முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பிளாச்சி முதல் - பிறவிக்குணம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பிளாச்சி முதல் - பிறவிக்குணம் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
பிளாச்சி | மூங்கில் முதலியவற்றின் பிளவு ; பிளந்த விறகு ; பனங்கிழங்கின் பிளவு . |
பிளாச்சு | மூங்கில் முதலியவற்றின் பிளவு ; பிளந்த விறகு ; பனங்கிழங்கின் பிளவு . |
பிளிச்சு | மூங்கில் முதலியவற்றின் பிளவு . |
பிளிர்த்தல் | கொப்புளித்தல் . |
பிளிற்றுதல் | ஆரவாரித்தல் ; வெகுளுதல் ; கக்குதல் . |
பிளிறல் | பேரோசை ; கிளைக்கை ; யானையின் முழக்கம் . |
பிளிறு | பேரோசை . |
பிளிறுதல் | முழங்குதல் ; கிண்டுதல் . |
பிற்கட்டு | பாட்டின் இறுதியிலுள்ள நல்லோசை அமைதி . |
பிற்கழித்தல் | வலியிழந்தோடுதல் . |
பிற்கால் | தம்பி . |
பிற்காலம் | வருங்காலம் . |
பிற்காலித்தல் | பிற்படுதல் ; பின்வாங்குதல் ; தாமதித்தல் . |
பிற்குளம் | உத்தராடநாள் . |
பிற்சாமம் | இரவின் கடைச்சாமம் . |
பிற்பக்கம் | பின்புறம் ; தேய்பிறை . |
பிற்பகல் | பகற்பொழுதின் பின்பகுதி . |
பிற்படுதல் | பின்னதாதல் ; பிந்துதல் . |
பிற்படை | கூழைப்படை . |
பிற்பாடர் | பிற்பட்டவர் . |
பிற்பாடு | பின்நிகழ்ச்சி ; பிறகு ; தரத்தில் குறைவுடையது . |
பிற்போக்கு | வீழ்ச்சிநிலை ; அறிவு , குணம் முதலியவற்றில் பிந்துகை ; முன்னேற்றம் இன்றிப் பழைய முறையிற் போகை . |
பிற்றல் | மண்வெட்டிக் கழுத்து ; பின்வாங்குகை . |
பிற்றி | பிந்திப்போனது . |
பிற்றை | பின்பு ; பின்னைநாள் . |
பிற்றைநிலை | வழிபாட்டுநிலை ; பிற்பட்டநிலை . |
பிற | மற்றவை ; ஓர் அசைச்சொல் . |
பிறக்கடி | பின்வாங்கின அடி . |
பிறக்கடியிடுதல் | நிலைகெட்டோடுதல் . |
பிறக்கணித்தல் | காண்க : புறக்கணித்தல் . |
பிறக்கம் | ஒளி ; உயர்ச்சி ; குவியல் ; மரக்கிளை ; அச்சம் . |
பிறக்கிடுதல் | பின்வாங்குதல் ; பின்நிகழ்தல் ; கொண்டையில் முடித்தல் . |
பிறக்கீடு | பின்னிடுகை . |
பிறக்கு | பின்பு ; முதுகு ; குற்றம் ; ஓர் அசைச்சொல் ; வேறாக ; வாழ்வு . |
பிறக்குதல் | அடுக்குதல் . |
பிறகிடுதல் | பின்புறமணிதல் ; தோற்றல் ; கழிதல் ; பின்வாங்குதல் . |
பிறகு | பின்பு ; பின்புறம் ; முதுகு ; சற்றுப் பொறுத்து ; பின்னோக்கி ; தாழ்வாக . |
பிறகுகாணுதல் | தோல்வியுறச்செய்தல் . |
பிறங்கடை | மகன் ; வழித்தோன்றல் ; மருகன் ; அயலிடம் . |
