தமிழ் - தமிழ் அகரமுதலி - பேரோலக்கம் முதல் - பைமறி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பேரோலக்கம் | அரசர் பெருஞ்சபை . |
| பேலகம் | தெப்பம் . |
| பேலிகை | எச்சில் . |
| பேலுதல் | மலங்கழித்தல் . |
| பேழ் | பெருமை . |
| பேழ்கணித்தல் | காண்க : பேகணித்தல் ; அஞ்சுதல் ; கண்மூடுதல் ; மருண்டு விழித்தல் . |
| பேழ்வாய் | பெரிய வாய் . |
| பேழி | புடைவை . |
| பேழை | பெட்டி ; கூடை ; பெருமை ; கோலிக்காய் . |
| பேறு | பெறுகை ; அடையத்தக்கது ; இலாபம் ; நன்கொடை ; பயன் ; தகுதி ; பதினாறு வகைப்பட்ட செல்வம் ; நல்லூழ் ; நிலத்தின் அனுபோகவகை ; இரை ; படைப்பு ; முடிவு . |
| பேறுகாலம் | பிள்ளைபெறுங் காலம் . |
| பேன் | தலையிலுண்டாகும் சிறுபூச்சி . |
| பேனம் | காண்க : நுரை . |
| பேனன் | சூரியன் ; சந்திரன் . |
| பேனாசனி | இந்திரன் . |
| பை | ஓர் உயிர்மெய்யெழுத்து(ப்+ஐ) ; நிறம் ; அழகு ; பசுமை ; இளமை ; உடல்வலி ; துணி , தோல் முதலியவற்றால் அமைந்த கொள்கலம் ; பாம்புப்படம் ; குடல் , மூத்திரப்பை முதலிய உடல் உறுப்பு ; நாணயவகை . |
| பை | (வி) கோபி ; விரி . |
| பைக்கம் | பிச்சை . |
| பைக்கலம் | பச்சைக்குப்பி . |
| பைகிரி | நாய் . |
| பைங்கண் | குளிர்ந்த கண் ; பசிய உடம்பு ; சினத்தால் பசிய கண் : பசுமையால் உள்ள இடம் . |
| பைங்கிளி | பச்சைக்கிளி ; அழகிய இளம்பெண் . |
| பைங்குழி | கருத்தங்கும் இடம் . |
| பைங்கூழ் | இளம்பயிர் ; விளைநிலம் ; நோய் . |
| பைங்கொடி | பச்சிலைக்கொடிவகை . |
| பைசந்தி | காண்க : பைங்குழி ; வாக்கு நான்கனுள் ஒன்றாயும் நாதரூபமாயுள்ள ஒலிவடிவெழுத்து . |
| பைசல் | பையன் ; தீர்ப்பு ; வழக்கு முதலியவற்றின் தீர்மானம் ; இறப்பு . |
| பைசா | ரூபாவில் நூறில் ஒரு பகுதி ; சில்லறை . |
| பைசாசசத்துவம் | பெண்டிரது பத்துச் சத்துவங்களுள் ஒன்று . |
| பைசாசநிலை | ஒரு காலில் நின்று பிறிதொரு காலை முடக்கி நிற்றல் . |
| பைசாசம் | பேய் ; வில்லோர் நிலை நால்வகையுள் ஒருகாலை நிலையாக ஊன்றி ஒரு காலை முடக்கி நிற்கும் நிலை ; எண்வகை மணங்களுள் துயின்றாள் ; களித்தாள் ; மூத்தாள் ; இழிந்தாள் முதலிய மகளிரைச் சேரும் மணம் ; இரும்பு . |
| பைசாசி | பெண்பிசாசு ; காண்க : சடாமாஞ்சில் , பிராகிருத மொழிகளுள் ஒன்று . |
| பைசுனம் | இவறல் ; புறங்கூறுகை . |
| பைஞ்சாய் | கோரைப்புல் . |
| பைஞ்சேறு | சாணம் . |
| பைஞ்ஞிணம் | புதிய இறைச்சி . |
| பைஞ்ஞிலம் | மக்கள் தொகுதி . |
| பைஞ்ஞீல் | மக்கள் தொகுதி . |
| பைஞ்ஞீலம் | மக்கள்தொகுதி ; பசிய நிலம் ; வாழைவகை . |
| பைஞ்ஞீலி | மக்கள்தொகுதி ; பசிய நிலம் ; வாழைவகை . |
| பைத்தல் | பசுமையாதல் ; ஒளிர்தல் ; பாம்பு படம் விரித்தல் ; கோபித்தல் ; பொங்குதல் ; மிகுதல் . |
| பைத்தியக்காரன் | பித்துப்பிடித்தவன் . |
| பைத்தியம் | கிறுக்கு ; மூடத்தனம் . |
| பைத்து | பசுமை . |
| பைதல் | இளையது ; சிறுவன் ; குளிர் ; துன்பம் . |
| பைதிரம் | நாடு . |
| பைதிருகம் | தந்தைக்குரியது ; தந்தை வழியாக வந்த பொருள் ; பகல் பதினைந்து முகூர்த்தத்துள் நான்காவது . |
| பைது | பசுமை ; ஈரம் . |
| பைந்தார் | செவ்விமாலை . |
| பைந்தினை | ஒரு தினைவகை ; தினை . |
| பைந்து | பந்து . |
| பைந்தொடி | பொன்வளையல் ; பெண் . |
| பைந்நாகம் | நாகப்பாம்பு ; பல்லக்கு முதலியவற்றின் மேற்கட்டி . |
| பைப்பய | மெல்லமெல்ல . |
| பைபீலம் | எறும்பு . |
| பைபீலவாதம் | எறும்புகளின் பேச்சறிதல் ; அணுப்பரிணாம வாதம் . |
| பைபீலிகை | காண்க : பைபீலம் . |
| பைம்பூண் | பசுமையான பொன்னாற் செய்யப்பட்ட அணிகலன் . |
| பைம்பொன் | பசும்பொன் ; மேருமலை . |
| பைம்மறித்தல் | காண்க : பைமறி ; பையின் வாயை மூடுதல் . |
| பைம்மை | பசுமை ; அருகதவப்பெண் . |
| பைமறி | பையின் உட்புறத்தை வெளிப்புறமாகத் திருப்புதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 810 | 811 | 812 | 813 | 814 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பேரோலக்கம் முதல் - பைமறி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பசிய, பசுமை, மக்கள்தொகுதி, நிலம், தொகுதி, வாழைவகை, பைமறி, பையின், மக்கள், பைபீலம், காலை, பைங்குழி, இடம், முதலிய, முதலியவற்றின், ஒன்று, முடக்கி, பெருமை, நிலை

