முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » புராந்திமகாண்டம் முதல் - புரூரம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - புராந்திமகாண்டம் முதல் - புரூரம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| புராந்திமகாண்டம் | காண்க : புராதனகாண்டம் . |
| புராந்திமம் | பழைமை . |
| புராரி | காண்க : புரமெரித்தோன் . |
| புராவிருத்தம் | இதிகாசம் . |
| புரி | செய்கை ; கயிறு ; முறுக்கு ; சுருள் ; சுரி ; சங்கு ; விருப்பம் ; யாழ்நரம்பு ; மாலை ; கட்டு ; தலைநகர் ; மருதநிலத்தூர் ; உடல் . |
| புரி | (வி) புரிஎன் ஏவல் ; செய் ; விரும்பு . |
| புரிக்கூடு | நெற்சேர் . |
| புரிகுழல் | கடைகுழன்று சுருண்ட கூந்தல் . |
| புரிகை | அங்கக்கிரியைவகை . |
| புரிசடை | திரண்டு சுருண்ட சடை . |
| புரிசம் | அருமை ; நான்குமுழ நீளம் . |
| புரிசாலம் | கெஞ்சுகை ; விண்ணப்பம் . |
| புரிசை | மதில் . |
| புரித்தல் | விரும்பச்செய்தல் ; நிரைத்தல் ; பதித்தல் ; பொருள் விளங்குதல் ; விளங்குதல் . |
| புரிதல் | விரும்புதல் ; தியானித்தல் ; செய்தல் ; படைத்தல் ; ஈனுதல் ; கொடுத்தல் ; நுகர்தல் ; உற்றுப்பார்த்தல் ; விசாரணைசெய்தல் ; சொல்லுதல் ; நடத்துதல் ; மேற்கொள்ளுதல் ; முறுக்குக்கொள்ளுதல் ; திரும்புதல் ; மிகுதல் ; அசைதல் ; விளங்குதல் ; பொருள் விளங்குதல் . |
| புரிதிரித்தல் | கயிற்றுக்காகப் புரிமுறுக்குதல் ; கெடுக்க வழிதேடுதல் . |
| புரிந்தோர் | நண்பர் . |
| புரிநாண் | திரித்துச் செய்யப்பெற்ற கயிறு . |
| புரிநூல் | காண்க : புரிமுந்நூல் . |
| புரிப்பித்தல் | வளைந்து திரும்பச் செய்தல் . |
| புரிமணை | பாண்டம் வைப்பதற்கு வைக்கோல் , நார் முதலியவற்றால் அமைத்த பீடம் . |
| புரிமுகம் | கோபுரம் ; சங்கு ; நத்தை . |
| புரிமுந்நூல் | பூணூல் . |
| புரிமுறுக்கல் | கோள்மூட்டிவிடுதல் . |
| புரிமுறுக்கு | காண்க : புரிமுறுக்கல் ; மலராத தாமரைப் பூ . |
| புரிமுறுக்குதல் | கோட்சொல்லுதல் . |
| புரியட்டகம் | நுண்ணுடல் . |
| புரியட்டகாயம் | நுண்ணுடல் . |
| புரியணை | காண்க : புரிமணை . |
| புரியம் | கூத்துவகை . |
| புரியிட்டீர்த்தல் | பழுதையினாற் கட்டி இழுத்தல் ; துன்புறுத்தல் . |
| புரியைக்கட்டியிழுத்தல் | பழுதையினாற் கட்டி இழுத்தல் ; துன்புறுத்தல் . |
| புரிவலித்தல் | கட்டுதல் . |
| புரிவளை | முறுக்குவளையல் . |
| புரிவிடுதல் | கயிறுதிரிக்கப் புரியை முறுக்குதல் . |
| புரிவில்புகழ்ச்சியணி | காண்க : புகழாப்புகழ்ச்சி . |
| புரிவின்மைநயம் | புத்த சமயத்து நயம் நான்கனுள் ஒன்று . |
| புரிவு | அன்பு ; விருப்பம் ; தொழில் ; தவறு ; தப்பி நீங்குகை ; வேறுபடுகை ; தெளிவு . |
| புரீடம் | மலம் ; அழுக்கு . |
| புரு | ஒரு மரவகை ; மிகுதி ; பருமை ; வீடுபேறு ; குழந்தை ; ஓரரசன் ; விருடப தீர்த்தங்கரர் ; ஓர் அசுரன் . |
| புருகூதன் | வேள்விகளில் மிகுதியாக அழைக்கப்படும் இந்திரன் . |
| புருடகாலம் | முப்பத்தைந்து ஆண்டுக்காலம் . |
| புருடதத்துவம் | சுத்தாசுத்த தத்துவம் ஏழனுள் ஒன்றாகியதும் மும்மலங்களோடு கூடியதுமான தத்துவம் . |
| புருடநட்சத்திரம் | இரேவதிநாள் . |
| புருடநாள் | இரேவதிநாள் . |
| புருடம் | ஐந்துவகைப் பிரமங்களுள் ஒன்றான மந்திரம் ; காண்க : தற்புருடம் ; நான்குமுழ நீளம் ; புன்னைமரம் . |
| புருடமேதம் | மனிதவேள்வி . |
| புருடமோகினி | பார்வதி . |
| புருடராகம் | ஒன்பதுவகை மணிகளுள் ஒன்று . |
| புருடவாகனன் | காண்க : நரவாகனன் . |
| புருடன் | ஆண்மகன் ; கணவன் ; மனிதன் ; சிற்றுயிர் , சீவான்மா ; பேருயிர் ; பரமான்மா ; காண்க : புருடதத்துவம் . |
| புருடாமிருகம் | மனிதமுகம்கொண்ட விலங்கு வகை . |
| புருடாயிதம் | புணர்ச்சிவகையுள் ஒன்று . |
| புருடார்த்தசொரூபம் | அறம் , பொருள் , இன்பம் , தன்னைத்தான் அறிதல் , இறைவனை அறிதல் என ஆன்மாவால் அடையப்படும் ஐவகைப்பேறு . |
| புருடார்த்தம் | மனிதன் அடையவேண்டிய அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப்பொருள் . |
| புருடோத்தமன் | சிறந்தவன் ; திருமால் . |
| புருவநெரித்தல் | கோபத்தால் புருவங்களை வளைத்தல் . |
| புருவம் | கண்ணின்மேல் உள்ள மயிர்வளைவு ; புண்ணின் விளிம்பு ; வரம்பு ; குதிரை . |
| புருவை | ஆடு ; செம்மறியாடு ; பெண்ணாடு ; இளமை . |
| புரூணகத்தி | கருவழித்தலாகிய பாவச்செயல் . |
| புரூணகம் | காண்க : புரூணகத்தி ; கரு . |
| புரூணம் | கரு ; இளமை . |
| புரூரம் | புருவம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 782 | 783 | 784 | 785 | 786 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புராந்திமகாண்டம் முதல் - புரூரம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, விளங்குதல், பொருள், ஒன்று, புருடதத்துவம், தத்துவம், துன்புறுத்தல், இழுத்தல், புரூணகத்தி, இரேவதிநாள், இளமை, இன்பம், அறிதல், அறம், மனிதன், கட்டி, புருவம், நுண்ணுடல், விருப்பம், சுருண்ட, சங்கு, கயிறு, புரி, நான்குமுழ, நீளம், புரிமணை, புரிமுறுக்கல், புரிமுந்நூல், புரிமுறுக்குதல், செய்தல், பழுதையினாற்

