தமிழ் - தமிழ் அகரமுதலி - பொறுத்தல் முதல் - பொன்னகரம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பொறுத்தல் | தாங்குதல் ; சகித்தல் ; சுமத்தல் ; அணிதல் ; இளக்காரம் கொடுத்தல் ; மன்னித்தல் ; உத்தரவாதமாதல் ; தாமதித்தல் ; உவமையாகப் பெறுதல் ; சாந்தமாயிருத்தல் . |
| பொறுதி | பொறுமை ; மன்னிப்பு ; ஓய்வு ; தாமதம் ; இளக்காரம் . |
| பொறுப்பற்றவன் | அவசரக்காரன் ; உதவியற்றவன் ; பொறுப்பில்லாதவன் . |
| பொறுப்பாளி | காண்க : பொறுப்புக்காரன் . |
| பொறுப்பித்தல் | பொறுப்புக்கட்டுதல் ; முட்டுக் கொடுத்தல் ; பொறுக்குமாறு செய்தல் ; ஓம்புதல் ; நடத்தல் . |
| பொறுப்பு | பதவி ; கடமை ; பாரம் ; முட்டு : உத்திரவாதம் ; முக்கியம் ; தகுதி ; பொறுமை ; வரி . |
| பொறுப்புக்கட்டுதல் | ஒப்படைத்தல் ; உத்தரவாதமேற்றுதல் ; ஈடுகாட்டுதல் ; முற்றுவித்தல் . |
| பொறுப்புக்காரன் | உத்தரவாதி . |
| பொறுமை | அடக்கம் ; பொறுத்தல் , சகித்தல் . |
| பொறுமைக்காரன் | சாந்தமுள்ளவன் , அமைதியானவன் . |
| பொறுமைசாலி | சாந்தமுள்ளவன் , அமைதியானவன் . |
| பொறை | பாரம் , சுமை ; கனம் ; மலை ; சிறுகுன்று ; கல் ; பூமி ; பொறுமை ; அடக்கம் ; கருப்பம் ; வலிமை . |
| பொறைநிலை | மனத்தை ஒருவழி நிறுத்துவதான எண்வகை யோகத்துள் ஒன்று . |
| பொறைமை | காண்க : பொறுமை . |
| பொறையன் | சுமப்பவன் ; சேரன் ; தருமராசன் . |
| பொறையாட்டி | பொறுமையுடையவள் ; பலிகொடுக்கும் பூசாரிப்பெண் . |
| பொறையாளன் | அடக்கமுடையான் ; தருமபுத்திரன் . |
| பொறையிலான் | பொறுமையில்லாதவன் ; வேடன் . |
| பொறையுயிர்த்தல் | இளைப்பாறும்படி சுமையிறக்குதல் ; மகப்பெறுதல் , ஈனுதல் . |
| பொன் | சாதரூபம் , கிளிச்சிறை , ஆடகம் , சாம்பூநதம் என்னும் நான்கு வகைப்பட்ட தங்கம் ; உலோகம் ; இரும்பு ; செல்வம் ; அணிகலன் ; திருமங்கலியம் ; பொன்நாணயம் ; மேருமலை ; பொலிவு ; பசலை ; ஒளி ; அழகு ; ஏற்றம் ; திருமகள் ; வியாழன் ; சூரியன் ; பெண்குறி . |
| பொன்காத்தபூதம் | புதையல் காத்த பூதம் ; பயன்படுத்தாது பொருளைப் பூட்டிவைத்துக் காப்பவன் . |
| பொன்செய்கொல்லன் | காண்க : பொற்கொல்லன் . |
| பொன்செய்தல் | நற்செயல் செய்தல் . |
| பொன்செய்புலவன் | தட்டான் ; பொன்னரிப்போன் . |
| பொன்ஞெகிழி | பரல்பெய்த பொற்சிலம்பு . |
| பொன்படுதல் | தோற்றப் பொலிவுறுதல் . |
| பொன்பாவை | திருமகள் . |
| பொன்புனைதல் | திருமங்கலியம் பூட்டி மணத்தல் . |
| பொன்பூணுதல் | நகையணிதல் . |
| பொன்மணல் | பொற்றுகள்கொண்ட மணல் . |
| பொன்மணி | பொன்னாலாகிய உருண்டைமணி ; பொன்மணியாலான அணிகலவகை . |
| பொன்மயம் | பொன்னிறமான பளபளப்பு . |
| பொன்மரம் | துறக்கத்துள்ள பொன்மயமான மரம் . |
| பொன்மலை | காண்க : பொன்வரை ; முப்புரங்களுள் ஒன்று : ஓர் ஊர் . |
| பொன்மலைவல்லி | பார்வதிதேவி . |
| பொன்மழை | புட்கலாவர்த்தம் என்னும் முகில் பொழியும் சொன்னமழை . |
| பொன்மனம் | உயர்ந்த உள்ளம் . |
| பொன்மாலை | கழுத்தணிவகை . |
| பொன்மாளிகை | அரசன் தங்கும் ஆடகமாடம் . |
| பொன்முலாம் | பொன்பூச்சு . |
| பொன்மெழுகு | பொன்னுரை எடுக்கும் மெழுகு . |
| பொன்மை | பொன்னிறம் . |
| பொன்வண்டு | பொன்னிறமுள்ள வண்டுவகை . |
| பொன்வரி | பழைய வரிவகை . |
| பொன்வரை | மாமேருமலை ; அத்தகிரி ; இமயமலை . |
| பொன்வாணிகர் | தங்கம் விற்பவர் . |
| பொன்வாய்ப்புள் | சிச்சிலிக்குருவி . |
| பொன்வித்து | நாகமணல் . |
| பொன்வில்லி | மேருவை லில்லாகக்கொண்ட சிவபிரான் . |
| பொன்விலை | ஏற்றமான விலை . |
| பொன்விலைப்பாவையர் | காண்க : பொதுமகள் . |
| பொன்விலைமகளிர் | காண்க : பொதுமகள் . |
| பொன்விழா | ஐம்பதாம் ஆண்டுக் கொண்டாட்டம் . |
| பொன்வினைசெய்வோர் | காண்க : பொற்கொல்லன் . |
| பொன்வினைமாக்கள் | காண்க : பொற்கொல்லன் . |
| பொன்றக்கெடுதல் | முற்றவும் அழிதல் . |
| பொன்றாவல்லி | சீந்திற்கொடி . |
| பொன்றுதல் | அழிதல் ; இறத்தல் ; தவறுதல் ; பார்வை முதலியன குறைதல் . |
| பொன்றொடுதல் | பொன்னைத் தொட்டுச் சூளுறுதல் . |
| பொன்னகர் | பொன்மயமான அமராவதி ; சிவலோகம் . |
| பொன்னகர்க்கிறைவன் | இந்திரன் . |
| பொன்னகர்ச்செல்வன் | இந்திரன் . |
| பொன்னகரம் | காண்க : பொன்னகர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 821 | 822 | 823 | 824 | 825 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொறுத்தல் முதல் - பொன்னகரம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பொறுமை, பொற்கொல்லன், திருமகள், தங்கம், திருமங்கலியம், பொன்மயமான, பொதுமகள், இந்திரன், பொன்னகர், அழிதல், என்னும், பொன்வரை, அமைதியானவன், பொறுப்புக்காரன், கொடுத்தல், இளக்காரம், சகித்தல், பொறுப்புக்கட்டுதல், செய்தல், பொறுத்தல், சாந்தமுள்ளவன், அடக்கம், பாரம், ஒன்று

