முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » புண்டரீகாட்சன் முதல் - புத்திகெட்டுப்போதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - புண்டரீகாட்சன் முதல் - புத்திகெட்டுப்போதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| புண்டரீகாட்சன் | தாமரைக்கண்ணனான திருமால் . |
| புண்ணழற்சி | புண்ணால் உண்டாகும் எரிவு . |
| புண்ணழற்றி | புண்ணில் வைக்கும் காரமருந்து . |
| புண்ணழற்றுதல் | காண்க : புண்ணழற்சி . |
| புண்ணளை | புண்ணின் குழி . |
| புண்ணாக்கு | காண்க : பிண்ணாக்கு . |
| புண்ணியகருமம் | நற்செயல் . |
| புண்ணியசாந்தம் | சாணி ; திருநீறு . |
| புண்ணியதிசை | வடக்கு . |
| புண்ணியபூமி | காண்க : ஆரியாவர்த்தம் ; புண்ணியதலம் . |
| புண்ணியம் | அறம் ; தருமம் ; நல்வினை ; தூய்மை ; தெய்வத்தன்மை ; நற்செயல் ; காண்க : நவபுண்ணியம் ; புண்ணியசாந்தம் ; நீர்த்தொட்டி . |
| புண்ணியமுதல்வன் | கடவுள் ; புத்தன் . |
| புண்ணியமுதல்வி | பார்வதி ; தவத்திற் சிறந்தவள் . |
| புண்ணியமூர்த்தி | புண்ணியமே உருவெடுத்தாற் போன்றவன் ; கடவுள் ; புத்தன் ; அருகன் . |
| புண்ணியவதி | பேறு பெற்றவள் ; அறச்சிந்தனையுடையவள் ; நற்குணமுடையவள் . |
| புண்ணியவாட்டி | பேறு பெற்றவள் ; அறச்சிந்தனையுடையவள் ; நற்குணமுடையவள் . |
| புண்ணியவான் | புண்ணியமிக்கவன் ; அறஞ்செய்பவன் ; பேறுபெற்றவன் . |
| புண்ணியன் | காண்க : புண்ணியவான் ; கடவுள் ; சிவபிரான் ; அருகன் ; புத்தன் . |
| புண்ணியை | காண்க : புண்ணியவதி ; துளசி . |
| புண்ணீர் | இரத்தம் . |
| புண்ணுடம்பு | பிள்ளைபெற்ற பச்சையுடம்பு ; பாவ உடல் . |
| புண்ணுறுத்துதல் | வருத்துதல் . |
| புண்படுத்துதல் | புண்ணுண்டாக்குதல் ; வருத்துதல் ; மனம் நோவச்செய்தல் . |
| புண்படுதல் | காயமடைதல் ; வருந்துதல் . |
| புண்வழலை | புண்ணிலிருந்து வடியும் சீழ் . |
| புண்வாய் | புண்ணின் துளை . |
| புணர் | புதுமை ; சேர்க்கை . |
| புணர் | (வி) சேர் , அணை ; புணர்என் ஏவல் . |
| புணர்க்கை | சேர்க்கை ; சூழ்ச்சி ; மாயம் . |
| புணர்குறி | தலைவன் தலைவியர் சந்திக்கும் குறியிடம் . |
| புணர்ச்சி | சேர்க்கை ; ஒரே நாட்டார் ஆதல் ; கலவி ; எழுத்து முதலியவற்றின் சந்தி ; முன்பின் தொடர்பு ; அணிகலன் . |
| புணர்ச்சிவிதும்பல் | புணர்ச்சிக்கு விரையும் விருப்பம் . |
| புணர்த்தல் | சேர்த்தல் ; எழுத்து முதலியன சந்திக்கும்படி செய்தல் ; நிகழ்த்துதல் ; பாகுபடுத்துதல் ; கூட்டிச்சொல்லுதல் ; கட்டுதல் ; படைத்தல் ; பிரபந்தமாகச் செய்தல் . |
| புணர்தம் | புனர்பூசநாள் . |
