முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பிறவிக்குருடன் முதல் - பின்புறம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பிறவிக்குருடன் முதல் - பின்புறம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பிறவிக்குருடன் | குருடனாய்ப் பிறந்தவன் . |
| பிறவிகளறவுரை | முற்பிறவியைக் கூறுகின்ற அறவோர் உரை . |
| பிறவிச்சுபாவம் | காண்க : பிறவிக்குணம் . |
| பிறவிச்செல்வம் | கருவிலே உற்ற திரு . |
| பிறவித்துயர் | பிறத்தலாகிய துன்பம் ; உடன் பிறந்தார் சாவால் உண்டாகும் துயரம் . |
| பிறவித்துழதி | பிறத்தலாகிய துன்பம் ; உடன் பிறந்தார் சாவால் உண்டாகும் துயரம் . |
| பிறவிநோய் | பிறப்பிலேயுண்டான நோய் ; பிறக்கையாகிய துன்பம் . |
| பிறவிப்பயன் | பிறத்தலின் நன்மை . |
| பிறவிவேர் | பிறத்தலுக்குக் காரணமாகிய அவா . |
| பிறவினை | பிறரைக்கொண்டு செய்விக்குஞ் செயலை உணர்த்தும் வினை ; காமம் . |
| பிறழ்ச்சி | மாறுகை ; ஒழுங்கின்மை ; வாக்கு மாறுகை ; புடைபெயர்ச்சி ; விளங்குகை ; நடுக்கம் . |
| பிறழ்தல் | மாறுதல் ; முறைகெடுதல் ; வாக்கு மாறுதல் ; மாறுபட்டுக் கிடத்தல் ; துள்ளுதல் ; புடைபெயர்தல் ; பெயர்தல் ; விளங்குதல் ; முரிதல் ; திகைத்தல் ; நடுங்குதல் ; இறத்தல் . |
| பிறழ்வு | காண்க : பிறழ்ச்சி . |
| பிறள் | மற்றையாள் . |
| பிறன் | மற்றையான் ; அயலான் ; மனம் வேறுபட்டவன் ; பகைஞன் . |
| பிறன்கோட்கூறல் | தன் நூலினிடத்தில் பிறனது கொள்கையைச் சொல்லுதல் . |
| பிறன்பொருளாள் | பிறன்மனைவி . |
| பிறன்மனை | அயலான் வீடு ; அயலான் மனைவி . |
| பிறனில் | அயலான் வீடு ; அயலான் மனைவி . |
| பிறாண்டு | பிற இடம் . |
| பிறாண்டுதல் | நகத்தாற் கீறுதல் . |
| பிறிகதிர்ப்படுதல் | கெடுதல் ; விட்டுநீங்குதல் . |
| பிறிதின்கிழமை | ஒரு பொருளுக்கும் அதன் உறுப்பாகாத பிற பொருளுக்கும் உள்ள வேறுபாட்டுத் தொடர்பு . |
| பிறிது | வேறானது . |
| பிறிதுசாபம் | சாபமாற்று . |
| பிறிதுபடுபாட்டு | மிறைக்கவியில் ஒன்று . |
| பிறிதுமொழிதல் | கருதிய பொருளை மறைத்து அதனைப் புலப்படுத்தற்கு அதுபோன்ற பிறிதொன்றனைக் கூறும் அணி . |
| பிறிதுவிதி | சிறப்புவிதி . |
| பிறியகம் | கடப்பமரம் ; ஞாழல்மரம் ; வேங்கைமரம் . |
| பிறியோலை | இடையர் ஆடுகளைப் பிரித்தற்கு உதவும் ஓலைத்தட்டி . |
| பிறை | இளஞ்சந்திரன் ; மகளிர் தலையணிவகை ; அபிநயவகை . |
| பிறைக்கை | அபிநயவகை . |
| பிறைக்கொழுந்து | இளம்பிறை . |
| பிறைச்சந்திரன் | மூன்றாம் பிறை . |
| பிறைச்சிந்தாக்கு | கழுத்தணிவகை . |
| பிறைசூடி | பிறையைத் தலையில் அணிந்த சிவபிரான் . |
