தமிழ் - தமிழ் அகரமுதலி - பீலகம் முதல் - புகழ்மை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பீலகம் | காண்க : பீலிகை . |
| பீலி | மயில்தோகை ; மயில் ; சிற்றாலவட்டம் ; வெண்குடை ; பொன் ; மகளிரிடும் கால்விரலணி ; சிறுசின்னம் ; வாத்தியப்பொது ; பெருஞ்சவளம் ; மலை ; மதில் ; நத்தை ஓடு ; பனங்குருத்து ; நீர்பாய் தொட்டி ; பந்தயமுறி . |
| பீலிக்கண் | மயில்தோகைக்கண் ; மயிலிறகு . |
| பீலிக்குஞ்சம் | அலங்காரத் தொங்கல் . |
| பீலிக்குடை | மயில்தோகையாலான குடை ; மயிற்குஞ்சம் . |
| பீலிக்கொட்டு | நீர்பாய் தொட்டி . |
| பீலிகை | எறும்பு . |
| பீலித்தண்டு | எறியாயுதம் , பிண்டிபாலம் . |
| பீலிப்பட்டை | பெரிய இறைகூடை . |
| பீலிபோடுதல் | பந்தயமுறியிடுதல் . |
| பீலியார் | சமணர் . |
| பீலிவாகை | நீண்ட மரவகை . |
| பீலு | அணு ; அச்சம் ; உகாமரம் ; யானை ; எறும்பு . |
| பீலுகம் | கரடி . |
| பீலுகன் | காண்க : பீருகன் . |
| பீவரம் | ஆமை ; கொழுப்பு . |
| பீவரி | அமுக்கிரா ; பசு ; பருவப்பெண் ; பெண்கிளி . |
| பீழ்தல் | பிடுங்குதல் . |
| பீழித்தல் | வருத்துதல் . |
| பீழை | துன்பம் . |
| பீள் | கரு ; தானிய இளங்கதிர் ; இளமை . |
| பீளல் | பெண்குறி . |
| பீளை | கண்மலம் . |
| பீளைசாடுதல் | கண்ணழுக்குப் புறப்படல் . |
| பீற்றல் | கந்தை , கிழியல் ; கடனாளி . |
| பீறல் | கிழித்தல் ; கந்தை , கிழியல் . |
| பீறு | கிழிவு ; மலவாய் . |
| பீறுதல் | கிழித்தல் ; கிழிதல் ; பிளத்தல் ; கீறுதல் . |
| பீனசம் | சளிநோய்வகை ; மூக்கடைப்புநோய் . |
| பீனம் | பருமை ; பெருமை ; காண்க : நீர்ப்பாசி ; கொடிப்பாசி ; பேடி ; ஊர் . |
| பீனிசம் | காண்க : பீனசம் . |
| பீனிசவடைப்பு | சளியால் மூக்கு அடைத்துக் கொள்கை . |
| பு | ஓர் உயிர்மெய்யெழுத்து (ப்+உ) ; தொழிற்பெயர் விகுதி ; பண்புப்பெயர் விகுதி ; இறந்தகால வினையெச்ச விகுதி . |
| புக்ககம் | கணவன் வீடு . |
| புக்கசன் | சண்டாளன் . |
| புக்கி | பிராய்மரம் . |
| புக்கில் | உடம்பு ; வீடு ; புகலிடம் ; தங்குமிடம் . |
| புக்கு | காண்க : புக்கி . |
| புக்குப்புக்கெனல் | நெருப்பில் காற்றுப்படுவதால் உண்டாகும் ஒலிக்குறிப்பு . |
| புக்குழி | காண்க : புக்ககம் . |
| புக்கை | நீருற்றுள்ள கேணி ; ஒரு கூழ்வகை . |
| புக்தம் | உணவு ; துய்க்கப்பட்டது . |
| புகட்டுதல் | ஊட்டுதல் ; அறிவுறுத்துதல் ; உட்புகுத்துதல் . |
| புகடு | அடுப்பின் சுற்றுப்புறத்திலுள்ள மேடு . |
| புகடுதல் | வீசியெறிதல் . |
| புகர் | கபிலநிறம் ; கபிலநிறமுள்ள மாடு ; நிறம் ; ஒளி ; அழகு ; சுக்கிரன் ; புள்ளி ; குற்றம் ; கறை ; அருவி ; உயிர் ; சோறு ; கொக்கு . |
| புகர்க்கலை | புள்ளிமான்கலை . |
| புகர்முகம் | யானை ; ஒரு பாணவகை . |
| புகர்வு | புகுகை ; மேலேறுகை ; உணவு . |
| புகரோன் | சுக்கிரன் . |
| புகல் | புகுகை ; இருப்பிடம் ; துணை ; பற்றுக்கோடு ; தஞ்சம் ; உடம்பு ; தானியக்குதிர் ; வழிவகை ; போக்கு ; சொல் ; விருப்பம் ; கொண்டாடுகை ; பாடும் முறை ; வெற்றி ; புகழ் ; புரையுள்ளது . |
| புகல்வி | விலங்கின் ஆண் . |
| புகல்வு | மனச்செருக்கு ; விருப்பம் ; புகலுதல் . |
| புகலி | புதிதாகக் குடியேறியவன் ; சீகாழி . |
| புகலிடம் | இருப்பிடம் ; ஊர் ; தஞ்சம் . |
| புகலுதல் | சொல்லுதல் ; விரும்புதல் ; தெரிதல் ; ஒலித்தல் ; மகிழ்தல் . |
| புகவு | புகுகை ; மேலேறுகை ; உணவு . |
| புகழ் | துதி ; கீர்த்தி ; அருஞ்செயல் ; அகத்தி ; வாகை . |
| புகழ்க்கூத்து | கதைத்தலைவன் புகழ்குறித்து நிகழும் ஆடல் . |
| புகழ்கூறல் | கீர்த்தியை எடுத்து விளக்குகை . |
| புகழ்ச்சி | துதி . |
| புகழ்ச்சிமாலை | தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகையுள் அகவலடியும் கலியடியும் மயங்கிய வஞ்சிப்பாவால் மகளிரது சிறப்பைக் கூறும் நூல் . |
| புகழ்தல் | உயர்த்திக் கூறுதல் ; துதித்தல் ; பாராட்டுதல் . |
| புகழ்பொருள் | உவமேயம் . |
| புகழ்மாலை | புகழை வெளிப்படுத்தும் நூல் . |
| புகழ்மை | புகழ் ; புகழுடைமை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 774 | 775 | 776 | 777 | 778 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பீலகம் முதல் - புகழ்மை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, விகுதி, புகுகை, புகழ், உணவு, புகலிடம், மேலேறுகை, சுக்கிரன், தஞ்சம், துதி, நூல், புகலுதல், விருப்பம், உடம்பு, இருப்பிடம், வீடு, எறும்பு, யானை, தொட்டி, நீர்பாய், பீலிகை, கந்தை, கிழியல், சொல், புக்ககம், பீனசம், கிழித்தல், புக்கி

