முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பொருட்படுத்துதல் முதல் - பொருள் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பொருட்படுத்துதல் முதல் - பொருள் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பொருட்படுத்துதல் | மதித்தல் . |
| பொருட்படுதல் | பயன்படுதல் . |
| பொருட்பிரபஞ்சம் | பிருதிவி முதல் நாதம் ஈறாக உள்ள தத்துவங்கள் . |
| பொருட்பின்வருநிலை | முன் வந்த பொருளே பின்னும் பல இடங்களில் வரும் அணி . |
| பொருட்பெண்டிர் | காண்க : பொதுமகள் . |
| பொருட்பெயர் | பொருளடியாகப் பிறந்த பெயர்ச்சொல் ; ஒரு பொருளுக்குரிய பெயர் . |
| பொருண்மன்னன் | குபேரன் . |
| பொருண்முடிவு | கருத்துமுடிவு ; முடிந்த கருத்து ; பயனிலை ; பொருள் முற்றிய வாக்கியம் . |
| பொருண்மை | பொருளின் தன்மை ; கருத்துப் பொருள் . |
| பொருண்மொழி | உபதேசமந்திரம் ; மெய்ச்சொல் . |
| பொருணயம் | நூலின் கருத்துநயம் . |
| பொருணான்கு | அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நால்வகைப்பட்ட உறுதிப்பொருள் . |
| பொருணி | கள் . |
| பொருணிலை | பயனிலை ; பொருளின் தன்மை . |
| பொருணூல் | அகப்பொருள்பற்றிய நூல் ; அர்த்தசாத்திரம் . |
| பொருத்தம் | இணக்கம் ; தகுதி ; பொருந்துகை ; உடன்படிக்கை ; மணமக்களின் சாதக இணக்கம் ; மனநிறைவு ; சரிபார்க்கை . |
| பொருத்தம்பார்த்தல் | மணமக்களின் சாதக இணக்கம் பார்த்தல் . |
| பொருத்தனை | பொருத்துகை . |
| பொருத்தினை | பொருத்துகை . |
| பொருத்து | இணைப்பு ; உடல்மூட்டு ; மரக்கணு ; ஒன்றுசேர்க்கை ; ஒப்பந்தம் ; மரத்தின் இணைப்பு ; கன்னப்பொட்டு . |
| பொருத்துதல் | பொருந்தச்செய்தல் ; உடன்படுத்துதல் ; கூட்டுதல் ; வேலைக்கமர்த்துதல் ; அமையச்செய்தல் ; இரு பொருள்களை இசைத்தல் ; போர்மூட்டுதல் ; விளக்கு முதலியன ஏற்றுதல் . |
| பொருதல் | போர்செய்தல் ; சூதாடுதல் ; மாறுபடுதல் ; வீசுதல் ; தடவுதல் ; ஒப்பாதல் ; தாக்குதல் ; கடைதல் ; முட்டுதல் ; பொருந்துதல் ; காண்க : தும்பை . |
| பொருதுதல் | ஒன்றுதல் ; போர்செய்தல் ; இணைத்தல் . |
| பொருந்தம் | காண்க : பொருநை . |
| பொருந்தர் | நெய்வோர் ; கூடை முதலியன முடைவோர் . |
| பொருந்தல் | பொருந்துதல் ; உடன்படுதல் . |
| பொருந்தலன் | பகைவன் . |
| பொருந்தவிடுதல் | சந்திபண்ணுதல் . |
| பொருந்தாமை | இணக்கமின்மை ; வெறுப்பு . |
| பொருந்தார் | பகைவர் . |
| பொருந்திவிடுதல் | முறிந்த எலும்பு முதலியன கூடுதல் ; ஒப்பந்தமாதல் . |
| பொருந்துதல் | மனம் இசைவாதல் ; தகுதியாதல் ; அமைதல் ; உடன்படுதல் ; நெருங்குதல் ; நிகழ்தல் ; பலித்தல் ; இயலுதல் ; கலத்தல் ; அடைதல் ; அளவளாவுதல் ; புணர்தல் . |
| பொருந்துமாறு | உத்தி , யுத்தி . |
| பொருநல் | காண்க : பொருநை . |
| பொருநன் | படைவீரன் ; திண்ணியன் ; அரசன் ; குறிஞ்சிநிலத் தலைவன் ; படைத்தலைவன் ; உவமிக்கப்படுபவன் ; தலைவன் ; ஏர்க்களத்தேனும் போர்களத்தேனும் சென்று பாடும் கூத்தன் ; நடிகன் . |
| பொருநை | தாமிரபரணியாறு ; ஆன்பொருநை ஆறு . |
| பொருநைத்துறைவன் | சேரன் ; பாண்டியன் . |
| பொருப்பரையன் | இமயமலை . |
| பொருப்பன் | குறிஞ்சிநிலத் தலைவன் ; குறிஞ்சி நில வேடன் ; பொதியமலைக்குரியவனான பாண்டியன் ; இமயமலை ; மலைக்கு உரியவன் . |
| பொருப்பு | பக்கமலை . |
| பொருப்புவில்லான் | சிவன் . |
| பொருப்பெறிந்தான் | கிரவுஞ்சமலையை வேலால் எறிந்த முருகக்கடவுள் . |
| பொருபுவி | பாலைநிலம் ; போர்க்களம் . |
| பொருபொருத்தல் | அறத் தீய்தல் ; முணுமுணுத்தல் . |
| பொருபொருப்பான் | ஒரு மரவகை . |
| பொருபொரெனல் | தீய்தற்குறிப்பு ; முணுமுணுத்தற்குறிப்பு . |
| பொருமல் | அச்சம் ; துன்பம் ; அழாது விம்முதல் ; பூரிப்பு ; பொறாமை ; வயிறூதும் நோய்வகை . |
| பொருமலி | தடித்தவள் . |
| பொருமிநாதம் | இரசகருப்பூரம் . |
| பொருமுகவெழினி | அரங்கின் இரண்டு வலத்தூணிடத்தும் பொருந்திய உருவுதிரை . |
| பொருமுதல் | துன்புறுதல் ; விம்மியழுதல் ; உப்புதல் ; பூரித்தல் ; பொறாமைப்படுதல் ; ஈரித்துப் பருத்தல் . |
| பொருவ | ஓர் உவமஉருபு . |
| பொருவிலி | ஒப்பிலி ; சிவபிரான் . |
| பொருவு | ஒப்பு . |
| பொருவுசாரம் | பொறாமை . |
| பொருவுதல் | ஒத்தல் ; நேர்தல் . |
| பொருள் | சொற்பொருள் ; செய்தி ; உண்மைக்கருத்து ; செய்கை ; தத்துவம் ; மெய்ம்மை ; நன்கு மதிக்கப்படுவது ; அறிவு ; கொள்கை ; அறம் ; பயன் ; வீடுபேறு ; கடவுள் ; பலபண்டம் ; பொன் ; மகன் ; தந்திரம் ; முலை ; உவமேயம் ; அருத்தாபத்தி ; அகமும் புறமுமாகிய திணைப்பொருள்கள் ; அர்த்தசாத்திரம் ; தலைமை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 817 | 818 | 819 | 820 | 821 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொருட்படுத்துதல் முதல் - பொருள் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பொருள், இணக்கம், பொருநை, தலைவன், பொருந்துதல், முதலியன, உடன்படுதல், குறிஞ்சிநிலத், பொறாமை, இமயமலை, பாண்டியன், போர்செய்தல், பொருத்துகை, தன்மை, பொருளின், பயனிலை, அறம், அர்த்தசாத்திரம், சாதக, மணமக்களின், இணைப்பு

