முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » புட்பபுடம் முதல் - புண்டரீகம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - புட்பபுடம் முதல் - புண்டரீகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| புட்பபுடம் | குடங்கை இரண்டும் இயைந்து பக்கங்காட்டி நிற்கும் இணைக்கைவகை . |
| புட்பம் | பூ ; வாழை ; மகளிர் தீட்டு ; கண்ணோய் வகை ; காண்க : புட்பகம் . |
| புட்பரசம் | பூவின் தேன் ; மகரந்தம் . |
| புட்பரதம் | பூந்தேர் ; பூவின் தேன் ; பூந்தூள் . |
| புட்பராகம் | ஒன்பதுவகை மணியுள் ஒன்று . |
| புட்பவதி | பூப்படைந்த பெண் . |
| புட்பவருடம் | மலர்மழை ; காண்க : புட்பாஞ்சலி ; சிறுதூற்றல் . |
| புட்பவாகனன் | அருகன் . |
| புட்பவிமானம் | பூந்தேர் . |
| புட்பறை | பறைவகை . |
| புட்பாகன் | திருமால் . |
| புட்பாசவம் | பூந்தேன் . |
| புட்பாசனன் | பிரமன் . |
| புட்பாசனி | திருமகள் . |
| புட்பாஞ்சலி | கைநிறையக்கொண்ட பூ ; பூவிட்டு வணங்கல் ; இரண்டு கையுங் குடங்கையாக வந்து ஒன்றும் இணைக்கைவகை . |
| புட்பித்தல் | மலர்தல் ; முகமலர்தல் ; பூப்படைதல் . |
| புடகம் | இலைத்தொன்னை ; தாமரை . |
| புடபாகம் | புடமிடுகை ; செரிக்கை ; சமைக்கை . |
| புடம் | புடமிடுங்கலம் ; மூடி ; வெயிலில் வைத்தல் முதலிய வழிகளாற் பக்குவப்படுத்துகை ; புடமிடுகை ; பக்கம் ; இடம் ; உள்வளைவு ; இலைக்கலம் ; கண்ணிமை ; கோவணம் ; மூடுகை ; கோள்களின் உண்மையான அன்றாடப்போக்கு ; ஒரு வானவளவைவகை ; தூய்மை . |
| புடம்போடுதல் | காண்க : புடமிடுதல் ; மிக வருத்துதல் . |
| புடமிடுதல் | பொன் முதலியவற்றைத் தூய்மை செய்தல் ; பக்குவப்படுத்துதல் ; எரித்தல் . |
| புடல் | ஒரு கொடிவகை ; பேய்ப்புடல் . |
| புடலை | படர்கொடிவகை . |
| புடவி | பூமி , நிலவுலகம் . |
| புடவித்தல் | வீங்குதல் . |
| புடவிமூலம் | குறட்டைவகை . |
| புடவை | காண்க : புடைவை . |
| புடாயம் | மாணிக்கக் குற்றவகை . |
| புடை | பக்கம் ; இடம் ; பகுதி ; முறை ; கிணற்றினுடைய புடைப்பு ; எலிவளை ; துளை முதலியன ; ஏழனுருபு ; திரட்சி ; அடி ; குத்து ; அடித்து உண்டாக்கும் ஒலி ; பகை ; போர் ; பழம் முதலியவற்றின் பருத்த பாகம் . |
| புடை | (வி) அடி ; குத்து ; குட்டு ; வீங்கு ; விசிறு . |
| புடைக்கருத்து | இனம்பற்றிச் சார்ந்துவரும் கருத்து . |
| புடைக்காலம் | இடைப்பட்ட காலம் . |
| புடைக்கொள்ளுதல் | தட்டுதல் ; அருகு பருத்தல் . |
| புடைகவலுதல் | வேறு சிந்தையுடைத்தாதல் . |
| புடைகவற்றி | வேறுசிந்தை . |
