தமிழ் - தமிழ் அகரமுதலி - பின்போக்கு முதல் - பின்னிலை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பின்போக்கு | தொடர்ச்சி ; வீழ்ச்சிநிலை ; அறிவு , குணம் முதலியவற்றில் பிந்துகை ; முன்னேற்றம் இன்றிப் பழைய முறையில் செல்லுதல் . |
| பின்போடுதல் | தாழ்த்தல் . |
| பின்மழை | காலந்தவறின மழை ; மழைக்காலத்தின் பிற்பகுதியிற் பெய்யும் மழை . |
| பின்மாரி | காலந்தவறின மழை ; மழைக்காலத்தின் பிற்பகுதியிற் பெய்யும் மழை . |
| பின்மாலை | வைகறை , விடியற்காலம் . |
| பின்முடுகுவெண்பா | பின்னிரண்டடி முடுக்காய் வரும் வெண்பா . |
| பின்மொழிநிலையல் | அடைகடல்' என்னும் தொடரிற்போல முதன்மொழியிற் பொருள் சிறந்து நிற்குந்தொடர் . |
| பின்மோனை | இரண்டாஞ்சீரிலும் இறுதிச்சீரிலும் வரும் மோனை . |
| பின்வருநிலை | முன்வந்துள்ள சொல்லும் பொருளும் தனித்தனியாயினும் கூடியாயினும் பல இடத்தும் பின்னும்வரும் அணிவகை . |
| பின்வாங்குதல் | பின்போதல் ; தோல்வியடைதல் ; ஒப்பந்தத்தினின்று நெகிழ்தல் ; மார்க்கநெறி தவறுதல் . |
| பின்றலை | தலையின் பின்புறம் . |
| பின்றாவி | முதுகுமறையத் தொங்குங் கழுத்தணிவகை . |
| பின்றி | மீள . |
| பின்று | பின்பு . |
| பின்றுதல் | பின்னிடுதல் ; கீழ்ப்பட்டிருத்தல் ; மீளுதல் ; சேய்மையாதல் ; ஒழுக்கம் முதலியவற்றிற் பிறழ்தல் ; மாறுபடுதல் . |
| பின்றை | பின்னைநாள் ; பின்பு . |
| பின்றோன்றல் | தம்பி , பின்பிறந்தான் . |
| பின்னகம் | பின்னிய மயிர் ; ஆண்பால் மயிர்முடி ; வேறுபாடு ; பேதி . |
| பின்னகன் | பேதம் உண்டுபண்ணுவோன் . |
| பின்னகுணனம் | ஒரு பின்னத்தை அது கொண்டே பெருக்குவது . |
| பின்னங்கால் | விலங்கின் பின்புறத்துக் கால் ; பாதத்தின் பின்புறம் . |
| பின்னடி | பிற்பட்டது ; கடைசி ; வருங்காலம் ; பிற்சந்ததி ; பின்புறம் ; உடனே . |
| பின்னடைப்பன் | மூத்திரத்தைத் தடுக்குமொரு மாட்டுநோய்வகை . |
| பின்னணி | பிற்படை ; பின்வரிசை . |
| பின்னணை | வீட்டுக்கொல்லை ; பின்பிறந்த கன்று அல்லது குழந்தை . |
| பின்னதுநிறுத்தல் | உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்றான முன்வைக்க வேண்டியதைப் பின்னே வைத்தல் . |
| பின்னந்தண்டு | பின்காற் சீப்பு . |
| பின்னந்தலை | தலையின் பின்புறம் ; பிடர் . |
| பின்னந்தொடை | தொடையின் பின்பக்கம் ; பின்தொடை இறைச்சி . |
| பின்னப்படுத்துதல் | சிதறுவித்தல் . |
| பின்னப்படுதல் | துன்பமடைதல் ; சிதைதல் ; தடைப்படுதல் ; வேறுபடுதல் . |
| பின்னபதம் | தொகாநிலையாய் நிற்குஞ் சொல் . |
| பின்னபேதகம் | நிறைவேற்றாமை ; பகைமை . |
| பின்னபேதம் | நிறைவேற்றாமை ; பகைமை . |
| பின்னம் | மாறுபாடு ; வேறுபாடு ; வேறாந்தன்மை ; சிதைவு ; பிளவு ; உறுப்புக்கோணல் ; கேடு ; தடை ; கீழ்வாயிலக்கம் ; தூள் ; பின்னர் ; பின்பு ; பகுப்பு . |
| பின்னர் | பின்பு ; பின்தொடர்வோர் ; தம்பியர் ; வேளாளர் . |
| பின்னரை | நட்சத்திரத்தின் பின்பாதி ; சல்லடை . |
| பின்னல் | பின்னுதல் ; முடைதல் ; தொடர்ச்சி ; பின்னப்பட்டது ; அரைஞாண் ; சிக்கு ; சடை ; தவறு ; பருத்தி . |
| பின்னவர் | பிற்பட்டவர் ; இளையவர் . |
| பின்னவருக்கம் | காண்க : பின்னகுணனம் . |
| பின்னவள் | தங்கை ; கடைசியாகப் பிறந்த மகள் . |
| பின்னவன் | தம்பி ; கடைசியாகப் பிறந்த மகன் . |
| பின்னளபெடை | இரண்டாஞ் சீர்க்கண்ணும் நான்காஞ் சீர்க்கண்ணும் அளபெடை வரத்தொடுக்குந் தொடை . |
| பின்னற்சன்னல் | வலைக்கதவுகளையுடைய சன்னல் . |
| பின்னன் | காண்க : பின்னவன் . |
| பின்னனை | செவிலித்தாய் . |
| பின்னாடி | பின்பு . |
| பின்னாதாரம் | மூலாதாரத்தினின்று நான்கு விரற்கிடை மேலிருக்கும் உடம்பின் உட்பகுதி . |
| பின்னாலே | பிற்பாடு . |
| பின்னாற்போதல் | பின்செல்லுதல் . |
| பின்னி | தங்கை ; சிறிய தாய் . |
| பின்னிடுதல் | பின்செல்லுதல் ; பின்புறமாதல் ; இணங்காதிருத்தல் ; தாக்கித் திரும்புதல் ; தோற்றல் ; தாமதமாதல் ; பின்வாங்குதல் ; பிற்படக் கடத்தல் . |
| பின்னிடைதல் | பின்னிடுதல் . |
| பின்னிதம் | மாறுபாடு . |
| பின்னிதம்பண்ணுதல் | புறக்கணித்தல் ; இணங்காதிருத்தல் . |
| பின்னியாசம் | பெருங்காயம் . |
| பின்னிலவு | அபரப்பக்கத்தின் பிற்பகுதி ; தேய்பிறை . |
| பின்னிலை | குறைவேண்டுகை ; வழிபாடு ; பிற்காலத்து வருவது ; பின்னே சென்று போர்புரிகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 771 | 772 | 773 | 774 | 775 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பின்போக்கு முதல் - பின்னிலை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பின்பு, பின்புறம், பின்னிடுதல், பின்னர், பகைமை, மாறுபாடு, காண்க, தங்கை, பின்செல்லுதல், இணங்காதிருத்தல், சீர்க்கண்ணும், பின்னவன், கடைசியாகப், பிறந்த, நிறைவேற்றாமை, வேறுபாடு, பிற்பகுதியிற், பெய்யும், மழைக்காலத்தின், காலந்தவறின, தொடர்ச்சி, வரும், பின்வாங்குதல், பின்னகுணனம், சொல், தம்பி, தலையின், பின்னே

