முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » புதுக்கணிப்பு முதல் - புயலேறு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - புதுக்கணிப்பு முதல் - புயலேறு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| புதுக்கணிப்பு | புதியவொளி . |
| புதுக்கருக்கு | வேலைத் தொடக்கத்தில் புதிய ஆளுக்கு உண்டாஞ் சுறுசுறுப்பு ; புதுமை . |
| புதுக்கலம் | புதிய மட்பாண்டம் . |
| புதுக்குடி | புதிதாய் வந்தேறிய குடி . |
| புதுக்குதல் | புதுப்பித்தல் ; அலங்கரித்தல் . |
| புதுக்குப்புறம் | கோயில் முதலியவற்றைப் புதுப்பித்தற்கு ஒதுக்கிவைக்கப்பட்ட அறக்கட்டளை . |
| புதுக்கோள் | புதிதாகப் பற்றிக்கொள்ளப்பட்டது . |
| புதுச்சரக்கு | புதிய வாணிகப் பண்டம் ; காண்க : ஆகாமியம் . |
| புதுத்திங்கள் | பிறைச்சந்திரன் . |
| புதுநடை | புதுமாதிரியான முறை அல்லது ஒழுக்கம் . |
| புதுநிறை | புதுவெள்ளம் . |
| புதுநீர்விழவு | ஆற்றில் புதுநீர் வந்தபோது நிகழ்த்தும் கொண்டாட்டம் . |
| புதுநீராட்டு | ஆற்றில் புதுநீர் வந்தபோது நிகழ்த்தும் கொண்டாட்டம் . |
| புதுப்பழக்கம் | புதிய வழக்கம் ; பழக்கமில்லாதவன் செயல் . |
| புதுப்பித்தல் | பழுதுபார்த்தல் ; காலத்திற்கு ஏற்ப மாற்றியமைத்தல் . |
| புதுப்புனல்விழவு | காண்க : புதுநீர்விழவு . |
| புதுப்புனலாட்டு | காண்க : புதுநீர்விழவு . |
| புதுப்பெண் | புதிதாக மணமான பெண் . |
| புதுப்பெயல் | முதன்முதல் பெய்யும் மழை . |
| புதுமணம் | கலியாணம் . |
| புதுமணவாளன் | புதிதாக மணஞ்செய்து கொண்டவன் ; நித்திய கல்யாணன் ; தினமும் இன்பம் நுகர்பவன் . |
| புதுமாடு | பழக்கப்படாத மாடு . |
| புதுமுகனை | தொடக்கம் . |
| புதுமை | புதிதாந்தன்மை ; பழக்கமின்மை ; வியப்பு ; மிகுதி ; எழில் . |
| புதுமைகாட்டுதல் | வியத்தகு செயல் தோற்றுவித்தல் ; அறியாததுபோல் காட்டிக்கொள்ளுதல் . |
| புதுமைசெய்தல் | வியத்தகு செயல் தோற்றுவித்தல் ; அறியாததுபோல் காட்டிக்கொள்ளுதல் . |
| புதுமொழிதல் | புதிய செய்தி கூறுதல் . |
| புதுவது | புதிது . |
| புதுவை | புதுச்சேரி , சீவில்லிபுத்தூர் , புதுக்கோட்டை முதலிய ஊர்ப் பெயர்களின் மரூஉச்சொல் . |
| புதுவோர் | புதிய மாந்தர் ; அனுபவமற்றவர் . |
| புதை | மறைவு ; காட்டில் மரமடர்ந்த இடம் ; மறைபொருள் ; புதைபொருள் ; மறைவிடம் ; உடல் ; அம்புக்கட்டு ; புதுமை ; உட்டுளை ; ஆயிரம் . |
| புதை | (வி) மறைத்து வை ; சேமி . |
| புதைகுழி | பிணத்தைப் புதைக்கத் தோண்டப்படும் குழி . |
| புதைத்தல் | அடக்கம்பண்ணுதல் ; ஒளித்து வைத்தல் ; வாய் முதலியவற்றைப் பொத்துதல் ; போர்த்தல் ; மறைத்துப் பேசுதல் ; மணி பதித்தல் ; வலிமையைக் குறைத்தல் ; அமிழ்த்துதல் . |
| புதைதல் | மறைதல் ; அமிழ்தல் ; உள்ளடங்கி இருத்தல் . |
| புதைபொருள் | பூமியிற் புதைந்து கிடக்கும் பொருள் ; ஆழ்ந்த கருத்துடையது . |
| புதைமணல் | சொரிமணல் . |
| புதையல் | பூமியில் மறைந்துகிடந்த நிதி ; ஆழ்ந்த கருத்துடையது ; மறைகை ; அம்புக்கட்டு ; கேடயம் . |
| புதையிருள் | மிகுந்த இருள் . |
| புந்தி | அறிவு ; மனம் ; புதன் ; நெல்வகை . |
| புந்தியர் | புலமையோர் . |
| புப்புசம் | நுரையீரல் . |
| பும் | ஆண் ; ஆண்குறி ; ஓர் ஒலிக்குறிப்பு . |
| புமான் | ஆண்மகன் ; கணவன் ; ஆன்மா ; காண்க : அசுத்ததத்துவம் . |
| புய்த்தல் | பறித்தல் ; பிடுங்கல் ; பயத்தல் . |
| புய்தல் | பறிக்கப்படுதல் ; மறைதல் . |
| புயக்கறுதல் | பசுமையறுதல் ; வெளியேறத்தொடங்குதல் . |
| புயக்கு | மனக்கவர்ச்சி ; விட்டுநீங்குதல் . |
| புயகம் | பாம்பு . |
| புயகாசனன் | பாம்பை உணவாகக் கொள்ளும் கருடன் . |
| புயகோடரம் | கைக்குழி , கைப்பொருத்து . |
| புயங்கநிருத்தம் | ஒரு நடனவகை . |
| புயங்கம் | பாம்பு ; ஒரு நடனவகை . |
| புயங்கமலை | ஆதிசேடனது வடிவமாகக் கருதப்படும் திருவேங்கடமலை . |
| புயங்கன் | பாம்பு ; பாம்பணியுடைய சிவபிரான் . |
| புயங்கொட்டுதல் | வீரத்தின் குறியாகத் தோள் தட்டுதல் . |
| புயத்தல் | பறித்தல் ; வெளியேறுதல் ; பெயர்த்தல் . |
| புயத்துணை | தகுந்த துணைவன் . |
| புயம் | தோள் ; புடை ; கோணத்தின் பக்கக்கோடு . |
| புயமுட்டி | வில்லைத் தோள்மேல் பிடித்து மேல் நோக்கி அம்பெய்யும்வகை . |
| புயல் | மேகம் ; மழைபெய்கை ; நீர் ; கொடுங்காற்று ; சுக்கிரன் . |
| புயல்வண்ணன் | திருமால் . |
| புயலேறு | இடி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 780 | 781 | 782 | 783 | 784 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புதுக்கணிப்பு முதல் - புயலேறு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, புதுமை, செயல், பாம்பு, புதுநீர்விழவு, புதை, அம்புக்கட்டு, புதைபொருள், மறைதல், கருத்துடையது, தோள், நடனவகை, பறித்தல், காட்டிக்கொள்ளுதல், ஆழ்ந்த, வியத்தகு, புதுநீர், ஆற்றில், முதலியவற்றைப், புதுப்பித்தல், வந்தபோது, நிகழ்த்தும், தோற்றுவித்தல், புதிதாக, கொண்டாட்டம், அறியாததுபோல்

