தமிழ் - தமிழ் அகரமுதலி - போர்வை முதல் - போறை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| போர்வை | மூடுதல் ; மேல்மூடும் துணி ; தோல் ; வாள் முதலியவற்றின் உறை ; கவசம் ; தேர்த் தட்டின் வெளி மறையப் பாவின பலகை . |
| போர | மிகவும் . |
| போரடி | தலையடிக் கதிர்ப்போரைக் கடாவிட்டு அடித்து நெல்லைப் பிரிக்கை ; நெற்களம் ; ஒரு விளையாட்டுவகை . |
| போரடித்தல் | நெற்கதிரை அடித்தல் ; வாதாடுதல் ; சோர்வுதட்டுதல் . |
| போரப்பொலிய | முழுதும் . |
| போராட்டம் | சண்டையிடுகை ; போட்டி ; சண்டை ; விடாமுயற்சி . |
| போராடுதல் | பொருதல் ; தொல்லைப்படுதல் ; விலை முதலியவற்றில் வாதம்செய்தல் . |
| போரான் | குதிரைவகை . |
| போரி | பொருவோன் ; முருகக்கடவுளின் தலங்களில் ஒன்றான திருப்போரூர் . |
| போரிக்கட்டை | காண்க : போதிகைக்கட்டை . |
| போரிகை | காண்க : போதிகைக்கட்டை . |
| போருதல் | செல்லுதல் ; மீண்டுவருதல் ; எட்டுதல் ; பொருள் பெறப்படுதல் ; போதியதாதல் . |
| போருதவி | போர்வீரனுக்கு உதவிசெய்கை . |
| போருந்து | போர்க்கருவிகளுள் ஒன்று , டாங்கிப் படை . |
| போரெதிர்தல் | போர்செய்தலை மேற்கொள்ளுதல் . |
| போரேறு | போர் செய்யவல்ல காளை ; படை வீரன் ; செவ்வாய் . |
| போல் | ஓர் உவமவுருபு ; பொய் ; ஓர் அசைச்சொல் ; உள்ளீடில்லாதது ; பதர் ; மூங்கில் ; வெற்றி ; படை ; வாள் . |
| போல்மரம் | வண்டியின் முன்புறத்துள்ள நீண்ட மரக்கட்டை . |
| போல | ஓர் உவமவுருபு . |
| போலி | ஒன்றுபோல் ஒன்றிருத்தல் ; ஒப்புடையவர் ; ஒப்புடையது ; ஒப்பு ; சாயல் ; கள்ளப்பொருள் ; படி , பிரதி ; பொய் ; வஞ்சகம் ; கேலி ; காண்க : போலியெழுத்து ; இலக்கணப்போலி ; நியாயாபாசம் . |
| போலிச்சமயம் | பொய்யான மதம் . |
| போலிச்சரக்கு | உண்மைச் சரக்கைப்போலப் செய்த பண்டம் ; வெளிப்பகட்டுள்ள பொருள் . |
| போலித்தனம் | உண்மையல்லாத வெளித்தோற்றம் . |
| போலிநடை | வெளிப்பகட்டான நடத்தை ; இழிவான நடத்தை . |
| போலிநியாயம் | பொய்க்காரணம் ; நியாயம்போல் காணப்படும் நியாயமற்றது . |
| போலிமனிதன் | மக்கட்பண்பற்றவன் . |
| போலிமை | ஒப்பு . |
| போலிமொழி | காண்க : இலக்கணப்போலி . |
| போலியாள் | வெளிவேடக்காரன் ; மேல்வாரியாக வேலை செய்பவன் . |
| போலியெழுத்து | ஓர் எழுத்துக்குப் பதிலாக அவ்வொலியில் அமையும் எழுத்து . |
| போலிவேலை | கள்ளத்தனமான வேலை . |
| போலுதல் | ஒத்தல் ; இணையொத்தல் . |
| போலும் | ஓர் அசைச்சொல் ; ஐயப்பாட்டைக் குறிக்குஞ் சொல் . |
| போவித்தல் | போக்குதல் . |
| போவு | போகை . |
| போவுலித்தல் | போக்குதல் . |
| போழ் | பிளவு ; தகடு ; தோலால் அமைந்த வார் ; துண்டம் ; பனங்குருத்து . |
| போழ்க்கமை | ஒழுக்கக்கேடு . |
| போழ்க்கன் | ஒழுக்கக்கேடன் . |
| போழ்தல் | பிளவுபடுதல் ; பிரிவுபடுதல் ; பிளத்தல் ; ஊடுருவுதல் ; அழித்தல் . |
| போழ்து | காண்க : பொழுது ; நல்வேளை . |
| போழ்முகம் | பன்றி . |
| போழ்முகி | பன்றி . |
| போழ்வாய் | பொக்கைவாய் ; பிளந்த வாய் . |
| போழ்வு | பிளவு . |
| போழம் | மாறுபடும் சொல் . |
| போளம் | மணப்பண்டவகை ; நிலக்கடம்புப் பூண்டு . |
| போளி | ஓர் இனிப்புப் பலகாரவகை ; மூடன் . |
| போற்றரவு | பேணுகை . |
| போற்றலர் | காண்க : போற்றார் . |
| போற்றன் | பாட்டன் . |
| போற்றார் | பகைவர் . |
| போற்றி | துதிச்சொல்வகை ; துதித்தல் , புகழ்மொழி ; கோயிற்பூசை செய்யும் மலையாள நாட்டுப் பார்ப்பனன் ; பாட்டன் . |
| போற்றிசெய்தல் | புகழ்தல் , துதித்தல் . |
| போற்றிசைத்தல் | புகழ்தல் , துதித்தல் . |
| போற்றிமை | வணக்கம் . |
| போற்றியாதல் | இடுக்குகை . |
| போற்றீடு | பாதுகாவல்வகை . |
| போற்று | துதி ; காப்பு . |
| போற்றுதல் | வணங்குதல் ; துதித்தல் ; பாதுகாத்தல் ; வளர்த்தல் ; பரிகரித்தல் ; கடைப்பிடித்தல் ; உபசரித்தல் ; விரும்புதல் ; கருதுதல் ; மனத்துக்கொள்ளுதல் ; கூட்டுதல் . |
| போற்றுநர் | சுற்றத்தார் ; நன்குணர்வார் . |
| போறல் | போலுதல் , ஒத்திருத்தல் . |
| போறை | பொந்து ; கிணறு முதலியவற்றின்பக்கம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 826 | 827 | 828 | 829 | 830 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
போர்வை முதல் - போறை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, துதித்தல், சொல், போக்குதல், போலுதல், பிளவு, போற்றார், புகழ்தல், பாட்டன், வேலை, பன்றி, இலக்கணப்போலி, பொருள், போதிகைக்கட்டை, வாள், உவமவுருபு, பொய், போலியெழுத்து, ஒப்பு, அசைச்சொல், நடத்தை

