தமிழ் - தமிழ் அகரமுதலி - பின்னிவருதல் முதல் - பீடணம் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
பின்னிவருதல் | நெருங்கிவருதல் . |
பின்னிற்றல் | பிறகிடுதல் ; இணங்குதல் ; இரந்து நிற்றல் ; பின்செல்லுதல் ; மறுத்தல் . |
பின்னின்மை | அழிவுபட்ட பாவம் . |
பின்னுகால் | மாட்டுக்குற்றவகை . |
பின்னுதல் | கூந்தல் , ஓலை முதலியவற்றை முடைதல் ; பிணித்தல் ; தழுவுதல் ; கூறுதல் ; இடறுதல் ; மனங்கலத்தல் . |
பின்னும் | மேலும் ; மறுபடியும் . |
பின்னெதுகை | இரண்டாஞ் சீர்க்கண்ணும் நான்காஞ் சீர்க்கண்ணும் எதுகை யமையுமாறு தொடுப்பது . |
பின்னே | பின்பு . |
பின்னேரம் | பிற்பகல் . |
பின்னை | பிந்தின காலம் ; தங்கை ; தம்பி ; மேலும் ; பிறகு ; திருமகள் , நப்பின்னை ; தலைமயிர் ; புன்னைமரம் ; நாய்த்தேக்குமரம் . |
பின்னைக்கணம் | வருங்காலம் . |
பின்னைகேள்வன் | நப்பின்னைப்பிராட்டியின் மணாளனான திருமால் . |
பின்னைநாள் | மறுநாள் . |
பின்னோக்குதல் | வருவதை எதிர்பார்த்தல் ; பின்னால் பார்த்தல் ; பின்வாங்குதல் . |
பின்னோடே | அடுத்து ; பின்னால் ; பின்புறமாய் . |
பின்னோதரன் | மாற்றாந்தாய் மகன் . |
பின்னோன் | பிற்பட்டவன் ; தம்பி ; வேளாளன் . |
பினத்துதல் | காண்க : பினாத்துதல் . |
பினாகபாணி | பினாகவில்லைக் கையிலுடைய சிவபிரான் . |
பினாகம் | சிவன் வில் ; திரிசூலம் ; மணிமாலை ; மண்மாரி . |
பினாகி | சிவன் ; பெண்ணையாறு ; அறுகு . |
பினாகினி | பெண்ணையாறு . |
பினாத்துதல் | புலப்பம் , பிதற்றுதல் . |
பினாதி | புல்லன் , அற்பன் . |
பினைதல் | பிசைதல் ; பிசைவதுபோல் வயிற்றில் நோவுண்டாதல் ; தொல்லைப்படுத்துதல் . |
பீ | ஓர் உயிர்மெய்யெழுத்து (ப்+ஈ) ; மலம் ; தொண்டிமரம் ; அச்சம் ; பெருமரம் . |
பீக்கம் | எட்டிக்கொட்டை . |
பீக்கருவேல் | ஒரு வேலமரவகை ; காண்க : உடைவேல் . |
பீக்கலாட்டம் | தடை ; தொந்தரவு . |
பீக்கலாத்தி | காண்க : சங்கங்குப்பி . |
பீக்கை | இலேசானது ; பசளைக்கீரை ; பீச்சாங்குழல் . |
பீகம் | பெருமாட்டி ; உயர்ந்த நிலையிலுள்ள முகமதியப் பெண் ; பூட்டுவகை ; திறவுகோல் . |
பீங்கான் | ஒரு மட்பாண்டவகை . |
பீச்சல் | வயிற்றுக்கழிச்சல் ; பீச்சுகை . |
பீச்சாக்கத்தி | எழுத்தாணி அமைந்த கைப்பிடியுள்ள கத்தி ; ஒரு நீண்ட கத்திவகை . |
பீச்சாங்கட்டி | உலோகக்கட்டி . |
பீச்சாங்கத்தி | காண்க : பீச்சாக்கத்தி . |
பீச்சாங்குழல் | நீர் முதலியவற்றைப் பீச்சும் கருவி . |
பீச்சாங்கை | இடக்கை . |
பீச்சாங்கொள்ளி | அச்சமுடையோன் . |
பீச்சுதல் | நீர்மப் பொருளைக் கருவிமூலம் வெளியேற்றுதல் ; மலங்கழிதல் . |
பீச்சுவிளாத்தி | காண்க : சங்கங்குப்பி ; விளாமரம் . |
பீச்சைக்கால் | இடக்கால் . |
பீசகணிதம் | இயற்கணிதம் . |
பீசகோசம் | பூவில் விதையுள்ள இடம் . |
பீசநியாயம் | காண்க : பீசாங்குரநியாயம் . |
பீசபூரம் | மாதுளை . |
பீசம் | விதை ; மூலம் ; அண்டவிதை ; சுக்கிலம் ; வழித்தோன்றல் ; காண்க : பீசாட்சரம் ; தாமரைத்தண்டு . |
பீசம்வாங்குதல் | விதையடித்தல் . |
பீசாங்குரநியாயம் | காரணகாரியம் இதுவதுவென முன்பின் வரையறுக்கப்படா வழக்கு . |
பீசாட்சரம் | மந்திரத்தின் சிறப்பெழுத்து . |
பீசி | விதையையுடையது ; பூவில் விதையுள்ள இடம் . |
பீஞ்சல் | காண்க : சங்கங்குப்பி . |
பீட்கன்று | கீழ்க்(ங்)கன்று . |
பீட்டகம் | தொழில் , உத்தியோகம் . |
பீட்டன் | இரண்டாம் பாட்டன் ; இரண்டாம் பேரன் ; பாட்டன் ; குதிரைவண்டிவகை . |
பீட்டி | பாட்டி ; உடுப்பில் இரட்டையாக இணைக்கப்பட்ட மார்பின்துணி . |
பீட்டை | பயிரின் இளஞ்சூல் ; முதல் அறுவடையின் பின்னுள்ள பயிரின் இளங்கதிர் . |
பீடணம் | அச்சம் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 772 | 773 | 774 | 775 | 776 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பின்னிவருதல் முதல் - பீடணம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சங்கங்குப்பி, இடம், விதையுள்ள, பூவில், பீசாங்குரநியாயம், பீசாட்சரம், பயிரின், பாட்டன், இரண்டாம், பீச்சாக்கத்தி, பீச்சாங்குழல், பினாத்துதல், சீர்க்கண்ணும், பின்னால், சிவன், பெண்ணையாறு, மேலும், அச்சம், தம்பி