முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » புகழ்வதினிகழ்தல் முதல் - புங்கவம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - புகழ்வதினிகழ்தல் முதல் - புங்கவம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| புகழ்வதினிகழ்தல் | இகழாவிகழ்ச்சி |
| புகழ்வீசுசந்திரன் | பச்சைக்கருப்பூரம் ; கருப்பூரமரம் . |
| புகழ்வு | புகழ்ச்சி . |
| புகழாப்புகழ்ச்சி | பழிப்பதுபோலப் புகழும் அணிவகை . |
| புகழாவாகை | அகத்திமரம் ; அகங்காரம் . |
| புகழாளன் | கீர்த்தியுடையோன் . |
| புகற்சி | விருப்பம் ; காதல் . |
| புகற்றுதல் | விரும்பச்செய்தல் . |
| புகா | உணவு . |
| புகார் | ஆற்றுமுகம் ; கழிமுகம் ; காவிரிப்பூம்பட்டினம் ; பனிப்படலம் ; மந்தாரம் ; மழை பெய்யும் மேகம் ; கபிலமரம் ; பெருங்கூச்சல் ; இகழ்விளைக்கும் செய்தி ; முறையீடு . |
| புகிடி | மாதர் காதணியுள் ஒன்று . |
| புகுடி | கழி ; வாயில் ; புருவம் ; காண்க : புகிடி . |
| புகுத்தல் | போகவிடுதல் ; உட்செலுத்துதல் . |
| புகுதல் | அடைதல் ; தொடங்குதல் ; உட்செல்லுதல் ; தாழ்நிலையடைதல் ; ஆயுளடைதல் ; ஏறுதல் ; நிகழ்தல் ; உட்படுதல் ; அகப்படுதல் . |
| புகுதி | மனைவாயில் ; நுழைவாயில் ; நிகழ்ச்சி ; ஆழ்ந்தறியும் நுண்ணறிவு ; வழி ; வருவாய் . |
| புகுதுதல் | நிகழ்தல் ; நுழைதல் . |
| புகுந்தகம் | காண்க : புக்ககம் . |
| புகுந்துபார்த்தல் | ஆழ்ந்துநோக்குதல் . |
| புகுபுகெனல் | விரைவுக்குறிப்பு ; ஒலிக்குறிப்பு . |
| புகுமுகம்புரிதல் | ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்ட விடத்துத் தலைவன் தன்னை நோக்குதலை விரும்பும் தலைவியின் உள்ள நிகழ்ச்சி . |
| புகை | நெருப்பிலிருந்து தோன்றும் கரும்படலம் ; பனிப்படலம் ; ஆவி ; தென்கீழ்த் திசைப்பாலன் குறி ; யோசனைத்தொலைவு ; கண்ணில் விழும் படலவகை ; துயரம் ; மாணிக்கக் குற்றம் ; சாம்பிராணிப்புகை ; காண்க : தூபமணி ; புகைவட்டம் . |
| புகைக்கப்பல் | நீராவிக்கப்பல் . |
| புகைக்குண்டு | நச்சுப்புகை புகைக்கும் பாண்டம் ; துப்பாக்கிக்குண்டு . |
| புகைக்கூடு | புகைபோக்கி ; வானக்கூடு . |
| புகைக்கூண்டு | காண்க : புகைக்கூடு ; ஆகாசவாணம் . |
| புகைக்கொடி | தூமகேது , வால்நட்சத்திரம் . |
| புகைகட்டுதல் | புகையேற்றுதல் ; புகையால் நிறமூட்டுதல் . |
| புகைகாட்டுதல் | புகைத்து நோய் நீக்குதல் ; புகையுண்டாக்குதல் ; புகைபடைத்தல் . |
| புகைகுடித்தல் | புகையிலை முதலியவற்றின் புகையை உட்கொள்ளுதல் . |
| புகைச்சல் | புகை ; இருள் ; பார்வை மயங்குகை ; வயிற்றெரிவு ; காண்க : புகையிருமல் ; செய்தி வெளிப்படத் தொடங்குகை ; மனவெரிச்சல் . |
