிரம் | மகரமீனின் வடிவமைந்த கால்விரலணிவகை . |
| மகரவாழை | ஒரு மல்லிகைவகை ; வாழைவகை . |
| மகரவியூகம் | மகரமீனின் வடிவான படை வகுப்பு . |
| மகரவீணை | காண்க : மகரயாழ் . |
| மகரவுச்சன் | செவ்வாய் . |
| மகரன் | சனி . |
| மகராகரம் | கடல் . |
| மகராசன் | பேரரசன் ; குபேரன் ; பெருஞ் செல்வன் ; கவலையற்றவன் ; சமணகுரு . |
| மகாராசன் | பேரரசன் ; குபேரன் ; பெருஞ் செல்வன் ; கவலையற்றவன் ; சமணகுரு . |
| மகராசி | செல்வமுள்ளவள் ; அரசி . |
| மகராயனம் | சூரியன் வடக்கு நோக்கித் திரும்புங்காலம் . |
| மகராலயம் | காண்க : மகராகரம் . |
| மகரி | காண்க : மகராகரம் . |
| மகரிகை | மகரமீன் வடிவமாகச் செய்யப்பட்ட குறங்குசெறி என்னும் அணிகலன் ; ஒருபேரெண் ; தோரணம் ; மகரவடிவாய்ச் செய்த பெட்டி . |
| மகருதம் | காண்க : கொடிவேலி . |
| மகலோகம் | மேலேழுலகினுள் ஒன்று . |
| மகவதி | இந்திராணி . |
| மகவன் | இந்திரன் ; சிவன் . |
| மகவாட்டி | மகப்பேறுள்ளவள் . |
| மகவான் | காண்க : மகவன் ; மகப்பேறுடையவன் ; வேள்வி செய்பவன் . |
| மகவின்கோள் | வியாழன் . |
| மகவு | குழந்தை ; மகன் ; கோட்டில்வாழ் விலங்கின் பிள்ளை . |
| மகவுவளர்த்தல் | குழந்தைகளை வளர்த்தல் . |
| மகவேள்வி | ஆண்மகவுவேண்டிச் செய்யும் யாகம் . |
| மகள் | பெண் ; புதல்வி ; மனைவி . |
| மகளிக்கீரை | ஒரு கீரைவகை . |
| மகளிர் | பெண்டிர் . |
| மகளிர்சாதி | அருணி , வடவை , அத்தினி என்னும் மூவகைப் பெண்கள் . |
| மகளிர்பருவம் | பேதை , பெதும்பை , மங்கை , மடந்தை , அரிவை , தெரிவை , பேரிளம் பெண் என்னும் எழுவகைப் பெண்பருவம் ; வாலை , தருணி , பிரவுடை , விருத்தை என்னும் நால்வகைப் பெண்பருவம் . |
| மகற்பலம் | பெரும்பலன் . |
| மகன் | புதல்வன் ; ஆண்பிள்ளை ; குழந்தை ; சிறந்தோன் ; வீரன் ; கணவன் . |
| மகன்மை | ஆண்தன்மை , புதல்வன் தன்மை ; பழைய வரிவகை . |
| மகன்றில் | ஆண்பெண்களுள் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாத ஒரு நீர்வாழ் பறவை . |
| மகா | பெருமையான ; அளவற்ற ; உயர்ந்த ; மிகுந்த . |
| மகாகதம் | காய்ச்சல் . |
| மகாகர்வம் | பத்துலட்சங்கோடி . |
| மகாகவம் | பெரும்போர் . |
| மகாகவி | பெருங்கவி . |
| மகாகாசம் | பெருவெளி ; பெருஞ்சிரிப்பு . |
| மகாகாயம் | பெருவெளி ; யானை . |
| மகாகாலம் | நெடுங்காலம் ; மாமரம் . |
| மகாகாலன் | உருத்திரன் . |
| மகாகாளி | சத்திகளுள் ஒருத்தி . |
| மகாகிதி | கோடிகோடாகோடி . |
| மகாகோடி | ஒரு பேரெண் . |
| மகாகோரம் | காணப் பொறுக்காத கொடுமை ; நரகவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 829 | 830 | 831 | 832 | 833 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மகரந்தப்பொடி முதல் - மகாகோரம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஒன்று, என்னும், மகராகரம், மகரமீனின், செல்வன், மகரப்பகுவாய், செய்யப்பட்ட, மலர்த்தாது, மகவன், சமணகுரு, கவலையற்றவன், குழந்தை, மகன், பெருவெளி, புதல்வன், பெண்பருவம், பெண், பெருஞ், பேரரசன், தைமாதம், மகரராசி, வாய்போலச், பேரெண், மகரமீன், மகரயாழ், சுறாமீன், கடல், பூந்தேன், மகரவியூகம், குபேரன்