பிறங்கல் | பெருமை ; மிகுதி ; உயர்ச்சி ; நிறைவு ; திரள் ; ஒளி ; வீடுபேறு ; அரசன் ; ஒலி ; மலை ; சிறுமலை ; கற்பாறை . |
பிறங்கியல் | முதுகாடு , நன்காடு . |
பிறங்கு | விரலிறை . |
பிறங்குதல் | விளங்குதல் ; உயர்தல் ; சிறத்தல் ; மிகுதல் ; பெருகுதல் ; நிலைமாறுதல் ; செறிதல் ; பெருத்தல் ; ஒலித்தல் . |
பிறசான்றோர் | சங்கப் புலவரல்லாத புலவர் பெருமக்கள் . |
பிறத்தல் | வெளிவரல் ; தோன்றுதல் . |
பிறந்தகம் | தாய்வீடு ; மணமகனுக்கு மணமகள் வீட்டார் அளிக்கும் வரிசை ; தலைக்குழந்தைக்கு தாயைப் பெற்ற பாட்டி அளிக்கும் பரிசு . |
பிறந்தகோலம் | அம்மணம் . |
பிறந்தநாள் | பிறந்த தினம் . |
பிறந்தமேனி | அம்மணம் ; மாசின்மை . |
பிறந்தவம் | பிறப்பு . |
பிறந்தை | காண்க : பிறவி ; பிறப்பு ; பாவம் ; துன்பம் ; பிறந்தகம் ; இயல்பு . |
பிறப்பிடம் | பிறந்த இடம் . |
பிறப்பித்தல் | உண்டாக்கல் ; வெளிப்படுத்தல் . |
பிறப்பில்லான் | காண்க : பிறப்பிலி . |
பிறப்பிலி | கடவுள் ; சிவன் ; உடன்பிறப்பில்லாதவன் . |
பிறப்பிறப்பு | பிறத்தலும் இறத்தலும் . |
பிறப்பு | தோற்றம் ; உற்பத்தி ; சாதி ; தொடக்கம் ; உடன்பிறந்தவர் ; மகளிர் அணியும் தாலிவகை ; ஒரு வாய்பாடு ; அச்சம் ; நெருக்கம் ; மயக்கம் . |
பிறப்புவழி | மரபுவழி , கொடிவழி ; குடும்ப இயற்கை . |
பிறப்புவாசி | பிறவி இயல்பு . |
பிறமுகம்பார்த்தல் | பிறர் தயவு வேண்டுதல் ; விபசாரஞ்செய்தல் . |
பிறர் | அயலார் . |
பிறர்துயர்காத்தல் | பிறர்க்கு வந்த துன்பத்தை நீக்குகை . |
பிறர்மனைநயத்தல் | பிறர்மனைவியை விரும்புதல் ; பிறர்மனை செல்லல் . |
பிறவாநெறி | வீடுபேறு . |
பிறவாயாக்கைப்பெரியோன் | சிவன் . |
பிறவி | பிறப்பு ; உடன்பிறந்தவர் ; இயல்பு ; மறுபிறப்பு . |
பிறவிக்கடல் | பிறவியாகிய கடல் . |
பிறவிக்குணம் | பிறவி இயல்பு ; முன்வினையால் உண்டாகுங் குணம் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 769 | 770 | 771 | 772 | 773 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிளாச்சி முதல் - பிறவிக்குணம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பிளவு, பிறப்பு, பிறவி, இயல்பு, பின்பு, மூங்கில், பின்வாங்குதல், காண்க, முதலியவற்றின், விறகு, பிறந்த, அம்மணம், அளிக்கும், பிளந்த, பிறந்தகம், உடன்பிறந்தவர், சிவன், பிறப்பிலி, பிறர், வீடுபேறு, பேரோசை, குணம், பிறகு, பின்புறம், அசைச்சொல், பனங்கிழங்கின், முதுகு, அச்சம், உயர்ச்சி, பிற்படுதல்