தமிழ் - தமிழ் அகரமுதலி - பீடணி முதல் - பீரோடுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பீடணி | குழந்தைகளுக்கு நோயை உண்டாக்கும் தேவதை . |
| பீடபூமி | உயரமான அகன்ற நிலப்பகுதி . |
| பீடம் | இருக்கை ; அரியணை ; பலிபீடம் ; விக்கிரகபீடம் ; மேடை ; மலவாய் ; குறைவட்டத்தின் எஞ்சிய பாகம் . |
| பீடர் | பெருமையுடையவர் . |
| பீடரம் | கோயில் . |
| பீடனம் | வருத்தம் ; துன்புறுத்தல் . |
| பீடிகை | பீடம் ; பூந்தட்டு ; தேர்த்தட்டு ; அரியணை ; கடைத்தெரு ; முகவுரை ; அணிகலச் செப்பு ; முனிவர் இருக்கை . |
| பீடிகைத்தெரு | கடைவீதி . |
| பீடித்தல் | துன்புறுத்தல் . |
| பீடிப்பு | துன்பம் . |
| பீடு | பெருமை ; வலிமை ; தரிசுநிலம் ; தாழ்வு ; துன்பம் ; குறைவு ; ஒப்பு ; குழைவு . |
| பீடை | துன்பம் ; காலம் , கோள் முதலியவற்றால் நிகழுந் தீமை . |
| பீடைமாதம் | மார்கழிமாதம் . |
| பீத்தல் | காண்க : பீற்றல் ; தற்பெருமைப் பேச்சு . |
| பீத்து | தற்பெருமைப் பேச்சு . |
| பீத்துதல் | வீண்பெருமை பேசுதல் . |
| பீத்தை | நாடா . |
| பீத்தோல் | மேல்தோல் . |
| பீதகம் | பொன்னிறம் ; பொன் ; பொன்னரிதாரம் ; மஞ்சள் ; இருவேரி ; துகில்வகை ; தேன் ; பித்தளை ; ஒரு சாந்துவகை . |
| பீதகவாடை | பொன்னாலான ஆடை ; பொற்சரிகையுள்ள ஆடை . |
| பீதகன் | வியாழன் . |
| பீதகாட்டம் | செஞ்சந்தனக் கட்டை . |
| பீதகாரகம் | வேங்கைமரம் ; சந்தனம் ; செவ்வள்ளி . |
| பீதகாவேரம் | மஞ்சள் ; பித்தளை . |
| பீதகி | அரிதாரம் . |
| பீதசாரம் | காண்க : பீதகாரகம் . |
| பீதசாலம் | வேங்கைமரம் ; சந்தனம் . |
| பீதத்துரு | காண்க : மரமஞ்சள் . |
| பீததுண்டம் | சிச்சிலி . |
| பீதபீசம் | வெந்தயம் . |
| பீதம் | ஒரு சாந்துவகை ; பொன் ; பொன்னிறம் ; மஞ்சள் ; கத்தூரி ; இருவேரி ; குடிக்கை ; அரிதாரம் ; அச்சம் ; பருமை ; நேரம் ; நீர் ; பன்றி ; எலி . |
| பீதராகம் | தாமரை நூல் ; பொன்மை . |
| பீதரோகிணி | ஒரு மருந்துச் செடிவகை . |
| பீதலகம் | பித்தளை . |
| பீதவண்ணம் | கடுக்காய் . |
| பீதன் | அஞ்சுபவன் ; குடிப்பவன் ; சூரியன் . |
| பீதாம்பரம் | காண்க : பீதகவாடை . |
| பீதாம்பரன் | பொன்னாடை அணிந்த திருமால் . |
| பீதாம்பரி | பார்வதி . |
| பீதி | அச்சம் ; நோவுசெய்யும் நோய் ; குடிக்கை ; மதுக்கடை . |
| பீதிகை | செம்மல்லிகை . |
| பீதை | பொன்னிறப் பூவுள்ள மருதோன்றிமரம் ; மஞ்சள் . |
| பீந்துதல் | கொடுத்தல் . |
| பீந்தோல் | காண்க : பீத்தோல் . |