| புணர்தல் | பொருந்துதல் ; கலவிசெய்தல் ; அளவளாவுதல் ; மேற்கொள்ளுதல் ; ஏற்புடையதாதல் ; விளங்குதல் ; எழுத்து முதலியன சந்தித்தல் ; உடலிற்படுதல் ; கூடியதாதல் ; தலைவனும் தலைவியும் கூடுதலாகிய குறிஞ்சி உரிப்பொருள் . |
| புணர்தை | காண்க : புணர்தம் . |
| புணர்ப்பு | தொடர்பு ; கலவி ; சேர்க்கை ; எழுத்து முதலியவற்றின் சந்தி ; நட்பு ; துணை ; உடல் ; கடல் ; சூழ்ச்சி ; ஏவல் ; பிரபந்தம் ; மாயம் ; செயல் . |
| புணர்வு | சேர்க்கை ; கலவி ; இசைப்பு ; உடல் . |
| புணரி | கடல் ; அலை ; கரை ; தனிமை . |
| புணரியிற்றுயின்றோன் | கடலிற் பள்ளிகொண்ட திருமால் . |
| புணரியோர் | ஒன்றுகூட்டியவர் . |
| புணி | மயிர்முடி . |
| புணை | தெப்பம் ; மரக்கலம் ; உதவி ; மூங்கில் ; விலங்கு ; ஈடு ; ஆள் பொறுப்பு ; ஒப்பு . |
| புணைகயிறு | பூட்டாங்கயிறு . |
| புணைசல்விடுதல் | காண்க : பிணையடித்தல் . |
| புணைத்தல் | கட்டல் . |
| புணைப்படுதல் | பொறுப்பாதல் . |
| புணையலடித்தல் | காண்க : பிணையடித்தல் . |
| புத்தகம் | நூல் ; ஓவியம் தீட்டிய துணி ; மயிலிறகு . |
| புத்தசேடம் | உண்ட மிச்சில் . |
| புத்தசைத்தியம் | புத்தாலயம் . |
| புத்தப்புதிய | மிகப் புதிய . |
| புத்தம்புதிய | மிகப் புதிய . |
| புத்தம் | புத்தமதம் ; உணவு . |
| புத்தமதம் | பௌத்தசமயம் . |
| புத்தமுதம் | புதிய உணவு . |
| புத்தர் | புத்தப் பதவிபெற்ற பெரியோர்கள் ; புத்த சமயத்தோர் . |
| புத்தன் | கௌதமர் ; புத்தசமயத்தான் ; திருமாலவதாரத்துள் ஒன்று ; அருகன் ; புதியவர் ; புதியது ; நாணயவகை . |
| புத்தாடை | புதிய ஆடை . |
| புத்தாத்திரி | காண்க : அருநெல்லி . |
| புத்தி | அறிவு ; இயற்கையுணர்வு ; ஆராய்ந்து செய்யும் கரணம் ; போதனை ; வழிவகை ; கழுவாய் ; உரிமை ; கோளின் நடை ; புட்டி . |
| புத்திக்கூர்மை | கூர்த்த அறிவு . |
| புத்திகெட்டவன் | மூடன் ; நேர்மையில்லாதவன் . |
| புத்திகெட்டுப்போதல் | உணர்வுகெடுதல் ; தவறுதலான செயல் செய்தல் ; நேர்மையற்றுப் போதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 778 | 779 | 780 | 781 | 782 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புண்டரீகாட்சன் முதல் - புத்திகெட்டுப்போதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சேர்க்கை, எழுத்து, புத்தன், கலவி, உடல், செய்தல், அருகன், கடவுள், சந்தி, முதலியன, தொடர்பு, முதலியவற்றின், செயல், உணவு, அறிவு, புத்தமதம், மிகப், கடல், பிணையடித்தல், புணர்தம், ஏவல், பேறு, பெற்றவள், புண்ணியவதி, புண்ணியசாந்தம், புண்ணின், நற்செயல், அறச்சிந்தனையுடையவள், நற்குணமுடையவள், புண்ணழற்சி, சூழ்ச்சி, திருமால், புணர், புண்ணியவான், வருத்துதல், மாயம்

