தமிழ் - தமிழ் அகரமுதலி - மக்கண்முரி முதல் - மகரதோரணம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மக்கண்முரி | வடிவிற் சிறியவர் . |
| மக்கம் | நெய்வோர் தறி ; காண்க : எருக்கு ; முகம்மது நபி பிறந்த இடம் . |
| மக்கர் | இடக்கு . |
| மக்கல் | கெட்டுப்போன பொருள் ; கூளம் . |
| மக்கள் | மானுடவினம் ; ஐம்பொறியுணர்வோடு மனவறிவுடைய உயிர்கள் ; பிள்ளைகள் . |
| மக்களித்தல் | குணமடைந்த நோய் திரும்புதல் ; உடற்சந்து பிசகுதல் ; சறுக்குதல் ; மாற்றுதல் . |
| மக்களிப்பு | புரளல் ; காண்க : மக்களித்தல் . |
| மக்கன் | காண்க : மக்கு . |
| மக்கனம் | மூழ்குகை ; அவமானம் . |
| மக்காச்சோளம் | ஒரு சோளவகை . |
| மக்கி | இரேவற்சின்னிப்பால் ; காண்க : இரேவற்சின்னி ; குளிகைவகை ; ஈ ; வெண்பார்க்கல் . |
| மக்கினம் | காண்க : மக்கனம் . |
| மக்கு | அடைமண் ; மந்தகுணம் ; அறிவீனன் ; மரவேலையில் சந்து தெரியாமல் அடைக்கும் பொடி . |
| மக்குதல் | அழிதல் ; மந்தமாதல் ; கெடுதல் ; அழுக்கேறுதல் : ஈரத்தாற் கெட்டுப்போதல் . |
| மக | மகன் அல்லது மகள் ; பிள்ளை ; இளமை ; நிலவரிவகை . |
| மகக்குழை | மாவிலை . |
| மகங்காரம் | ஆணவம் . |
| மகச்சோறு | முப்பத்திரண்டு அறங்களுள் குழந்தைகளுக்குச் சோறளிக்கும் அறம் . |
| மகசர் | பலர் கையெழுத்திட்ட பொது விண்ணப்பம் . |
| மகசூல் | நிலத்தின் விளைச்சல் . |
| மகட்கருமம் | பெண்ணை மணந்துகொள்கை . |
| மகட்கொடை | மகளை மணஞ்செய்து கொடுத்தல் . |
| மகட்கோடல் | பெண்ணை மணம்புரிகை . |
| மகட்பாற்காஞ்சி | முதுகுடித் தலைவனிடம் மகளைத் தருகவென்று கேட்கும் அரசனோடு அவன் மாறுபட்டு நிற்பதைக் கூறும் புறத்துறை . |
| மகட்பேசுதல் | திருமணத்திற்குப் பெண் உறுதி செய்தல் . |
| மகடு | காண்க : மகடூஉ ; மகுடி . |
| மகடூஉ | பெண் ; மனைவி . |
| மகடூஉக்குணம் | பெண்தன்மைக்குரிய நாணம் , மடம் , அச்சம் , பயிர்ப்பு என்னும் நாற்குணம் . |
| மகடூஉமுன்னிலை | பெண்ணை முன்னிலைப் படுத்திக்கூறுகை . |
| மகண்மறுத்தல் | பகைவீரன் தம் மகளை மணங்கோடற்கு விரும்பிக் கேட்கச் சிற்றரசர் மறுத்தலைக் கூறும் புறத்துறை . |
| மகண்மறுத்துமொழிதல் | பகைவீரன் தம் மகளை மணங்கோடற்கு விரும்பிக் கேட்கச் சிற்றரசர் மறுத்தலைக் கூறும் புறத்துறை . |
| மகண்மா | பெண்ணுருக்கொண்ட ஒரு விலங்கு ; அலி . |
| மகண்மை | மகளாகும் தன்மை ; பெண்தன்மை ; காண்க : மகமை . |
| மகத்தத்துவம் | அறிவுத்தத்துவம் . |
| மகத்து | பெரியது ; அதிகமானது ; பெருமையானது ; மகாத்துமா ; நாடு ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
| மகத்துவம் | பெருமை . |
| மகத்துறை | வேள்வி செய்யுமிடம் . |
| மகத்தூண் | வேள்விப் பசுவைக் கட்டிய தூண் . |
| மகதத்துவம் | காண்க ; மகத்தத்துவம் . |
| மகதம் | நாடு ஐம்பத்தாறனுள் ஒன்று ; நடு நாட்டில் திருக்கோவலூரைச் சார்ந்த ஒரு பகுதி ; பதினெண் மொழியுள் ஒன்று . |
| மகதவன் | மகதநாட்டவன் . |
| மகதி | நாரதன் வீணை ; பார்வதி ; திப்பிலி . |
| மகதை | திப்பிலி ; நடுநாட்டில் திருக்கோவலூரைச் சார்ந்த ஒரு பகுதி . |
| மகந்தரம் | கள் ; பதநீர் . |
| மகப்பால்வார்த்தல் | அநாதப் பிள்ளைக்குப் பால் வார்த்தல் . |
| மகப்பேறு | பிள்ளைப்பேறு . |
| மகபதி | வேள்விக்கு தலைவனாகிய இந்திரன் . |
| மகம் | மகநாள் ; வேள்வி ; பலி ; இன்பம் ; பிரபை ; விழவு . |
| மகம்பூ | செடிவகை . |
| மகமாயி | பார்வதி ; பெரியம்மைக்குரிய தேவதை . |
| மகமுறை | விருந்து ; வேள்விசெய்யும் முறை . |
| மகமேரு | மேருமலை . |
| மகமை | கோயில் , சத்திரம் முதலியவற்றின் செலவிற்காக வசூலிக்கும வரி ; வணிகர்கள் தங்கள் ஊதியத்திலிருந்து அறச்செயலுக்குக் கொடுக்கும் நிதி ; பழைய நிலவரிவகை . |
| மகரக்குழை | சுறாமீன் வடிவமைந்த காதணி . |
| மகரக்குறுக்கம் | தன் மாத்திரையிற் குறைந்து நிற்கும் மகரமெய் . |
| மகரக்கொடியோன் | மீனைக் கொடியிலுடைய மன்மதன் . |
| மகரகண்டிகை | கழுத்தணிவகை ; காண்க : மகரதோரணம் . |
| மகரகுண்டலம் | காண்க : மகரக்குழை . |
| மகரகேதனம் | மீனக்கொடி . |
| மகரகேதனன் | காண்க : மகரக்கொடியோன் . |
| மகரசங்கராந்தி | தைமாதப் பிறப்பு . |
| மகரத்துவசன் | காண்க : மகரக்கொடியோன் . |
| மகரதோரணம் | மகரமீன் வடிவம் போன்ற ஓர் அலங்காரத் தோரணம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 828 | 829 | 830 | 831 | 832 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மக்கண்முரி முதல் - மகரதோரணம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மகளை, கூறும், பெண்ணை, ஒன்று, புறத்துறை, மகரக்கொடியோன், வேள்வி, மகரதோரணம், நாடு, திருக்கோவலூரைச், சார்ந்த, மகரக்குழை, மகத்தத்துவம், பார்வதி, பகுதி, திப்பிலி, கேட்கச், நிலவரிவகை, பெண், மக்கனம், மக்கு, மக்களித்தல், மகடூஉ, பகைவீரன், மறுத்தலைக், சிற்றரசர், விரும்பிக், மணங்கோடற்கு, மகமை

