தமிழ் - தமிழ் அகரமுதலி - பொலிவீடு முதல் - பொற்சரிகை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பொலிவீடு | கோயிற்செலவுகளுக்கு விடப்படும் ஊர் . |
| பொலிவு | அழகு ; முகமலர்ச்சி ; தோற்றப் பொலிவு ; செழிப்பு ; பருமை ; மிகுதி ; எழுச்சி ; பொன் ; வெறுந்தோற்றம் ; புணர்ச்சி . |
| பொலிவுமங்கலம் | மன்னவன் மகிழப் பிறந்த மகனைப் பலருங் கொண்டாடுதலைக் கூறும் புறத்துறை . |
| பொலிவேடு | காண்க : பொலிவீடு . |
| பொலுகுதல் | அதிகப்படுதல் ; நீர் ஒழுகுதல் . |
| பொலுபொலெனல் | உதிர்தற்குறிப்பு ; நொறுங்கு தற்குறிப்பு . |
| பொழி | வயல்வரம்பு ; கணு ; உரிக்கப்பட்டது ; கடலுக்கும் கழிநீர்நிலைக்கும் இடையிலுள்ள சிறுகரை ; எல்லை . |
| பொழிதல் | மழைபெய்தல் ; மிகச்செலுத்துதல் ; வரையின்றிக் கொடுத்தல் ; தட்டுத்தடங்கலின்றிப் பேசுதல் ; நிறைந்தொழுகுதல் ; நிறைதல் ; தங்குதல் . |
| பொழிப்பு | காண்க : பொழிப்புரை ; பொழிப்புத்தொடை ; நூற்பதிகம் ; குறிப்பு ; அனுமானம் . |
| பொழிப்புத்திரட்டுதல் | பொதுவான திரண்ட கருத்துப் பொருளைக் கூறுதல் . |
| பொழிப்புத்தொடை | அளவடியுள் முதற்சீர்க் கண்ணும் மூன்றாஞ் சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது . |
| பொழிப்புரை | பொருளைத் தொகுத்துரைக்கும் உரை . |
| பொழில் | சோலை ; பூந்தோட்டம் ; பெருமை ; உலகம் ; நாடு ; நாட்டின் பகுதி . |
| பொழிவு | பொழிகை ; ஆதாயம் ; நிறைவு ; விருத்தி . |
| பொழுதறுதி | சூரியன் மறையும் வேளை ; முழு நாளும் . |
| பொழுதிருக்க | சூரியன் மறைவதற்குமுன் . |
| பொழுதிற்கூடல் | காண்க : பொழுதொடுபுணர்தல் . |
| பொழுதிறங்குதல் | சூரியன் மறைதல் . |
| பொழுது | காலம் ; தக்க சமயம் ; வாழ்நாள் ; கணம் ; சிறுபொழுது பெரும்பொழுதுகள் ; சூரியன் . |
| பொழுதுசாய்தல் | காண்க : பொழுதிறங்குதல் . |
| பொழுதுபடுதல் | காண்க : பொழுதிறங்குதல் . |
| பொழுதுபோக்கு | பராக்கு ; காலங்கழிக்கை ; இளைப்பாறும்பொருட்டு விளையாடுகை . |
| பொழுதுபோக்குதல் | காலங்கழித்தல் ; சோம்பிக் கழித்தல் . |
| பொழுதுபோதல் | சூரியன் மறைதல் ; காலங் கழிக்கை . |
| பொழுதுவணங்கி | சூரியகாந்திப்பூ . |
| பொழுதுவிடிதல் | சூரியன் தோன்றும் காலம் ; காலம் . |
| பொழுதொடுபுணர்தல் | வணிகர் எண்குணத்தொன்றான வினைகளைக் காலத்துக்கேற்பக் கொண்டு நடத்துகை . |
| பொழுதோடு | காண்க : பொழுதிருக்க ; தகுதியான காலத்தில் . |
| பொள் | துளை ; விரைவுக்குறிப்பு . |
| பொள்ளல் | துளைத்தல் ; பொளிதல் ; துளை ; மரப்பொந்து ; அம்மைவடு ; அப்பவர்க்கம் ; கொப்புளம் ; குற்றம் . |
| பொள்ளாமணி | துளையிடாத மணி ; குற்றமற்ற மணி ; மாசற்ற பரம்பொருள் . |
| பொள்ளுதல் | துளைத்தல் ; கிழிதல் ; பொளிதல் ; கொப்புளம் உண்டாதல் . |
| பொள்ளை | தொளை . |
| பொள்ளெனல் | விரைவுக்குறிப்பு . |
| பொளி | உளியாலிட்ட துளை ; மண்வெட்டியின் வெட்டு ; பாய்முடைதற்கு வகிர்ந்து வைக்கும் ஓலை ; காண்க : பொளிமண் . |
| பொளித்தல் | துளைசெய்தல் ; கிழித்தல் . |
| பொளிதல் | உளியாற் கொத்துதல் ; பிளத்தல் ; இழத்தல் ; துளைசெய்தல் ; ஓட்டையாதல் ; பள்ளமாதல் . |
| பொளிமண் | மண்வெட்டியாற் புல்லோடு சேர்த்தெடுத்த வரப்பு மண் . |
| பொற்கசை | காண்க : பொற்கம்பி . |
| பொற்கட்டி | தங்கக்கட்டி . |
| பொற்கணக்கு | பொன்னிறையளவு . |
| பொற்கம்பி | தங்கக்கம்பி . |
| பொற்கலசம் | கோபுரம் முதலியவற்றின்மேல் வைக்கும் பொன்னாலாகிய கும்பம் ; பொற்பாண்டம் . |
| பொற்கலம் | பொற்பாண்டம் ; பொன்னாலியன்ற அணிகலன் . |
| பொற்கலன் | பொற்பாண்டம் ; பொன்னாலியன்ற அணிகலன் . |
| பொற்கலனிருக்கை | காண்க : பொற்பண்டாரம் . |
| பொற்காசு | பொன்நாணயம் . |
| பொற்காரை | பொன்னாலான கழுத்தணிவகை . |
| பொற்கிழி | சீலையின் முடிந்த நிதிப்பொதி . |
| பொற்கூடம் | இமயமலைக்கு வடக்கேயுள்ள ஏமகூட மலை . |
| பொற்கெனல் | பொன்னிறமுடையதாதற் குறிப்பு . |
| பொற்கொல்லன் | தட்டான் . |
| பொற்கோள் | வியாழன் . |
| பொற்சபை | சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலம் . |
| பொற்சரிகை | ஆடைக்கரை முதலியவற்றிற் சேர்க்கப்படும் பொன்னால் அமைத்த இமை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 819 | 820 | 821 | 822 | 823 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொலிவீடு முதல் - பொற்சரிகை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சூரியன், பொழுதிறங்குதல், துளை, பொளிதல், பொற்பாண்டம், காலம், துளைசெய்தல், பொளிமண், வைக்கும், பொற்கம்பி, பொலிவு, அணிகலன், பொன்னாலியன்ற, கொப்புளம், பொழிப்புரை, மறைதல், குறிப்பு, பொழுதொடுபுணர்தல், பொலிவீடு, பொழிப்புத்தொடை, துளைத்தல், விரைவுக்குறிப்பு, பொழுதிருக்க

