தமிழ் - தமிழ் அகரமுதலி - பொற்சிலை முதல் - பொறுக்குதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பொற்சிலை | பொன்னாலான பொம்மை ; மகாமேரு . |
| பொற்சின்னம் | போருக்குச் செல்லும் வீரர் வாயிலிட்டுக்கொள்ளும் பொன்துண்டு . |
| பொற்சீந்தில் | சீந்தில்வகை . |
| பொற்சுண்ணம் | விழாக்களில் மக்கள் உடலின் மீது தூவப்படும் நறுமணச் சுண்ணம் ; அலங்காரமாக உடலில் அப்பிக்கொள்ளுதற்குரிய பொற்றூள் . |
| பொற்சுண்ணமிடித்தல் | மணப்பண்டங் கலந்து மஞ்சள் இடிக்கை . |
| பொற்சூட்டு | நெற்றிப்பட்டம் . |
| பொற்ப | பொலிவுபெற ; ஓர் உவமவுருபு . |
| பொற்படி | பொன்னுலகம் . |
| பொற்படை | குதிரை , யானை முதலியவற்றின் மேல¦டு . |
| பொற்பண்டாரம் | பொன்னும் பொற்கலங்களும் வைக்கும் நிதி அறை . |
| பொற்பணிதி | பொன்னணி . |
| பொற்பாதம் | திருவடி . |
| பொற்பாவை | காண்க : பொற்சிலை ; அழகிய பெண் . |
| பொற்பாளம் | பெரிய பொற்கட்டி . |
| பொற்பித்தல் | அலங்கரித்தல் . |
| பொற்பிதிர் | பசலை . |
| பொற்பு | அழகு ; பொலிவு ; மிகுதி ; தன்மை ; ஒப்பனை . |
| பொற்புவி | பொன்னுலகம் . |
| பொற்புறுத்துதல் | அழகுபடுத்தல் . |
| பொற்பூ | பொன்மலர் ; அரசர் பாணர்க்கு அளிக்கும் தாமரை வடிவான பொன்னணிகல வகை . |
| பொற்பூச்சு | பொன்முலாம் பூசுகை ; பொன்னின் ரேக்கு . |
| பொற்பொது | காண்க : பொற்சபை . |
| பொற்ற | பொன்னாலாகிய ; சிறந்த . |
| பொற்றகடு | பொன்னின் தகடு ; காண்க : பொற்சின்னம் . |
| பொற்றாப்பு | மயிலாப்பூர் சிவன்கோயில் திருவிழாக்களுள் ஒன்று ; பொன்வடத்தால் அமைந்த ஊசல் திருவிழா . |
| பொற்றாமரை | பொன்மயமான தாமரை ; மதுரைக் கோயிலில் உள்ள நீர்நிலை ; காண்க : பொற்பூ . |
| பொற்றாலம் | பொன்னுலகம் ; பொன்னாலான தட்டு . |
| பொற்றாலி | பொன்னால் செய்யப்பெற்ற தாலி ; மனைவி . |
| பொற்றேரை | காண்க : பொற்றோரை . |
| பொற்றை | சிறுமலை ; கற்பாறை ; சிறுதூறு ; காடு . |
| பொற்றொடி | பொன்னாலாகிய தோள்வளை ; பொன் தோள்வளை அணிந்த பெண் . |
| பொற்றோரை | இடையில் அணியும் பொன்வடம் . |
| பொறாமை | பிறர் செல்வ முதலியவற்றைக் கண்டு மனங்கொளாமை ; பொறுமையின்மை . |
| பொறி | வரி , கோடு , புள்ளி ; தழும்பு ; அடையாளம் ; எழுத்து ; இலாஞ்சனை ; விருது ; உயர்ந்த உடல் இலக்கணம் ; வண்டு ; பீலி ; தேமல் ; பதுமை ; விதி ; கன்னப்பொருத்து ; மூட்டுவாய் ; மெய் , வாய் , கண் , மூக்கு , செவி என்னும் ஐம்பொறி ; ஆண்குறி ; மனம் ; அறிவு ; அனற்றுகள் ; ஒளி ; எந்திரம் ; மதிலுறுப்பு ; மரக்கலம் ; விரகு ; நெற்றிப்பட்டம் ; திருமகள் ; செல்வம் ; பொலிவு ; முன்வினைப் பயன் ; திரட்சி ; ஊழ் . |
| பொறிகலங்குதல் | அறிவு மயங்குதல் . |
| பொறிசிதறுதல் | தீப்பொறி பறத்தல் ; காண்க : பொறிகலங்குதல் . |
| பொறிசிந்துதல் | தீப்பொறி கக்குதல் ; மினுமினுத்தல் . |
| பொறித்தல் | இலாஞ்சனையிடுதல் ; எழுதுதல் ; ஓவியம் வரைதல் ; தெறித்தல் ; பறிதல் ; கலைத்தல் ; தீச்சுடர் சிதறுதல் ; அழுந்துதல் . |
| பொறிதல் | பறிதல் ; தீச்சுடர் சிதறுதல் ; சறுக்குதல் ; சரிதல் ; விழப்புகுதல் ; கலைதல் . |
| பொறிதொலைத்தல் | ஒரு செயலை மனமின்றித் தீராக் கடமையாக முடித்தல் . |
| பொறிப்பு | பறிகை ; எழுதுகை . |
| பொறிபறத்தல் | தீப்பொறி சிதறுகை ; தீப் பறக்கப் பார்க்கை . |
| பொறிமுதல் | இந்திரியங்களின் தலைவனாகிய ஆன்மா . |
| பொறியற்றார் | கீழோர் . |
| பொறியறை | அறிவற்றவர் ; திருவிலி . |
| பொறியிலார் | கீழ்மக்கள் . |
| பொறியிலி | அறிவிலி ; உறுப்புக்குறையுடையவர் ; நற்பேறற்றவர் . |
| பொறியொற்றோலை | முத்திரையிட்ட ஓலைக்கடிதம் . |
| பொறிவாயில் | புலன் . |
| பொறிவாயிற்காட்சி | புலன்களால் அறியும் அறிவு . |
| பொறிவு | பறிகை ; சறுக்கல் . |
| பொறிவைத்தல் | வலைவீசுதல் . |
| பொறுக்குதல் | ஆய்ந்தெடுத்தல் ; அங்குமிங்கும் சிதறிய பொருளைத் தெரிந்தெடுத்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 820 | 821 | 822 | 823 | 824 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொற்சிலை முதல் - பொறுக்குதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பொன்னுலகம், தீப்பொறி, அறிவு, பொறிகலங்குதல், தோள்வளை, பொற்றோரை, சிதறுதல், தீச்சுடர், பறிகை, பறிதல், பொன்னின், நெற்றிப்பட்டம், பொற்சின்னம், பொன்னாலான, பெண், பொலிவு, பொற்சிலை, தாமரை, பொற்பூ, பொன்னாலாகிய