| பிறைத்தலையம்பு | பிறைச்சந்திரன் போன்ற வடிவையுடைய அம்பு . |
| பிறைதொழுதல் | பிறைச்சந்திரனை வணங்குதல் . |
| பிறைமலர் | பிறைபோன்ற மலருடைய அகத்தி . |
| பிறைமுகவாளி | காண்க : பிறைத்தலையம்பு . |
| பிறையம்பு | காண்க : பிறைத்தலையம்பு . |
| பிறையிரும்பு | கருக்கறுவாள் . |
| பிறைவடம் | சந்திரகாரம் என்னும் அணிகலன் . |
| பிறைவடிவு | வளைவுருவம் . |
| பிறைவளைவுக்குறி | பிறையின் வளைவுபோன்று ஒன்றன் இரு பக்கத்தும் இடும் வளைவுக் குறியீடு . |
| பிறைவாய்வாளி | காண்க : பிறைத்தலையம்பு . |
| பின் | பின்னுகை ; பின்பக்கம் ; இடம் ; கடை ; பிற்காலம் ; தம்பி ; பிறகு ; ஏழனுருபு . |
| பின்கட்டு | வீட்டின் பின்புறக் கட்டடம் ; கைகளைப் பின்புறமாகச் சேர்த்துக் கட்டுகை . |
| பின்கதவு | கொல்லைக்கதவு . |
| பின்காட்டுதல் | புறங்காட்டுதல் ; தோற்றோடுதல் . |
| பின்குடுமி | பின்பக்கமாக முடியும் குடுமி . |
| பின்சந்ததி | பின்வரும் கொடிவழி . |
| பின்செல்லுதல் | தொடர்ந்துபோதல் ; இணங்கியொழுகுதல் ; வழிபடுதல் ; கெஞ்சுதல் . |
| பின்தட்டு | தோணியின் பின்பக்கம் ; குதிரையின் பின்கட்டு வார் . |
| பின்பக்கம் | பின்புறம் ; வளர்பிறை ; பிற்பகுதி . |
| பின்பகல் | பகலின் பிற்பகுதி ; அந்திவேளை ; இரவு . |
| பின்பற்றுதல் | ஒருவர் செய்ததுபோலச் செய்தல் ; பின்தொடர்தல் , பின்செல்லுதல் ; பிரியப்படுதல் ; இணங்குதல் . |
| பின்பனி | ஆறுவகைப் பருவத்துள் ஒன்றான பனி மிகுதியுடைய மாசி , பங்குனி மாதங்கள் |
| பின்பனிக்காலம் | ஆறுவகைப் பருவத்துள் ஒன்றான பனி மிகுதியுடைய மாசி , பங்குனி மாதங்கள் . |
| பின்பாட்டு | தலைமைப் பாடகனைப் பின்பற்றிப் பாடும் பாட்டு ; பின்பற்றிப் பாடுவோன் ; ஒருவன் சொன்னதையே பின்பற்றுகை . |
| பின்பிறந்தாள் | தங்கை ; திருமகள் . |
| பின்பிறந்தான் | தம்பி . |
| பின்பு | பின்னானது ; பிறகு . |
| பின்புத்தி | அறிவுக்குறைவு ; பின்யோசனை . |
| பின்புறணி | கோள் . |
| பின்புறம் | பின்பக்கம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 770 | 771 | 772 | 773 | 774 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிறவிக்குருடன் முதல் - பின்புறம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, அயலான், பின்பக்கம், பிறைத்தலையம்பு, துன்பம், பின்செல்லுதல், தம்பி, பின்புறம், பிறகு, பின்கட்டு, ஆறுவகைப், பங்குனி, மாதங்கள், பின்பற்றிப், மாசி, மிகுதியுடைய, பருவத்துள், ஒன்றான, பிற்பகுதி, பிறை, உண்டாகும், துயரம், பிறழ்ச்சி, சாவால், பிறந்தார், பிறத்தலாகிய, உடன், மாறுகை, வாக்கு, பொருளுக்கும், அபிநயவகை, இடம், மனைவி, மாறுதல், வீடு, பிறைச்சந்திரன்

