தமிழ் - தமிழ் அகரமுதலி - பொதுமொழி முதல் - பொய்படுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பொதுமொழி | சிறப்பில்லாத சொல் ; குறிப்பான பொருளில்லாத சொல் ; பொதுவான சொல் ; பிரியாது நின்றவிடத்து ஒரு பொருளும் பிரித்தவிடத்து வேறு பொருளும் பயக்கும் சொல் ; பொதுச்சொல் . |
| பொதுவசனம் | பலபொருள் தரும் ஒரு சொல் அல்லது தொடர் ; ஊரில் வழங்கும் பேச்சு ; குறிப்பான பொருளில்லாத சொல் ; பொதுப்படையான சொல் . |
| பொதுவர் | இடையர் ; பொதுமகளிர் ; நடுவர் . |
| பொதுவறிவு | சாதாரண அறிவு . |
| பொதுவறுசிறப்பு | தனக்கேயுரிய சிறப்பு . |
| பொதுவறுதல் | ஒருவனுக்கே யுரியதாதல் . |
| பொதுவனுமானம் | ஒன்று உள்ளது கொண்டு அதனுடன் காணப்படும் வேறொன்று உளது என்று கொள்ளும் அனுமானவகை . |
| பொதுவாக | சிறப்பித்துக் கூறாமல் ; ஒரு சார்பின்றி . |
| பொதுவாள் | காண்க : பொதுமனிதன் ; கோயில் விசாரணை செய்யும் மலையாளச் சாதியில் ஒரு பிரிவினர் . |
| பொதுவிதி | பொதுவான இலக்கணம் . |
| பொதுவியர் | இடைச்சியர் ; உழத்தியர் . |
| பொதுவில் | அம்பலம் . |
| பொதுவிலேவிடுதல் | ஒரு பொருளை எல்லோருக்கும் பயன்படும்படி நியமித்தல் ; பொருளைப் பாதுகாவாது விடுதல் . |
| பொதுவை | காண்க : பொதுமகள் . |
| பொதுளகரம் | தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான 'ள' என்னும் எழுத்து . |
| பொதுளுதல் | நெருங்குதல் ; நிறைதல் ; தழைத்தல் . |
| பொதை | புதர்ச்செடி . |
| பொந்தர் | ஒரு நீர்ப்புள்வகை ; பொந்து . |
| பொந்தி | உடல் ; பருமை ; மரவாள் . |
| பொந்திகை | மனநிறைவு , திருத்தி . |
| பொந்து | மரப்பொந்து ; எலிவளை ; பல்லி . |
| பொந்தை | உடல் ; சீலையோட்டை ; மயிர்ச்சிக்கு . |
| பொம்மல் | பொலிவு ; மிகுதி ; பருமன் ; கூட்டம் ; சோறு ; மகிழ்ச்சி ; பிரதிமை . |
| பொம்மலாட்டம் | பாவைக்கூத்து ; பொம்மைகளை வைத்தாட்டும் காட்சி ; மாயம் . |
| பொம்மலாட்டு | பாவைக்கூத்து ; பொம்மைகளை வைத்தாட்டும் காட்சி ; மாயம் . |
| பொம்மலி | பருத்தவள் . |
| பொம்முதல் | பொலிதல் ; மிகுதல் . |
| பொம்மெனல் | ஓர் ஒலிக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; அடர்ச்சிக்குறிப்பு . |
| பொம்மை | பாவை ; கைப்பிடிச்சுவர் . |
| பொய் | மாயை ; போலியானது ; உண்மையல்லாதது ; நிலையாமை ; உட்டுளை ; மரப்பொந்து ; செயற்கையானது ; சிறு சிறாய் . |
| பொய்க்க | பொய்பட ; மெதுவாய் . |
| பொய்க்கதை | கட்டுக்கதை ; கட்டிவிடப்பட்ட செய்தி . |
| பொய்க்கரி | காண்க : பொய்ச்சாட்சி . |
| பொய்க்கரிமாக்கள் | பொய்ச்சாட்சி கூறுபவர் . |
| பொய்க்கரியாளர் | பொய்ச்சாட்சி கூறுபவர் . |
| பொய்க்கால் | போலிக்கால் ; கால்களால் ஏறிச் செலுத்தும் கழி . |
| பொய்க்குரல் | போலிச்சத்தம் . |
| பொய்க்குழி | பார்வைக்கு மூடியதுபோன்றிருந்து கால் வைத்தால் உள்ளே ஆழ்த்துங் குழி ; கோலி விளையாட்டில் தனியே விடப்பட்ட குழி ; நாற்று நட்ட குழி . |
| பொய்க்கூடு | உடல் . |
| பொய்க்கை | ஒரு மீன்வகை . |
| பொய்க்கொண்டை | நெட்டியாற் செய்யப்பட்ட கொண்டைவகை . |
| பொய்க்கோலம் | உண்மை உருவை மறைக்கும் போலிவேடம் ; வஞ்சகம் . |
| பொய்கை | இயற்கையான நீர்நிலை ; நீர்நிலை ; கோட்டான் ; ஒரு நூலாசிரியர் ; பொய்கையாழ்வார் . |
| பொய்ச்சத்தியம் | பொய்யாகச் செய்யும் உறுதிமொழி . |
| பொய்ச்சாட்சி | காண்க : பொய்ச்சான்று ; பொய்ச்சாட்சிக்காரன் . |
| பொய்ச்சான்று | உண்மைக்கு மாறான சான்று . |
| பொய்ச்சான்றேறுதல் | பொய்ச்சாட்சி சொல்லுதல் . |
| பொய்ச்சீத்தை | பொய்யே பேசுங் கீழ்மகன் . |
| பொய்ச்சு | பழத்தின் குற்றம் . |
| பொய்ச்சுற்றம் | அன்பற்ற உறவு . |
| பொய்ச்சுற்றம்பேசுதல் | மனமார அன்றி உறவுமுறை கொள்ளுதல் . |
| பொய்ச்சூள் | பொய்யாணை . |
| பொய்த்தல் | பொய்யாதல் ; தவறுதல் ; பின்வாங்குதல் ; கெடுதல் ; பொய்யாய்ப் பேசுதல் ; வஞ்சித்தல் . |
| பொய்த்தலை | கன்னமிடுவோர் கன்னத்துளை வழியாய் உட்செலுத்தும் போலித் தலை . |
| பொய்த்தூக்கம் | குறையுறக்கம் ; கள்ளத்தூக்கம் . |
| பொய்தல் | பிடுங்கப்படுதல் ; துளைக்கப்படுதல் ; வீழ்த்துதல் . |
| பொய்ந்நீர் | கானல்நீர் . |
| பொய்ந்நெறி | தீயவழி . |
| பொய்ப்பத்திரம் | கள்ளச்சீட்டு . |
| பொய்ப்பாடு | தவறுகை ; பொய்ப்படுகை . |
| பொய்ப்பு | உண்மையற்றது . |
| பொய்ப்பூ | காய் பிடியாது உதிரும் முதற்பூ . |
| பொய்படுதல் | பொய்யாதல் ; பயன் விளையாது அழிந்திடுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 815 | 816 | 817 | 818 | 819 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொதுமொழி முதல் - பொய்படுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சொல், பொய்ச்சாட்சி, காண்க, பொதுவான, உடல், குழி, பொய்யாதல், மாயம், பொய்ச்சான்று, கூறுபவர், நீர்நிலை, காட்சி, பாவைக்கூத்து, பொருளும், பொருளில்லாத, குறிப்பான, செய்யும், பொந்து, பொம்மைகளை, மரப்பொந்து, வைத்தாட்டும்

