முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பொடித்தல் முதல் - பொதிந்துவைத்தல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பொடித்தல் முதல் - பொதிந்துவைத்தல் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
பொடித்தல் | துகளாக்குதல் ; கெடுத்தல் ; தோற்றுவித்தல் ; அரும்புதல் ; தோன்றுதல் ; விளங்குதல் ; வியர்வை அரும்புதல் ; புளகித்தல் ; பொடியாதல் . |
பொடிதல் | தூளாதல் ; கெடுதல் ; தீய்தல் ; ஒளி மங்குதல் ; சினங்கொள்ளுதல் ; கண்டித்தல் ; வெறுத்தல் . |
பொடிதூவுதல் | மரக்கறியில் மாப்பொடி கலத்தல் ; ஏமாற்றுதல் . |
பொடிப்பு | புளகம் ; காண்க : பொடுகு . |
பொடிப்போடுதல் | மூக்குள் புகையிலைத் தூளிடுதல் ; மாயப்பொடியிடுதல் . |
பொடிபடுதல் | உடைபடுதல் . |
பொடிபண்ணுதல் | தூளாக்குதல் ; துண்டித்தல் . |
பொடிபொட்டு | சிறியது ; பதரானது . |
பொடியல் | இரும்பில் துளைபோடுங் கம்மக்கருவி . |
பொடியன் | சிறுவன் ; புல்லன் ; அற்பன் . |
பொடியாடி | சிவபிரான் . |
பொடியாணி | சிற்றாணி . |
பொடியாதல் | அழிதல் . |
பொடியிழைப்புளி | இழைப்புளிவகை . |
பொடியீர் | இடுக்கிவகை . |
பொடிவு | சிதைவு ; வசவு . |
பொடிவெட்டி | பொன் , வெள்ளி முதலியன வெட்டுங் கத்தரிக்கோல்வகை . |
பொடிவைத்தல் | உலோகங்களைப் பற்றவைத்தல் ; தந்திரமாய்ப் பேசுதல் ; கோட்சொல்லுதல் . |
பொடுகன் | சிற்றுருவமுள்ளவன் . |
பொடுகு | தலைச்சுண்டு ; சிறுமை ; பூடுவகை . |
பொடுதலை | ஒரு பூடுவகை . |
பொடுதிலை | ஒரு பூடுவகை . |
பொடுபொடுத்தல் | வெடித்தல் ; துளித்தல் ; குறைதல் ; விரைவாய்ப் பேசுதல் ; வயிறிரைதல் ; கல் முதலியன ஒலியுடன் விழுதல் ; சினங்கொள்ளுதல் . |
பொடுபொடெனல் | ஓர் ஒலிக்குறிப்பு ; விரைந்து பேசுதற்குறிப்பு . |
பொண்டுதல் | கெட்டுப்போதல் . |
பொத்தகம் | மயிலிறகு ; புத்தகம் ; சித்திரப்படாம் ; நிலக்கணக்கு . |
பொத்தம்பொது | பொது . |
பொத்தல் | துளை ; துளைத்தல் ; மூடுதல் ; கடன் ; குற்றம் ; போத்தல் . |
பொத்தலடைத்தல் | சுவர் , கூரை முதலியவற்றிலுள்ள துளையையடைத்தல் ; கடன் தீர்த்தல் ; குற்றத்தை மறைத்தல் . |
பொத்தாறு | ஏர்க்கால் . |
பொத்தாறுக்கட்டை | ஏர்க்கால் . |
பொத்தி | நார்மடி ; சீலை ; மடல்விரியா வாழைப்பூ ; சோளக்கதிர் ; தானியக்கதிர் ; மணிவகை ; தோலுரியாத பனங்கிழங்கு ; அண்டம் ; ஒரு பழைய சோழநகர் ; வரால் ; பொது . |
பொத்திக்கரப்பான் | கரப்பான்வகை . |
பொத்தித்தேவாத்தி | நார்மடி . |
பொத்திதள்ளுதல் | வாழை முதலியன குலைபோடுதல் . |
பொத்திரம் | எறியாயுதம் . |
பொத்திலம் | மரப்பொந்து . |
பொத்துவைத்தல் | மறைத்தல் ; பத்திரப்படுத்துதல் . |
பொத்து | மூடுகை ; அடைப்பு ; பொத்தல் ; பொந்து ; வயிறு ; தவறு ; தீயொழுக்கம் ; பொய் ; கெவுளி . |
பொத்துதல் | புதைத்தல் ; வாய் , கண் முதலியவற்றை மூடுதல் ; விரலை மடக்கி மூடுதல் ; உள்ளங்கையை தைத்து மூடுதல் ; மூட்டுதல் ; தைத்தல் ; மறைத்தல் ; அடித்தல் ; தீமூட்டல் ; மாலைகட்டுதல் ; கற்பனைசெய்தல் ; கலத்தல் ; நிறைதல் . |
பொத்துப்படுதல் | தவறுதல் ; செயல் கைகூடாது தீமை பயத்தல் . |
பொத்துப்பொத்தெனல் | ஒலிக்குறிப்புவகை ; தடித்திருத்தற்குறிப்பு . |
பொத்துமான் | ஒரு மான்வகை . |
பொத்தெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
பொத்தை | துளை ; பருமையானது ; சிறுமலை ; சிறுதூறு ; கற்பாறை ; மலை ; கரிகாடு ; காடு ; உடம்பு ; கடன் ; குற்றம் ; மீன்வகை . |
பொத்தைக்கால் | யானைக்கால் . |
பொத்தையன் | தடித்தவன் . |
பொதி | மூட்டை ; நிறைவு ; பலபண்டம் ; நிதி ; சொற்பயன் ; ஒரு நிறையளவுவகை ; நீர்மப்பொருள் அளவுவகை ; நிலவளவுவகை ; பிணிப்பு ; கட்டுச்சோறு ; தொகுதி ; அரும்பு ; கொத்து ; மூளை ; உடல் ; தவிடு ; கரிகாடு ; மூங்கில் முதலியவற்றின் பட்டை ; குடையோலை ; பசு முதலியவற்றின் மடி ; பருமன் ; ஓலைக்குடை ; அம்பலம் ; பொதியமலை ; காய்ந்த நன்செய் . |
பொதிகாரன் | பொதிமாடு செலுத்துவோன் . |
பொதிகை | பொதியமலை . |
பொதிசோறு | கட்டுச்சோறு . |
பொதிதல் | நிறைதல் ; சேமித்தல் ; உள்ளடக்குதல் ; மறைத்தல் ; பிணித்தல் ; கடைப்பிடித்தல் . |
பொதிந்துவைத்தல் | இடைவிடாது மனத்துட் கொள்ளுதல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 813 | 814 | 815 | 816 | 817 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொடித்தல் முதல் - பொதிந்துவைத்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், மூடுதல், மறைத்தல், கடன், பூடுவகை, முதலியன, ஏர்க்கால், நார்மடி, குற்றம், நிறைதல், பொதியமலை, முதலியவற்றின், கட்டுச்சோறு, கரிகாடு, துளை, கலத்தல், சினங்கொள்ளுதல், பொடியாதல், பொடுகு, பேசுதல், பொத்தல், பொது, ஒலிக்குறிப்பு, அரும்புதல்