முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பொன்னஞ்சிலம்பு முதல் - போக்கியல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பொன்னஞ்சிலம்பு முதல் - போக்கியல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பொன்னஞ்சிலம்பு | காண்க : பொன்வரை . |
| பொன்னடர் | தகட்டுப்பொன் . |
| பொன்னணி | தங்கநகை . |
| பொன்னணிதல் | காண்க : பொன்புனைதல் . |
| பொன்னத்துப்பெட்டி | தாலி , கூறை வைத்துக் கொண்டுபோகும் பெட்டி . |
| பொன்னப்பிரகம் | ஓர் அப்பிரகவகை . |
| பொன்னம்பர் | ஒரு மணப்பண்டவகை . |
| பொன்னம்பலம் | பொன்னால் அமைந்த கூடம் ; சிதம்பரத்திலுள்ள பொற்சபை . |
| பொன்னரி | கிண்கிணி முதலியவற்றினுள் இடும் பொற்பரல் . |
| பொன்னரித்தல் | வேறு பொருள்களினின்றும் தங்கத்தைப் பிரித்தல் . |
| பொன்னரிமாலை | ஒரு கழுத்தணிவகை . |
| பொன்னலரி | காண்க : ஈழத்தலரி ; அலரிவகை . |
| பொன்னவன் | பொன்போல் அருமையானவன் ; வியாழன் ; இரணியகசிபு . |
| பொன்னறை | பொற்பேழை ; அரசன் தங்கும் பொன்மண்டபம் ; நிதி அறை . |
| பொன்னன் | பொன்னுடையவன் ; காண்க : பொன்னவன் ; அருகக்கடவுள் . |
| பொன்னாகத்தான் | இரணியகசிபு . |
| பொன்னாங்கண்ணி | ஒரு பூடுவகை . |
| பொன்னாங்காணி | ஒரு பூடுவகை . |
| பொன்னாங்கொட்டை | பூவந்திக்கொட்டை . |
| பொன்னாசி | குருதிவடியும் மூக்கு ; ஆண்குறி . |
| பொன்னாசை | பொருளில் வைக்கும் பற்று . |
| பொன்னாட்சி | வியாழக்கிழமை . |
| பொன்னாடை | பட்டுக்கரையுள்ள ஆடை . |
| பொன்னாம்பழம் | காண்க : நெய்க்கொட்டான் , ஒரு மரவகை . |
| பொன்னாவிரை | ஒரு செடிவகை . |
| பொன்னி | காவேரி ஆறு ; எட்டாம் பாட்டன் ; குருதிவடியும் மூக்கு . |
| பொன்னித்துறைவன் | சோழன் . |
| பொன்னிநாடன் | சோழன் . |
| பொன்னிநாடு | சோழநாடு . |
| பொன்னிமிளை | தாதுப்பொருள்வகை . |
| பொன்னிலக்கம் | எண் வாய்பாடு ; பொன்னிறை வாய்பாடு . |
| பொன்னிலம் | தேவருலகம் . |
| பொன்னிற்பொதிதல் | பொன்போலப் பேணிக்கொள்ளுதல் . |
| பொன்னுக்குவீங்கி | கூகைக்கட்டு , கன்னம் வீங்கும் நோய் . |
| பொன்னுடம்பு | தேவ உடல் ; பெண்குறி . |
| பொன்னுரை | உரைத்த பொன்னின் தேய்மானம் ; ஒரு நெல்வகை . |
| பொன்னுலகம் | தேவருலகம் ; காண்க : பொன்னெயில் வட்டம் . |
| பொன்னுலகாளி | இந்திரன் . |
| பொன்னுலகு | காண்க : பொன்னுலகம் . |
| பொன்னூசல் | பொன்னாலாகிய ஊஞ்சல் . |
| பொன்னூல் | பொற்கம்பி ; கழுத்தணிவகை ; பொற்பூணூல் . |
| பொன்னெயில்வட்டம் | தேவர்களால் நிறுவப்பட்ட சினாலயம் . |
| பொன்னெயிற்கோன் | அருகக்கடவுள் . |
| பொன்னெழுத்து | ஒரு துகில்வகை ; அழகான எழுத்து ; சிறந்த எழுத்து . |
| பொன்னேர் | சித்திரைப் பட்டத்தில் நல்ல நாளில் முதல் முறையாக உழுதல் . |
| பொன்னேர்க்கட்டு | சித்திரைப் பட்டத்தில் நல்ல நாளில் முதல் முறையாக உழுதல் . |
| பொன்னேர்ப்பூட்டு | சித்திரைப் பட்டத்தில் நல்ல நாளில் முதல் முறையாக உழுதல் . |
| பொன்னோர் | தேவர்கள் . |
| பொன்னோலை | மகளிர் காதணிவகை . |
| போ | ஓர் உயிர்மெய்யெழுத்து (ப்+ஒ) ; ஓர் அசைச்சொல் ; தெரிநிலை வினைப்பகுதி . |
| போக்கடி | இழக்கை ; மாற்று ; பொருளாதரவு ; தன்விருப்பு ; புகல் ; வாய்ப்பு . |
| போக்கடித்தல் | இழத்தல் ; வீணாக்குதல் ; விலக்குதல் ; போகச்செய்தல் . |
| போக்கடியறுதல் | கதியில்லையாதல் ; செயலறுதல் . |
| போக்கணம் | இலச்சை ; கட்டுச்சோறு ; புகல் . |
| போக்கம் | பொலிவு . |
| போக்கறுதல் | குற்றம் நீங்குதல் ; கதியறுதல் . |
| போக்கறுவான் | போக்கிடமில்லாதவன் . |
| போக்கன் | வழிச்செல்வோன் ; பரதேசி ; பயனற்றவன் ; கொடியன் . |
| போக்காடு | பாவம் போக்கலுக்காகக் காட்டுக்குப் போகவிடப்படும் ஆட்டுக்கடா ; சாவு . |
| போக்காளி | இளமையில் இறந்தவர் ; உதவாதவன் . |
| போக்கி | பின்பு ; தவிர ; பரதேசி . |
| போக்கிடம் | ஒதுக்கிடம் ; புகலிடம் . |
| போக்கியதார் | அனுபவ ஒற்றிக்காரன் . |
| போக்கியப்பொருள் | நுகர்ச்சிக்குரிய பண்டம் . |
| போக்கியம் | இன்பநுகர்வுக்குரியது ; கருமானுபவம் ; செல்வம் ; ஒற்றியுரிமையின் வருவாய் ; ஒற்றியுரிமை ; கன்மமலத்துள் ஒன்று ; செலவு செய்யும் பொருள் . |
| போக்கியல் | கலிப்பா உறுப்புகளுள் ஒன்றாகிய சுரிதகம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 822 | 823 | 824 | 825 | 826 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொன்னஞ்சிலம்பு முதல் - போக்கியல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பட்டத்தில், சித்திரைப், நல்ல, நாளில், முறையாக, உழுதல், பரதேசி, எழுத்து, புகல், பொன்னுலகம், தேவருலகம், இரணியகசிபு, பொன்னவன், கழுத்தணிவகை, அருகக்கடவுள், பூடுவகை, சோழன், மூக்கு, குருதிவடியும், வாய்பாடு