| புகைத்தல் | கோபத்தாலுண்டாகும் மனவெரிச்சல் ; புகையச்செய்தல் ; புகையை உட்புகுத்தி உயிரினங்களை அழித்தல் ; கெடுத்தல் ; சினக்குறிப்புக் காட்டுதல் . |
| புகைதல் | புகையெழும்புதல் ; ஆவியெழுதல் ; செய்தி வெளிப்படத் தொடங்குதல் ; வருந்துதல் ; கோபித்தல் ; பயிர் முதலியன தீய்தல் ; குடி முதலியன அழிதல் ; தொண்டை முதலியன கரகரத்தல் ; மாறுபடுதல் . |
| புகைநாற்றம் | கும்பல் வீச்சம் ; தீய்ந்த நாற்றம் . |
| புகைப்படம் | ஒளிப்படம் , நிழற்படம் . |
| புகைப்படலம் | புகைச்செறிவு . |
| புகைபோடுதல் | காண்க : தூபம்போடுதல் . |
| புகைமணம் | காண்க : புகைநாற்றம் . |
| புகையாற்றி | ஒட்டடை . |
| புகையிருமல் | வெப்பத்தினால் புகைந்து இருமச்செய்யும் நோய்வகை . |
| புகையிலை | ஒரு செடிவகை . |
| புகையிலைகட்டுதல் | புகையிலைச் சரக்குக் கட்டுதல் ; புகையிலையைப் பாடஞ்செய்தல் . |
| புகையிலைகுடித்தல் | புகையிலைப் புகையை உட்கொள்ளுதல் . |
| புகையிலைத்தூள் | மூக்குப்பொடி . |
| புகையிலைபோடுதல் | வெற்றிலையோடு புகையிலையை மெல்லுதல் . |
| புகையுண்ணுதல் | சுருட்டுப்பிடித்தல் ; புகைபட்டுப் படத்தின் உருக்கெடுதல் . |
| புகையுயிர்த்தல் | கொதிப்படைதல் . |
| புகையுறுப்பு | நேர்கட்டி , செந்தேன் , நிரியாசம் , பச்சிலை , சந்தனம் , அகில் என்னும் ஆறு வகைப் புகைச்சரக்கு . |
| புகையுறை | காண்க : புகையாற்றி . |
| புகையூட்டுதல் | கூந்தல் முதலியவற்றுக்கு நறும் புகையூட்டுதல் ; புகை பிடிப்பித்தல் ; நோவுற்ற உடற்பகுதியில் மருந்துப்புகை யேற்றிச் சிகிச்சைசெய்தல் . |
| புகையூரல் | படிந்த புகைத்திரள் . |
| புகையூறல் | படிந்த புகைத்திரள் . |
| புகைவட்டம் | எழுநரகத்துள் ஒன்று . |
| புகைவு | புகைச்சல் ; மனவெரிச்சல் ; வறட்டிருமல் . |
| புங்கம் | அம்பின் அடிப்பாகம் ; அம்பு ; குவியல் ; சிறந்தது ; உயர்ச்சி ; மெல்லாடை ; சிறுதுகில் ; காண்க : புன்கு ; தூய்மை . |
| புங்கமரம் | ஒரு மரவகை . |
| புங்கர்க்காழகம் | மெல்லிய ஆடைவகை . |
| புங்கவம் | அம்பு ; எருது , நந்தி ; சிறந்தது . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 775 | 776 | 777 | 778 | 779 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புகழ்வதினிகழ்தல் முதல் - புங்கவம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, புகை, முதலியன, மனவெரிச்சல், புகையை, செய்தி, புகையாற்றி, புகைநாற்றம், புகையூட்டுதல், புகிடி, படிந்த, சிறந்தது, அம்பு, புகைத்திரள், வெளிப்படத், புகையிருமல், புகைவட்டம், ஒன்று, நிகழ்ச்சி, நிகழ்தல், புகைக்கூடு, புகையிலை, புகைச்சல், உட்கொள்ளுதல், பனிப்படலம், தொடங்குதல்

