முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பொங்கிவழிதல் முதல் - பொடித்தரை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பொங்கிவழிதல் முதல் - பொடித்தரை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பொங்கிவழிதல் | சோறு முதலியன கொதித்துப் புறத்து வடிதல் ; செல்வம் பெருகுதல் . |
| பொங்கு | செல்வச்செழிப்பு ; நற்பேறு . |
| பொங்குகாலம் | செழிப்புக் காலம் . |
| பொங்குகிறவன் | சமையற்காரன் . |
| பொங்குங்காலம் | காண்க : பொங்குகாலம் . |
| பொங்குசனி | வாழ்நாளில் இரண்டாம் முறைவரும் ஏழரையாண்டுச் சனி ; வளர்பிறைச் சனிக்கிழமை . |
| பொங்குதல் | காய்ந்து கொதித்தல் ; கொந்தளித்தல் ; மிகுதல் ; பருத்தல் ; மேற்கிளர்தல் ; மகிழ்ச்சிகொள்ளுதல் ; கோபித்தல் ; செருக்குறுதல் ; நுரைத்தெழுதல் ; விளங்குதல் ; மயிர் சிலிர்த்தல் ; வீங்குதல் ; விரைதல் ; துள்ளுதல் ; கண் சூடுகொள்ளுதல் ; உயர்தல் ; செழித்தல் ; ஒலித்தல் ; சமைத்தல் . |
| பொச்சம் | பொய் ; குற்றம் ; அவா ; தேங்காய் மட்டை ; உணவு . |
| பொச்சாத்தல் | மறத்தல் ; இகழ்தல் . |
| பொச்சாப்பன் | மறதியுள்ளவன் . |
| பொச்சாப்பு | மறதி ; பொல்லாங்கு ; குற்றம் ; உறுதியின்றி மனம் நெகிழ்ந்திருக்கை . |
| பொச்சு | குற்றம் ; பழத்தில் கேடடைந்த பகுதி ; தேங்காய்மட்டை ; பெண்குறி ; பெண்குறிமயிர் ; மலத்துளை ; மயிர்க்கொத்து . |
| பொச்செரிப்பு | பொறாமை . |
| பொச்சை | காடு ; கரிகாடு ; சிறுமலை ; மலை ; புழுக்கூடு ; குற்றம் ; தொப்பைவயிறு . |
| பொசி | கசிவது ; ஊன்நீர் ; துத்தம் . |
| பொசித்தல் | காண்க : புசித்தல் . |
| பொசிதல் | கசிதல் ; வடிதல் ; மனமுருகல் ; செய்தி வெளியாதல் . |
| பொசிவு | நெகிழ்வு ; கசிவு . |
| பொசுக்குதல் | சாம்பலாக எரித்தல் ; வெதுப்புதல் ; தீயில் வாட்டுதல் ; துன்பப்படுதல் ; குசுவிடுதல் . |
| பொசுக்கெனல் | விரைவுக்குறிப்பு . |
| பொசுங்கல் | கருகினது ; மந்தன் ; வலுவில்லான் ; சிறுதூற்றல் . |
| பொசுங்குதல் | எரிக்கப்படுதல் ; காய்தல் ; வாட்டப்படுதல் ; அழிவுறுதல் ; இணங்குதல் . |
| பொசுபொசுத்தல் | இரகசியம் பேசுதல் ; மெதுவாகக் கசிதல் ; எரிச்சல் உண்டாகும்படி அடிக்கடி பேசுதல் ; மழை துளித்தல் . |
| பொசுபொசெனல் | வலியற்றுப்போதல் ; எளிதில் எரிதற்குறிப்பு ; இலேசாய்ப் பெய்தற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு . |
| பொஞ்சுதல் | செழித்தல் ; இணங்குதல் . |
| பொட்ட | விரைவாக ; முழுதும் . |
| பொட்டச்சி | காண்க : பொட்டைச்சி . |
| பொட்டணம் | சிறுமூட்டை ; ஒற்றடமிடும் சீலைப்பந்து . |
