முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » புத்திகோசரம் முதல் - புதுக்கணித்தல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - புத்திகோசரம் முதல் - புதுக்கணித்தல் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
புத்திகோசரம் | அறிவுக்குப் புலப்படுவது . |
புத்திசாலி | அறிவாளி . |
புத்திதடுமாறுதல் | காண்க : புத்திகெட்டுப்போதல் . |
புத்திதம் | எட்டிமரம் . |
புத்திநுட்பம் | அறிவுக்கூர்மை . |
புத்திபண்ணுதல் | எண்ணிப்பார்த்தல் ; உறுதியாகக் கொள்ளுதல் . |
புத்திமட்டு | புத்திக்குறைவு . |
புத்திமதி | அறிவுரை . |
புத்திமயக்கம் | அறிவுக்கலக்கம் ; பைத்தியம் . |
புத்திமாறாட்டம் | பைத்தியம் . |
புத்திமான் | காண்க : புத்திசாலி . |
புத்தியறிதல் | அறிவுதெளிதல் ; பெண்கள் பூப்படைதல் . |
புத்தியீனம் | அறியாமை . |
புத்தியீனர் | அறிவுக்கேடர் . |
புத்தியூட்டுதல் | அறிவுபுகட்டுதல் . |
புத்திரகன் | விசேட தீட்சை பெற்றவன் ; அன்பன் ; வஞ்சகன் . |
புத்திரகாமேட்டி | புதல்வனைப் பெற விரும்பிச் செய்யும் வேள்விவகை . |
புத்திரசந்தானம் | ஆண்வழி . |
புத்திரசம்பத்து | மக்கட்செல்வம் . |
புத்திரசோகம் | பிள்ளையை இழந்த துன்பம் . |
புத்திரத்தானம் | சந்தானத்தைக் குறிக்கும் இலக்கினத்துக்கு ஐந்தாமிடம் . |
புத்திரநாதன் | பிள்ளையினால் காக்கப்படுபவன் . |
புத்திரப்பிரதிநிதி | தத்துப்பிள்ளை . |
புத்திரபௌத்திரபாரம்பரியம் | வமிசபரம்பரை . |
புத்திரமார்க்கம் | காண்க : கிரியாமார்க்கம் . |
புத்திரலாபம் | மகப்பேறு . |
புத்திரன் | மகன் ; மாணாக்கன் ; அறநூலில் கூறப்படும் பன்னிருவகைப் புதல்வர்களுக்கும் பொதுப்பெயர் . |
புத்திரி | மகள் ; காண்க : கீழாநெல்லி ; கரிமுள்ளி . |
புத்திரிகாசுதன் | மகளுடைய மகன் ; காண்க : புத்திரிபுத்திரன் . |
புத்திரிகை | மகள் ; சித்திரப்பாவை . |
புத்திரிபுத்திரன் | தன் மகள்வயிற்றுப் பிறந்தவனும் தனக்கே மகனாகக் கொள்ளப்பட்டவனுமாகிய பேரன் . |
புத்திரேடணை | பிள்ளைகளிடம் அன்பு . |
புத்திவான் | காண்க : புத்திசாலி . |
புத்திவிருத்தி | அறிவுப்பெருக்கம் . |
புத்து | புதல்வரில்லாதார் அடையும் நரகவகை ; பௌத்தமதம் ; புற்று . |
புத்துரை | புதிய உரை . |
புத்தேணாடு | காண்க : புத்தேளுலகம் . |
புத்தேள் | புதுமை ; புதியவள் ; தெய்வம் ; தேவர் . |
புத்தேளிர் | வானோர் , தேவர் . |
புத்தேளுலகம் | வானுலகு . |
புத்தேன் | எட்டிமரம் . |
புத்தோடு | புதுப்பானை . |
புத | வாயில் . |
புதசனன் | அறிஞன் . |
புதஞ்செய்தல் | தாவியெழுதல் . |
புதம் | மேகம் ; அறிவு . |
புதமெழுதல் | காண்க : புதஞ்செய்தல் . |
புதர் | தூறு ; புற்சாதி ; மருந்துப்பூண்டு ; அரும்பு . |
புதரவண்ணான் | காண்க : இராப்பாடி . |
புதல் | தூறு ; ஒரு புல்வகை ; மருந்துப்பூண்டு ; அரும்பு ; புருவம் . |
புதல்வர்ப்பேறு | ஆண்மக்களைப் பெறுகை . |
புதல்வன் | மகன் ; மாணாக்கன் ; குடி . |
புதல்வி | மகள் . |
புதவம் | வாயில் ; அறுகு . |
புதவாரம் | புதன்கிழமை . |
புதவு | கதவு ; வாயில் ; மதகு ; திட்டிவாசல் ; குகை ; அறுகம்புல் . |
புதளி | புலால் . |
புதற்பூ | காண்க : நிலப்பூ . |
புதன் | ஒன்பது கோள்களுள் ஒன்று ; கிழமைகளுள் ஒன்று ; புலவன் ; தேவன் . |
புதா | கதவு ; மரக்கானாரை ; பெருநாரை . |
புதானன் | அறிஞன் ; குரு . |
புதிசு | புதுமையானது ; புதியது ; திருவிளக்கின்முன் வைக்கப்படும் முதல் விளைச்சற் காணிக்கை . |
புதிது | புதுமையானது ; புதியது ; திருவிளக்கின்முன் வைக்கப்படும் முதல் விளைச்சற் காணிக்கை . |
புதியது | அறுவடையானதும் கொண்டாடும் பண்டிகை ; புதிதாகச் சமைத்த சோறு . |
புதியதுண்ணுதல் | முதலில் விளைந்த விளைவை நல்வேளையிற் சமைத்துண்ணுதல் ; புதிதாய் ஒன்றைப் புசித்தல் . |
புதியமனிதன் | அயலான் ; வேலையிற் புதிதாக அமர்ந்தவன் ; புதிதாகப் பெற்றெடுத்த ஆண் குழந்தை . |
புதியர் | புதிதாக வந்தவர் ; விருந்தினர் . |
புதியவர் | புதிதாக வந்தவர் ; விருந்தினர் . |
புதியனபுகுதல் | சொல் , வழக்கம் முதலியன புதியனவாக உண்டாகை . |
புதியோர் | காண்க : புதியவர் . |
புதிர் | திருவிளக்கின்முன் வைக்கப்பட்ட முதல் விளைச்சற் காணிக்கை ; விடுகதை . |
புதினக்கடுதாசி | செய்தித்தாள் . |
புதினம் | புதுமை , நூதனம் , செய்தி ; வியப்பு ; கதை . |
புதினா | கீரைவகை . |
புதுக்கட்டு | புதிய முறை . |
புதுக்கணித்தல் | அழகுபெறுதல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 779 | 780 | 781 | 782 | 783 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புத்திகோசரம் முதல் - புதுக்கணித்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, விளைச்சற், காணிக்கை, வாயில், திருவிளக்கின்முன், புதியது, மகள், புதிதாக, புத்திசாலி, மகன், ஒன்று, புதுமையானது, புதியவர், விருந்தினர், வந்தவர், வைக்கப்படும், கதவு, புதஞ்செய்தல், புத்திரிபுத்திரன், புத்தேளுலகம், மாணாக்கன், பைத்தியம், எட்டிமரம், புதுமை, தேவர், மருந்துப்பூண்டு, தூறு, சொல், அறிஞன், அரும்பு