| புடைகொள்ளுதல் | காண்க : புடைக்கொள்ளுதல் ; புரையோடுதல் . |
| புடைத்தல் | அரிசி முதலியவற்றைத் தவிடு , தூசி முதலியன போகும்படி முறத்தில் இட்டுத் தட்டுதல் ; அடித்தல் ; குத்துதல் ; கொட்டுதல் ; சிறகடித்தல் ; நூல் முதலியன ஏற்றுதல் ; துவைத்தல் ; குட்டுதல் ; உடைத்தல் ; நீந்துதல் ; வீங்குதல் ; பருத்தல் ; வெளிப்படுதல் ; ஆரவாரித்தல் ; அலைத்துப் பெருகுதல் ; தட்டுதல் . |
| புடைநகர் | புறநகர் . |
| புடைநூல் | நூல்வகை மூன்றனுள் முதனூல் வழிநூல்களோடு பொருண்முடிபு ஒரு புடையொத்து ஒழிந்தன ஒவ்வாமையுடைய நூல் . |
| புடைப்பு | கொழித்தல் ; அடித்தல் ; வீங்குதல் ; இரகசியம் முதலியன வெளியாகை . |
| புடைப்பெண் | வைப்பாட்டி . |
| புடைபடுதல் | அணுகுதல் ; இடம்படுதல் ; மிகுதியாதல் ; திரண்டு பருத்தல் . |
| புடைபரத்தல் | சுற்று விரிதல் . |
| புடைபெயர்ச்சி | வெளியேறுகை ; நிலைமாறுகை ; கருத்தாவின் தொழிற்பாடு . |
| புடைபெயர்தல் | நிலைமாறுதல் ; வெளியேறுதல் ; அசைதல் ; எழுந்திருத்தல் ; தொழிற்படுதல் . |
| புடைமண் | சுதை . |
| புடையல் | மாலை . |
| புடையன் | ஒரு பாம்புவகை . |
| புடையுண்ணுதல் | அடிபடுதல் . |
| புடைவை | மகளிர் சீலை ; ஆடை . |
| புடோதகம் | தெங்கு . |
| புடோல் | காண்க : புடல் . |
| புண் | உடல் ஊறு ; தசை ; வடு ; மனநோவு . |
| புண்டரம் | சந்தனம் , நீறு முதலியவற்றால் நெற்றி முதலியவற்றில் தரிக்கும் குறி ; வெண்கரும்பு ; கழுகு ; காண்க : குருக்கத்தி . |
| புண்டரிகத்தவன் | பிரமன் . |
| புண்டரிகத்தி | திருமகள் . |
| புண்டரிகம் | தென்கீழ்த்திசையானை ; புலி ; வண்டு ; தாமரை ; வெண்டாமரை . |
| புண்டரிகன் | திருமால் . |
| புண்டரிகை | திருமகள் . |
| புண்டரீகபுரம் | புலிக்கால் முனிவர் வணங்கிய சிதம்பரம் . |
| புண்டரீகம் | வெண்டாமரை ; காண்க : புண்டரிகம் ; கழுகு ; காண்க : மாசிபத்திரி ; பெருநோய்வகை ; வெண்கொற்றக்குடை ; வேள்விவகை ; புற்று ; அரியணை ; சவரி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 777 | 778 | 779 | 780 | 781 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புட்பபுடம் முதல் - புண்டரீகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, முதலியன, திருமகள், பருத்தல், வீங்குதல், தட்டுதல், புடைப்பு, புடை, புடைவை, வெண்டாமரை, புண்டரிகம், குத்து, நூல், புடல், கழுகு, புடைக்கொள்ளுதல், அடித்தல், புடமிடுதல், புட்பாஞ்சலி, திருமால், பூந்தேர், தேன், மகளிர், பூவின், பிரமன், தாமரை, தூய்மை, இணைக்கைவகை, இடம், பக்கம், புடமிடுகை, முதலியவற்றைத்