| பொட்டணி | சிறுமூட்டை ; ஒற்றடமிடும் சீலைப்பந்து . |
| பொட்டல் | பாழிடம் ; திறந்த வெளியிடம் ; தலைவழுக்கை . |
| பொட்டலம் | சிறுமூட்டை ; கதவுகளில் அமைந்த வேலைவகை . |
| பொட்டி | பெட்டி ; விலைமகள் . |
| பொட்டிமகன் | வேசிமகன் ; கெட்டிக்காரன் . |
| பொட்டில் | திருவிழா முதலியவற்றில் வெடிச்சத்தம் செய்யும் கருவிவகை . |
| பொட்டில்சுடுதல் | கைத்துப்பாக்கியால் சுடுதல் . |
| பொட்டிலி | காண்க : பொட்டில் . |
| பொட்டிலுப்பு | வெடியுப்பு . |
| பொட்டு | நெற்றியிலிடும் பொட்டு ; பொன்னாற் செய்த ஒரு தாலிவகை ; ஓர் அணிவகை ; கன்னத்தின் மேற்பொருத்து ; புல்லிது ; வட்டவடிவான குறி ; துளி ; புழு ; பூச்சிவகை ; பொட்டுப்பூச்சி ; பிறரை ஏமாற்றிப் பெறும் நன்மதிப்பு ; நுழைவழி ; தானியங்களின் தோலோடுகூடிய துகள் ; பொடி ; பொடுகு . |
| பொட்டுக்கட்டுதல் | கோயிலுக்கு உரிமையாக்கித் தாசிக்குத் தாலிகட்டும் சடங்கு . |
| பொட்டுக்கம்பு | கம்புவகை . |
| பொட்டுக்காறை | மகளிர் கழுத்தணிவகை . |
| பொட்டுக்குத்துதல் | பச்சைக்குத்துதல் . |
| பொட்டுத்தாலி | பொட்டு வடிவான மங்கல நாண் . |
| பொட்டுப்பொட்டெனல் | ஒலிக்குறிப்புவகை . |
| பொட்டுப்பொடி | சிறுபண்டம் . |
| பொட்டெழுதல் | அழிவுறுதல் . |
| பொட்டெனல் | விரைவுக்குறிப்பு . |
| பொட்டை | குருடு : கண்ணொளி மழுக்கம் ; சூதாடுவோர் குழூஉக்குறி ; விலங்கு , பறவை இவற்றின் பெண்பால் ; பெண் . |
| பொட்டைக்கண் | குருட்டுவிழி . |
| பொட்டைச்சி | பெண் . |
| பொட்டையன் | குருடன் ; பெண்வழிச் செல்லும் கணவன் . |
| பொடி | புழுதி ; தூள் ; மூக்குத்தூள் ; சாக்குப்பொடி ; உலோகங்களைப் பற்றவைக்கும் பொடி ; சாம்பல் ; திருநீறு ; சிறிய துண்டு ; சிறியது ; சிறிய இரத்தினம் ; சிறுபிள்ளை . |
| பொடி | (வி) புழுதியாக்கு ; பொடிசெய் . |
| பொடிச்சல்லி | கட்டட வேலைக்காக உடைத்த கருங்கல் அல்லது செங்கல் சிறுதுண்டு . |
| பொடிச்சிலை | மஞ்சள்நிறக் கல்வகை . |
| பொடிசு | சிறியது ; சிறுமி . |
| பொடித்தரை | பொடி மிகுதியான பூமி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 812 | 813 | 814 | 815 | 816 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொங்கிவழிதல் முதல் - பொடித்தரை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பொடி, குற்றம், காண்க, சிறுமூட்டை, விரைவுக்குறிப்பு, பொட்டு, சீலைப்பந்து, பொட்டில், பெண், சிறியது, சிறிய, ஒற்றடமிடும், பேசுதல், செழித்தல், பொங்குகாலம், கசிதல், அழிவுறுதல், வடிதல், இணங்குதல், பொட்டைச்சி