| பீநாறி | ஒரு மரவகை ; பெருமரம் . |
| பீப்பா | எண்ணெய் முதலியன அடைக்கும் மரப்பெட்டிவகை . |
| பீப்பாய் | எண்ணெய் முதலியன அடைக்கும் மரப்பெட்டிவகை . |
| பீபற்சு | சீர்குலைவு ; தொந்தரவு ; அருச்சுனன் . |
| பீமநாதம் | சிங்கம் ; பேரொலி . |
| பீமபாகம் | சிறந்த சமையல் . |
| பீமம் | அச்சம் ; பருமை . |
| பீமன் | சிவபிரான் ; வீமசேனன் ; விதர்ப்பநாட்டு மன்னன் . |
| பீமாபத்திரம் | உறுதியீட்டுச் சாசனம் . |
| பீயாக்குதல் | நாசஞ்செய்தல் . |
| பீயு | ஆந்தை ; காகம் ; காலம் ; சூரியன் . |
| பீர் | பசலைநிறம் ; வெளுப்பு ; பீர்க்கு ; முலைப்பால் ; முகம்மதியப் பெரியார் ; முகம்மதியச் சப்பரம் ; மரவகை ; பெருக்கு |
| பீர்க்கங்கூடு | பீர்க்கின் உள்ளீடற்ற மேல்தோடு . |
| பீர்க்கு | ஒரு கொடிவகை . |
| பீர்ச்சாங்குழல் | காண்க : பீச்சாங்குழல் . |
| பீர்ச்சுதல் | காண்க : பீச்சுதல் . |
| பீர்தங்குதல் | காண்க : பீர்பூத்தல் . |
| பீர்பீராய் | தாரைதாரையாய் . |
| பீர்பூத்தல் | காமநோயால் பீர்க்கம்பூப்போல உடல் பசத்தல் . |
| பீர்விடுதல் | பெருக்கெடுத்தல் . |
| பீரங்கி | பெருங்குழாயான வெடிகருவி . |
| பீரம் | காண்க : பீர்க்கு ; பசலைநிறம் ; பூவரசமரம் ; காண்க : வாகை ; தாய்ப்பால் ; வீரம் ; வலிமை . |
| பீராய்தல் | பொறுக்கல் ; ஆராய்தல் ; சிறிது சிறிதாகச் சேர்த்தல் ; கொழித்தல் . |
| பீரிடுதல் | விரைந்து பாய்தல் ; நீர் முதலியன தாரையாகப் பாய்தல் ; அலறுசத்தமிடுதல் . |
| பீரு | புருவம் ; அச்சமுள்ளோன் . |
| பீருகம் | ஆந்தை ; கரடி ; காடு . |
| பீருகன் | அச்சமுடையோன் . |
| பீருதந்தி | தண்ணீர்விட்டான்கிழங்கு . |
| பீரெனல் | விரைந்து பாய்தற்குறிப்பு . |
| பீரை | பீர்க்கங்கொடி . |
| பீரோ | நிலைப்பேழை , அலமாரி . |
| பீரோடுதல் | முலைப்பால் வெளிப்படுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 773 | 774 | 775 | 776 | 777 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பீடணி முதல் - பீரோடுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மஞ்சள், பீர்க்கு, முதலியன, பித்தளை, அச்சம், துன்பம், எண்ணெய், சூரியன், பருமை, நீர், மரவகை, மரப்பெட்டிவகை, பீர்பூத்தல், விரைந்து, பாய்தல், முலைப்பால், பசலைநிறம், குடிக்கை, ஆந்தை, அடைக்கும், வேங்கைமரம், காலம், தற்பெருமைப், பேச்சு, வலிமை, துன்புறுத்தல், இருக்கை, அரியணை, பீத்தோல், பொன்னிறம், பீதகாரகம், பீடம், சந்தனம், பீதகவாடை, சாந்துவகை, பொன், இருவேரி, அரிதாரம்

