முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பொய்ம்மணல் முதல் - பொருட்டொடர்நிலைச் செய்யுள் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பொய்ம்மணல் முதல் - பொருட்டொடர்நிலைச் செய்யுள் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பொய்ம்மணல் | புதைமணல் . |
| பொய்ம்மை | பொய் ; மாயம் ; போலி . |
| பொய்முயக்கம் | அன்பிலாக் கூட்டம் . |
| பொய்மையாளர் | பொய்யர் . |
| பொய்யடி | போலியடி ; பொய்யால் பிறரை வஞ்சிக்கை ; அச்சுறுத்துகை . |
| பொய்யடிமை | போலிப்பத்தி . |
| பொய்யடிமையில்லாத புலவர் | சிவபிரானை வழிபடும் சங்கப் புலவர்களான தொகையடியார் . |
| பொய்யம்பு | விளையாட்டம்பு . |
| பொய்யவியல்செய்தல் | புழுக்குதல் . |
| பொய்யறை | பெட்டகத்தின் மறைவறை ; பார்வைக்கு மூடியதுபோன்றிருந்து கால் வைத்தால் உள்ளே ஆழ்த்தும் குழி . |
| பொய்யன் | பொய் பேசுவோன் . |
| பொய்யாடல் | வஞ்சகமில்லாத சிறுபிள்ளைகள் விளையாட்டு . |
| பொய்யாணை | காண்க : பொய்ச்சத்தியம் . |
| பொய்யாமை | பொய்பேசாமை ; நடுவுநிலைமை . |
| பொய்யாமொழி | என்றும் தவறாத சொல் ; உண்மையுரை ; திருக்குறள் ; வேதாகமம் ; தஞ்சைவாணன்கோவை ஆசிரியர் . |
| பொய்யாறு | காண்க : பொய்ந்நெறி . |
| பொய்யிகந்தோர் | முனிவர் . |
| பொய்யிடை | நுண்ணிய இடை . |
| பொய்யில்புலவன் | மெய்ஞ்ஞானி ; திருவள்ளுவர் . |
| பொய்யுகம் | கலியுகம் . |
| பொய்யுடல் | நிலையற்ற உடல் . |
| பொய்யுரம் | பொய்நின்ற ஞானம் . |
| பொய்யுறக்கம் | பொய்த்தூக்கம் . |
| பொய்யுறக்கு | பொய்த்தூக்கம் . |
| பொய்யுறங்குதல் | உறங்குவதுபோல் நடித்தல் . |
| பொய்வாழ்வு | நிலையற்ற வாழ்க்கை ; போலி ஒழுக்கமுள்ள வாழ்க்கை . |
| பொரி | நெல் முதலியவற்றின் பொரி ; பொரிக்கப்பட்டது ; பொரிக்கறி ; கரிந்த காடு ; எருமைக்கன்று ; நன்றாகச் சமைக்காத சோறு . |
| பொரிக்கஞ்சி | பொரிமாவால் செய்த கஞ்சி . |
| பொரிக்கறி | பொரியல் ; புளியிடாமற் சமைத்த கறிவகை . |
| பொரிகாரம் | வெண்காரம் ; படிக்காரம் . |
| பொரிச்சகுழம்பு | புளியில்லாமல் ஆக்கிய குழம்பு உணவு . |
| பொரித்தல் | பொரியச்செய்தல் ; வறுத்தல் ; கிழங்கு சுடுதல் ; அடைகாத்துக் குஞ்சுண்டாக்குதல் ; போக்குதல் ; தீய்த்தல் ; புளியில்லாமல் சமைத்தல் ; குறைந்த விலைக்கு விற்றல் . |
| பொரிதல் | பொரியாதல் ; வறுபடுதல் ; தீய்தல் ; விரைவாகப் பேசுதல் ; அலப்புதல் ; உப்பு முதலியன தரையில் படிதல் ; பூத்தல் ; மெல்ல ஒலித்தல் ; வாணப்பொறி மிகுந்து சொரிதல் ; பொருக்கு வெடித்தல் . |
| பொரிபொரியெனல் | வசைபொழிதற்குறிப்பு ; விரைந்து பேசுதற்குறிப்பு . |
| பொரிபோடுதல் | திருமணத்தில் வேள்வித் தீயில் நெற்பொரியிடுதல் . |
| பொரிமலர் | புன்கமரம் . |
| பொரிமா | வறுத்த அரிசிமாவு . |
| பொரியரிசி | வறுத்த அரிசி . |
| பொரியரை | பிளவுபட்டுக் கரடுமுரடான மரத்தின் அடிப்பகுதி . |
| பொரியல் | பொரிதல் ; பொரித்த உணவு . |
| பொரியுருண்டை | நெற்பொரியைப் பாகிட்டுத் திரட்டிய உருண்டை . |
| பொரிவிளங்காய் | பொரியரிசிமா அல்லது சிறுபயற்ற மாவோடு சருக்கரை சேர்த்துச் செய்த பணிகாரம் , கெட்டியுருண்டை . |
| பொரிவு | மாணிக்கக் குற்றவகை ; மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்று . |
| பொரு | ஒப்பு ; உவமை ; எதிர்த்தடை . |
| பொருக்க | விரைவாக . |
| பொருக்கு | பருக்கை ; காய்ந்த சேற்றேடு ; மரப்பட்டை ; காண்க : பொருக்குமண் . |
| பொருக்குமண் | செதிளாய்ப் பேர்ந்த மண் . |
| பொருக்கெனல் | விரைவுக்குறிப்பு . |
| பொருகளம் | போர்க்களம் . |
| பொருகு | சோறு . |
| பொருட்குற்றம் | பாட்டின் பொருளில் உண்டாம் பிழை . |
| பொருட்குன்று | மேருமலை . |
| பொருட்கை | பாடற்பொருள் பொருந்தக் காட்டும் அபிநயக்கை . |
| பொருட்சம்பந்தம் | பொருளின் இயைபு . |
| பொருட்சார்பு | பொருளிடத்துற்ற அவா . |
| பொருட்சிதைவு | சொத்திழப்பு ; சொல் கால வேறுபாட்டாற் கருத்தில் மாறுகை ; காண்க : பொருட்குற்றம் . |
| பொருட்சுவை | பாட்டின் பொருளால் வரும் இன்பம் . |
| பொருட்செல்வி | திருமகள் . |
| பொருட்சேதம் | சொத்திழப்பு . |
| பொருட்டன்மை | பொருளின்கணுள்ள உருவ இயல்புகளை உள்ளவாறு அலங்கரித்துக் கூறும் அணிவகை . |
| பொருட்டால் | காண்க : பொருட்டு . |
| பொருட்டிரிபு | ஒரு சொல்லில் அல்லது சொற்றொடரிலுள்ள பொருள் மாறுபாடு . |
| பொருட்டு | காரணம் ; மதிப்பிற்குரியது ; நிமித்தமாக . |
| பொருட்டொடர்நிலைச் செய்யுள் | காப்பியம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 816 | 817 | 818 | 819 | 820 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொய்ம்மணல் முதல் - பொருட்டொடர்நிலைச் செய்யுள் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சொல், பொருக்கு, வறுத்த, பொரிதல், அல்லது, பொருட்குற்றம், பொருட்டு, சொத்திழப்பு, பாட்டின், உணவு, பொருக்குமண், பொரியல், பொய்த்தூக்கம், நிலையற்ற, போலி, பொய், வாழ்க்கை, பொரி, செய்த, சோறு, பொரிக்கறி, புளியில்லாமல்

