தமிழ் - தமிழ் அகரமுதலி - பைமை முதல் - பொங்காரம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பைமை | காண்க : பைம்மை . |
| பைய | மெல்ல . |
| பையப்பைய | மெல்லமெல்ல ; கொஞ்சங்கொஞ்சமாக . |
| பையம் | கூடை ; காண்க : கோரை . |
| பையர | நாகம் . |
| பையரவு | நாகம் . |
| பையல் | காண்க : பொடியன் . |
| பையன் | சிறுவன் ; மகன் . |
| பையாத்தல் | வருந்துதல் ; அச்சந்தோன்றுதல் . |
| பையாப்பு | துன்பம் . |
| பையுள் | சிறுமை ; துன்பம் ; நோய் ; மயக்கம் . |
| பையெனல் | மெதுவாதற்குறிப்பு ; ஒளி மழுங்குதற்குறிப்பு ; வருந்தற்குறிப்பு . |
| பையோடதி | பச்சைக்கொடி . |
| பையோலை | பச்சோலை . |
| பைரவம் | அச்சம் ; பயங்கரம் ; சைவசமயவகை ; செவ்வழி யாழ்த்திறங்களுள் ஒன்று . |
| பைரவர் | துர்க்கையின் படையினரான கணங்கள் . |
| பைரவன் | சிவமூர்த்தங்களுள் ஒருவரான வைரவக்கடவுள் . |
| பைரவி | துர்க்கை ; ஒரு பண்வகை . |
| பைவர் | துன்பமுடையவர் . |
| பைவருதல் | துயருறுதல் . |
| பொ | ஓர் உயிர்மெய்யெழுத்து(ப்+ஒ) . |
| பொக்கணம் | முடிச்சு ; பெருமருந்துக்கொ . |
| பொக்கணி | குழியுரல் ; விரிந்த தொப்புள் ; ஒரு வகைப் பான ஏனம் . |
| பொக்கணை | மரப்பொந்து ; கல்வளை ; குழியுரல் . |
| பொக்கம் | பொய் ; வஞ்சகம் ; குற்றம் ; மிகுதி ; உயரம் ; பொலிவு ; அச்சம் . |
| பொக்கரணி | கோயிலை அடுத்துள்ள குளம் . |
| பொக்கல் | காண்க : பொக்கை . |
| பொக்கல்வாய் | காண்க : பொக்கைவாய் . |
| பொக்கன் | தோற்றப்பொலிவுள்ளவன் . |
| பொக்கிப்பயல் | தறிதலை . |
| பொக்கிப்போதல் | கொப்புளமுண்டாதல் ; புண்கட்டி உண்டாதல் . |
| பொக்கு | மரப்பொந்து ; குற்றம் ; உள்ளீடு முற்றாத தானியம் ; தானிய நொறுங்கு ; பொருக்கு . |
| பொக்குதல் | கொப்புளங்கொள்ளுதல் . |
| பொக்குப்பொக்கெனல் | ஒலிக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; சுடர் விட்டுவிட்டு வீசுதற்குறிப்பு . |
| பொக்குவாய் | காண்க : பொக்கைவாய் . |
| பொக்குள் | கொப்பூழ் . |
| பொக்குளம் | கொப்புளம் . |
| பொக்குளித்தல் | கொப்புளம் கிளம்புதல் . |
| பொக்குளிப்பான் | அம்மைவகை . |
| பொக்கெனல் | விரைவுக்குறிப்பு . |
| பொக்கை | சிறுதுளை ; மூளியாயிருக்கை ; நொய் முதலியவற்றின் நொறுங்கு ; குற்றம் . |
| பொக்கைப்பல் | ஓட்டையான பல்வரிசை . |
| பொக்கைவாய் | பல்லுப்போன வாய் . |
| பொகடி | மகளிர் காதணிவகை . |
| பொகில் | அரும்பு . |
| பொகுட்டு | கலங்கல்நீரில் எழுங் குமிழி ; தாமரை அல்லது கோங்கின் பூவிலுள்ள கொட்டை ; மலை . |
| பொகுத்தல் | ஓட்டை செய்தல் . |
| பொகுவல் | பறவைவகை . |
| பொங்கடி | யானை ; சிங்கம் . |
| பொங்கத்தம்பொங்கு | போரில் தோற்றவர் ஆடிக்கொண்டு கூறும் அடைக்கலக் குரல் . |
| பொங்கத்தம்பொங்கோ | போரில் தோற்றவர் ஆடிக்கொண்டு கூறும் அடைக்கலக் குரல் . |
| பொங்கம் | மகிழ்ச்சி ; மிகுதி ; ஒழுங்கு ; நெற்றி ; நறுமணம் ; பொலிவு . |
| பொங்கர் | மரக்கொம்பு ; மலை ; சோலை ; இலவமரம் ; வாடற்பூ . |
| பொங்கல் | பொங்குதல் ; பெருங்கோபம் ; மிளகு , சீரகம் , உப்பு , நெய் முதலியன கலந்து இட்ட அன்னம் ; தைப்பொங்கல் திருவிழா ; பருமை ; மிகுதி ; பொலிவு ; கள் . |
| பொங்கல்வைத்தல் | தெய்வத்துக்குப் பொங்கல் அன்னஞ் சமைத்தல் ; அழித்தல் . |
| பொங்கலாடுதல் | பஞ்சுபோற் பறத்தல் . |
| பொங்கலிடுதல் | காண்க : பொங்கல்வைத்தல் . |
| பொங்கலோபொங்கல் | தைப்பொங்கலிற் பால் பொங்கும்போதும் மாட்டுப்பொங்கலில் மாட்டை ஓட்டிவிடும்போதும் மகிழச்சியுடன் கூறும் பேரொலி . |
| பொங்கழி | தூற்றாத நெற்போலி . |
| பொங்கற்படி | தைப்பொங்கல் நாளன்று கொடுக்கும் கொடை ; புது மணமக்களுக்குத் தைப்பொங்கலுக்காக அளிக்கும் சீர்வரிசை . |
| பொங்கற்பண்டிகை | தைமாதம் முதல்நாள் அன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் படைக்கும் திருவிழா . |
| பொங்கற்பானை | தைப்பொங்கலுக்குப் பயன்படுத்தும் புதுப்பானை ; வயிறுபெருத்தவன் . |
| பொங்காரம் | பொங்குதல் ; பெருந்துயர் ; வளையலுப்பு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 811 | 812 | 813 | 814 | 815 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பைமை முதல் - பொங்காரம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பொலிவு, பொக்கைவாய், குற்றம், கூறும், மிகுதி, பொங்கல், திருவிழா, பொங்கல்வைத்தல், ஆடிக்கொண்டு, அடைக்கலக், தைப்பொங்கல், தோற்றவர், பொங்குதல், குரல், விரைவுக்குறிப்பு, அச்சம், துன்பம், நாகம், குழியுரல், மரப்பொந்து, கொப்புளம், நொறுங்கு, பொக்கை, போரில்

