தமிழ் - தமிழ் அகரமுதலி - போக்கிரி முதல் - போங்கு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| போக்கிரி | கொடியவன் . |
| போக்கிலி | கதியற்றவன் ; கொடியவன் . |
| போக்கு | போகச்செய்கை ; வழி ; சுரங்கவழி ; நடை ; மீட்சி ; புகல் ; இடம் ; நிலத்தின் தரம் ; மனச்சாய்வு ; விருப்பம் ; சாக்கு ; பழக்கம் ; நடைமுறை ; ரீதி ; காண்க : போக்கியல் ; நீர் முதலியவற்றின் ஓட்டம் ; மலம் முதலியன வெளிப்படுகை ; கேடு ; செலவு ; இறப்பு ; குற்றம் ; கழிப்புக்கழிக்கை ; மரக்கன்று ; செல்லுகை . |
| போக்குக்காட்டுதல் | வழிகாட்டுதல் ; சாக்குச்சொல்லுதல் ; குறிப்புக்காட்டுதல் . |
| போக்குச்சொல்லுதல் | சாக்குக் காட்டுதல் . |
| போக்குதல் | போகச்செய்தல் ; செய்தல் ; செய்து முடித்தல் ; கொடுத்தல் ; உணர்த்தல் ; உட்புகுத்துதல் ; மெலிவுறச்செய்தல் ; இல்லாமற் செய்தல் ; கழித்தல் ; அழித்தல் . |
| போக்குநீக்கு | பழக்கம் ; போக்குவரத்து ; பாட்டை ; புகலிடம் ; விரகு . |
| போக்குவரத்து | போதலும் வருதலும் ; ஊடாடுகை ; விருந்தினர் ; வரவுசெலவு . |
| போக்குவரவு | காண்க : போக்குவரத்து ; இறத்தலும் பிறத்தலும் ; ஒரு துறை ; பட்டா மாறுகை . |
| போக்குவீடு | செல்லவிடுகை ; சொற்செயல்களால் உணர்ச்சிக்கு வழிவிடுகை . |
| போக | தவிர ; பகுதிப்பொருளில்வரும் ஒரு துணைச்சொல் . |
| போகக்கலப்பை | இன்பநுகர்ச்சிக்குரிய பலவகைப் பண்டம் . |
| போகக்கலவை | உயர்ந்த கலவைச் சாந்து . |
| போககாரகன் | சாதகனின் இன்பங்களைக் குறிக்கும் சுக்கிரன் . |
| போகசிவன் | சதாசிவன் . |
| போகடுதல் | போகவிடுதல் ; கழித்தல் ; விலகுதல் . |
| போகண்டன் | ஐந்தாண்டு தொடங்கிப் பதினைந்தாண்டிற் குட்பட்டவன் . |
| போகணி | ஒரு பாண்டம் . |
| போகத்தானம் | உடல் ; காண்க : ஆனந்தமயகோசம் ; இன்பங்களைக் குறிக்கும் ஏழாமிடம் . |
| போகநீர் | சுக்கிலம் . |
| போகப்போக | காலம் செல்லச்செல்ல . |
| போகபதி | தலைவன் , அதிபதி . |
| போகபுவனம் | வினைப்பயனை நுகரும் நல்லுலகம் . |
| போகபூமி | விளைநிலம் ; அறுவகைப்பட்ட போகநுகர்ச்சித் தானம் ; துறக்கம் ; முப்பத்தாறு தத்துவங்கள் . |
| போகபோக்கியம் | நுகர்ச்சிப்பொருள் ; செல்வம் நுகர்கை . |
| போகம் | இன்பம் ; நுகர்வு ; எண்வகைப் போகம் ; புணர்ச்சி ; புசிக்கை ; செல்வம் ; விளைவு ; கூலி ; பாம்பினுடல் ; பாம்பின்படம் ; பாம்பு ; நால்வகைப் படையை ஒன்றுக்குப்பின் ஒன்றாக நிறுத்தும் அணிவகுப்புவகை ; நிலவனுபவம் ; கடவுளின் அவத்தை மூன்றனுள் ஞானமும் கிரியையும் சமமாகவுள்ள நிலை ; பின்னத்தின் மேலெண் . |
| போகம்பண்ணுதல் | சேர்தல் . |
| போகமகள் | இன்பநுகர்ச்சிக்குரிய பெண் ; மனைவி ; வைப்பாட்டி ; கணிகை . |
| போகமீன்றபுண்ணியன் | சிவபெருமான் . |
| போகர் | உலக இன்பங்களை நுகர்பவர் ; ஒரு சித்தர் . |
| போகல் | உயர்ச்சி ; நீளம் . |
| போகவழி | நாகலோகத்தின் தலைநகரம் ; நல்லனுபவமுடைய பெண் . |
| போகவாஞ்சை | புணர்ச்சிவிருப்பு . |
| போகவிச்சை | புணர்ச்சிவிருப்பு . |
| போகவிடயம் | புணர்ச்சியின்பம் . |
| போகவிடுதல் | நழுவவிடுதல் . |
| போகாந்தராயம் | துய்த்தற்குரிய இன்பங்களை விலக்குகை . |
| போகாப்புல் | செங்கழுநீர்போன்ற களைய முடியாத களைவகை . |
| போகாறு | பொருள் செலவாகும் வழி . |
| போகி | சதாசிவன் ; இந்திரன் : சுக்கிரன் ; பாம்பு ; நல்லனுபவமுடையான் ; இன்பந்துய்ப்போன் ; தலைமைக்காரன் ; காண்க : போகிப்பண்டிகை ; சிவிகை சுமப்போன் ; வணிகன் ; நாவிதன் . |
| போகித்தல் | இன்பதுன்பங்களை நுகருதல் ; வினைப்பயன் நுகர்தல் ; புணர்தல் . |
| போகிப்பண்டிகை | பொங்கற் பண்டிகைக்கு முந்தின நாளில் கொண்டாடும் விழா . |
| போகில் | பறவை ; பூவரும்பு ; கொப்பூழ் . |
| போகின்றகாலம் | நிகழ்காலம் . |
| போகு | நெடுமை ; உயரம் ; நீளம் . |
| போகுகாலம் | எதிர்காலம் . |
| போகுடி | ஊரைவிட்டுப்போன குடும்பம் ; வாரிசில்லாமல் மறைந்துபோனவருடைய சொத்து . |
| போகுதல் | காண்க : போதல் . |
| போகுயர்தல் | வளர்தல் ; உயர்தல் . |
| போகூழ் | இழக்கச்செய்யும் விதி . |
| போகை | போதல் ; செலவு . |
| போகொட்டுதல் | போகவிடுதல் . |
| போங்கம் | மஞ்சாடிமரவகை . |
| போங்காலம் | துன்புறும் வேளை ; இறக்குங்காலம் ; அழிவுகாலம் . |
| போங்கு | நடைமுறை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 823 | 824 | 825 | 826 | 827 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
போக்கிரி முதல் - போங்கு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, போகவிடுதல், போக்குவரத்து, பெண், போகம், பாம்பு, செல்வம், நீளம், போதல், போகிப்பண்டிகை, புணர்ச்சிவிருப்பு, இன்பங்களை, சுக்கிரன், செய்தல், செலவு, நடைமுறை, பழக்கம், கழித்தல், இன்பநுகர்ச்சிக்குரிய, கொடியவன், குறிக்கும், இன்பங்களைக், சதாசிவன்

