தமிழ் - தமிழ் அகரமுதலி - பொதிப்போதா முதல் - பொதுமை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பொதிப்போதா | பெருநாரை . |
| பொதிமாடு | மூட்டை சுமக்கும் எருது . |
| பொதியப்பொருப்பன் | காண்க : பொதியவெற்பன் . |
| பொதியம் | பாண்டிய நாட்டில் உள்ளதும் அகத்தியரின் இருப்பிடமுமான பொதிய மலை . |
| பொதியவிழ்த்தல் | தன் வரலாறு விரித்தல் ; பண்டப் பொதியைப் பிரித்தல் . |
| பொதியவிழ்தல் | அரும்பு முறுக்கவிழ்தல் . |
| பொதியவெற்பன் | பொதியமலைக்குரிய பாண்டியன் . |
| பொதியறுத்தல் | பணத்தைக் கவர்தல் . |
| பொதியறை | காற்றோட்டமில்லாத கீழறை . |
| பொதியன் | பொதியமலையில் வாழ்ந்த அகத்திய முனிவர் . |
| பொதியில் | அம்பலம் ; பொதியமலை . |
| பொதியெருது | மூட்டை சுமக்கும் எருது . |
| பொதிர் | நடுக்கம் . |
| பொதிர்த்தல் | குத்துதல் ; முரித்தல் ; பருத்தல் . |
| பொதிர்தல் | வீங்குதல் ; மிகுதல் ; நடுங்குதல் ; அஞ்சுதல் . |
| பொதிர்ப்பு | நடுக்கம் ; அச்சம் . |
| பொதிர்வு | நடுக்கம் ; அச்சம் . |
| பொதிரெறிதல் | நடுங்குதல் . |
| பொதிவு | பொதியாகக் கட்டுகை ; ஒற்றுமை . |
| பொதிவைத்தல் | புதையல் வைத்தல் . |
| பொது | பொதுமையானது ; சிறப்பின்மை ; சாதாரணம் ; வழக்கமானது ; நடுவுநிலை ; ஒப்பு ; குறிப்பான பொருளின்மை ; வெளிப்படையானது ; சபை ; தில்லையம்பலம் . |
| பொதுக்காரியம் | சமூகநலத்துக்குற்ற செயல் . |
| பொதுக்கு | விலக்கு ; மறைப்பு ; ஒதுக்கு . |
| பொதுக்குணம் | காண்க : பொதுத்தன்மை . |
| பொதுக்குதல் | விலக்குதல் ; மறைத்தல் ; கவர்தல் ; புகையிற் பழுக்கவைத்தல் . |
| பொதுக்கை | பல கூத்துக்கும் பொதுவான அபிநயக்கைவகை . |
| பொதுங்குதல் | வருந்துதல் . |
| பொதுச்செலவு | பொதுப் பணத்திலிருந்து ஊரார் பொதுச் செயலுக்குச் செலவிடுந்தொகை ; களத்தில் நிலக்கிழார் காவல் முதலியவற்றிற்குச் செலவிடும் தானியம் . |
| பொதுச்சொல் | இருதிணைகட்கும் பொதுவாயிருக்குஞ் சொல் ; எல்லோரும் அறிந்த சொல் ; உலகம் பலர்க்கும் பொது என்னும் மொழி ; படலமுதலிய நூற்பகுதிக்குத் தலைப்பாக இடும் சொல் . |
| பொதுத்தல் | முள்பாய்தல் ; துளைத்தல் . |
| பொதுத்தன்மை | நடுவுநிலைமை ; பெரும்பாலும் காணப்படும் குணம் ; உவமான உவமேயங்களில் அமைந்துள்ள பொது ஒப்புமை . |
| பொதுத்திணை | இருதிணைகட்கும் பொதுச் சொல் . |
| பொதுதல் | துளைபடுதல் . |
| பொதுநடுவர் | நடுநிலையாளர் ; வழக்குத்தீர்ப்பவர் . |
| பொதுநலத்தார் | பொதுமகளிர் . |
| பொதுநலம் | காண்க : பொதுநன்மை ; பொருள்கொடுப்பார் பெறுஞ் சிற்றின்பம் . |
| பொதுநன்மை | மக்களுக்குச் செய்யும் நன்மை . |
| பொதுநிலம் | பலருக்குப் பொதுவான நிலம் ; மக்கள் நன்மைக்காக ஊர்ப்பொதுவுக்கு விடப்பட்ட நிலம் . |
| பொதுநிறம் | மாநிறம் . |
| பொதுநீக்குதல் | பொதுமையை விடுத்தல் ; தனக்கே உரிமையாக்கிக் கொள்ளுதல் . |
| பொதுநீங்குவமை | காண்க : இயைபின்மையணி . |
| பொதுநெறி | யாவரும் செல்லும் வழி . |
| பொதுநோக்கு | சமநோக்கு ; எல்லோரையும் ஒப்பநோக்குகை ; விருப்புவெறுப்பற்ற பார்வை ; இயற்கையாக அமைந்த அறிவு . |
| பொதுப்படுதல் | பொதுவாதல் ; ஒப்பாதல் . |
| பொதுப்பண் | இரவும் பகலும் பாடற்குரிய பண் . |
| பொதுப்பெண் | காண்க : பொதுமடந்தை . |
| பொதுப்பெண்டு | காண்க : பொதுமடந்தை . |
| பொதுப்பெயர் | பல பொருட்குப் பொதுவாகிய பெயர் ; இருதிணைக்கும் அல்லது அஃறிணை இருபாற்கும் பொதுவாக வரும் பெயர் . |
| பொதுப்பேச்சு | பொதுப்படையான சொல் ; கவர்பொருள் உள்ள மொழி . |
| பொதுபொதெனல் | வரவர மிகுதியாதற்குறிப்பு ; ஆடை முதலியன அழுத்தமின்மைக் குறிப்பு ; ஈரத்தால் நனைந்திருத்தற் குறிப்பு . |
| பொதும்பர் | மரம் செறிந்த இடம் ; இளமரச் சோலை ; சோலை . |
| பொதும்பு | சோலை ; குறுங்காடு ; மரப்பொந்து ; குழி ; குகை . |
| பொதுமக்கள் | சிறப்பில்லாத மக்கள் , பொது சனங்கள் . |
| பொதுமகள் | விலைமகள் ; இடைக்குலப்பெண் . |
| பொதுமடந்தை | விலைமகள் . |
| பொதுமனிதன் | நடுநிலையாளன் ; விருப்புவெறுப்பற்றவன் . |
| பொதுமாது | காண்க : பொதுமடந்தை . |
| பொதுமுதல் | கூட்டுவாணிகத்தின் மூலதனம் . |
| பொதுமை | பொதுவுடைமை ; சாமானியம் ; நன்மை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 814 | 815 | 816 | 817 | 818 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொதிப்போதா முதல் - பொதுமை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சொல், பொது, பொதுமடந்தை, நடுக்கம், சோலை, நன்மை, விலைமகள், பொதுநன்மை, மக்கள், பெயர், மொழி, குறிப்பு, நிலம், பொதுவான, பொதியவெற்பன், எருது, சுமக்கும், மூட்டை, கவர்தல், நடுங்குதல், பொதுச், பொதுத்தன்மை, அச்சம், இருதிணைகட்கும்

