தமிழ் - தமிழ் அகரமுதலி - புயவகுப்பு முதல் - புராந்தகி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| புயவகுப்பு | பாட்டுடைத்தலைவனது தோள்வலியை மிகுத்துக் கூறுவதான கலம்பகத்துள் ஓர் உறுப்பு . |
| புயவலி | தோள்வலிமை . |
| புயாந்தரம் | மார்பு . |
| புரகரன் | காண்க : புரதகனன் . |
| புரசல் | காண்க : புரைசல் . |
| புரசு | பூவரசுமரம் ; சிறு பெண்குழந்தை ; ஒரு மரவகை . |
| புரசை | யானைக் கழுத்திலிடுங் கயிறு . |
| புரட்சி | மாறுதல் ; பிறழ்வு ; அரசியல் கெட்ட நிலைமை ; ஒழுங்கின்மை . |
| புரட்டன் | மாறாட்டுக்காரன் . |
| புரட்டாசி | தமிழ் மாதங்களுள் ஆறாவது ; பூரட்டாதிநாள் . |
| புரட்டியடித்தல் | மாறாட்டமாய்ப் பேசுதல் ; உண்மையை மறுத்தல் ; நன்றாக அடித்தல் . |
| புரட்டு | கீழ்மேலாகத் திருப்புதல் ; மாறுபட்ட பேச்சு ; வஞ்சகம் ; வயிற்றுவலி ; கறிவகை ; வாந்திக்குணம் . |
| புரட்டுதல் | உருட்டுதல் ; செய்துமுடித்தல் ; கீழ் மேலாகத் திருப்புதல் ; கறி முதலியவற்றைக் கிண்டி வதக்குதல் ; குமட்டுதல் ; வஞ்சித்தல் ; மாறுபடுத்துதல் ; தேய்த்தல் ; அழுக்காக்குதல் ; மறுத்தல் : புத்தக ஏடுகள் முதலியவற்றைத் திருப்புதல் . |
| புரட்டுருட்டு | மாறாட்டமாகப் பேசுதல் ; தந்திரச் செயல் . |
| புரட்டை | பூரட்டாதிநாள் . |
| புரண்டை | பிரண்டைக்கொடி . |
| புரணப்பொருள் | குறிப்பில் தோன்றும் பொருள் . |
| புரணம் | நிறைவு ; அசைகை ; துடிக்கை ; தோன்றுகை ; மயக்கம் ; ஒளி . |
| புரணி | ஊன் ; தோல் ; சாரமற்றது . |
| புரத்தல் | காத்தல் ; மிகுதியாகக் கொடுத்தல் ; வணங்குதல் ; அருளுதல் . |
| புரதகனன் | திரிபுரம் அழித்த சிவபிரான் . |
| புரந்தரம் | தோள் . |
| புரந்தரலோகம் | இந்திரலோகம் . |
| புரந்தரன் | இந்திரன் |
| புரந்தார் | புரவலர் ; அரசர் . |
| புரப்பு | பாதுகாப்பு , ஓம்புகை . |
| புரப்போர் | காப்பாற்றுபவர் ; அரசர் . |
| புரம் | ஊர் ; நகரம் ; தலைநகரம் ; முப்புரம் ; கோயில் ; மேன்மாடம் ; வீடு ; உடல் ; தோல் ; முன் . |
| புரமூன்றெரித்தோன் | காண்க : புரதகனன் . |
| புரமெரித்தோன் | காண்க : புரதகனன் . |
| புரவரியார் | அரசிறைக் கணக்கர் . |
| புரவலன் | காத்துதவுவோன் ; அரசன் ; கொடையாளன் . |
| புரவாசம் | நகரத்தில் வாழ்கை . |
| புரவாயில் | கோபுரவாயில் . |
| புரவி | குதிரை ; குதிரை , யானை இவற்றைத் கட்டுமிடம் ; அசுவினிநாள் ; சாதி . |
| புரவிசயன் | திரிபுரம் வென்ற சிவபிரான் . |
| புரவித்தேவர் | குதிரைமுகமுள்ள தேவரான அசுவினிதேவர்கள் . |
| புரவிவட்டம் | குதிரை செலுத்தும் வீதியாகிய வையாளிவீதி . |
| புரவிவேள்வி | காண்க : அசுவமேதம் . |
| புரவு | பாதுகாப்பு ; அரசு ; கொடை ; ஆட்சியிடம் ; அரசிறை ; இறையிலி நிலம் ; ஆற்றுநீர் பாயும் வயல் ; செழுமை . |
| புரவுவரி | காண்க : புரவரியார் . |
| புரவுவரித்திணைக்களம் | அரசிறைக் கணக்கர் கூடும் உத்தியோகசாலை . |
| புரளி | பொய் ; வஞ்சனை ; குறும்பு ; சண்டை ; கலகம் ; முருட்டுத்தனம் . |
| புரளிக்காரன் | பொய்யன் ; புரட்டுச்செய்வோன் ; சண்டையிடுபவன் ; ஆணையை மீறிக் கலகஞ்செய்பவன் . |
| புரளிபண்ணுதல் | குறும்புசெய்தல் ; எள்ளிநகையாடல் . |
| புரளுதல் | உருளுதல் ; கழிதல் ; அலைமறிதல் ; நிரம்பிவழிதல் ; அழுக்காதல் ; நீரிற்கலத்தல் ;சொற்பிறழுதல் ; மிகுதல் ; மாறிமாறிவருதல் ; சாதல் . |
| புராகிருதபாவம் | முன்செய்த தீவினை . |
| புராகிருதம் | முன்செய்தது . |
| புராணகன் | காண்க : புராணிகன் ; படிப்போன் . |
| புராணபுருடன் | திருமால் . |
| புராணம் | பழைமை ; தொன்மம் ; பழங்கதை ; வேதவாக்கியப் பொருள்களை வலியுறுத்தும் நூல் ; கோயிலிற் புராணம் படிப்பதற்கு விடப்பட்ட மானியம் . |
| புராணன் | பழமையான கடவுள் . |
| புராணிகன் | புராணப் பிரசங்கம் செய்வோன் ; புராணம் செய்த ஆசிரியன் . |
| புராணை | காண்க : புராதனி . |
| புராதனகாண்டம் | விவிலிய நூலின் பழைய ஏற்பாடு . |
| புராதனம் | பழமையானது ; பழமை ; கிழத்தனம் ; பழஞ்சோறு . |
| புராதனர் | முன்னோர் . |
| புராதனி | பழமையான பார்வதி . |
| புராந்தகன் | காண்க : புரமெரித்தோன் . |
| புராந்தகி | சிவசத்தி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 781 | 782 | 783 | 784 | 785 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புயவகுப்பு முதல் - புராந்தகி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, புரதகனன், குதிரை, புராணம், திருப்புதல், புராதனி, அரசிறைக், கணக்கர், பழமையான, புராணிகன், புரவரியார், அரசர், மறுத்தல், பேசுதல், பூரட்டாதிநாள், தோல், திரிபுரம், பாதுகாப்பு, சிவபிரான், புரமெரித்தோன்

