தமிழ் - தமிழ் அகரமுதலி - பிரவேசனம் முதல் - பிராமணியம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பிரவேசனம் | வாயில் . |
| பிரவேசித்தல் | உட்செல்லுதல் . |
| பிரவை | ஒளி ; திருவாசி ; துர்க்கை ; தண்ணீர்ப்பந்தல் . |
| பிரளயகாலம் | உலக முடிவுகாலம் . |
| பிரளயம் | வெள்ளம் ; ஒரு பேரெண் ; கற்பமுடிவு ; அழிவு ; படையிலொரு தொகை . |
| பிரளயாக்கினி | ஊழித் தீ . |
| பிரளயாகலர் | ஆணவகன்ம மலங்களையுடைய உயிர்கள் . |
| பிரற்றுதல் | உரத்துச் சத்தமிடுதல் . |
| பிராக்கியன் | அறிவுடையோன் . |
| பிராக்கு | சென்றது . |
| பிராகபாவம் | முன்னின்மை . |
| பிராகாமியம் | எண்வகைச் சித்திகளுள் ஒன்று , நினைத்த இன்பங்களையடைவது ; ஒரே காலத்தில் பெண்கள் பலரோடு இன்பம் நுகரும் ஆற்றல் . |
| பிராகாரம் | கோயில் சுற்றுப்பகுதி ; மதில் . |
| பிராகிருதம் | அழியத்தக்கது ; இயற்கையானது ; பிரகிருதி சம்பந்தமானது ; வடமொழித்திரிபாயுள்ள மொழி . |
| பிராகிருதர் | பிரகிருதியில் தோன்றிய பொருள்களையே உண்மை என்று எண்ணுவோர் ; சாமானியர் . |
| பிராசம் | அடுத்தடுத்து வரும் எழுத்தோசை ஒற்றுமை ; ஒர் ஆயுதவகை . |
| பிராசயம் | ஆதி . |
| பிராசனம் | சோறூட்டுதல் ; உண்ணுதல் . |
| பிராசாதம் | கோயில் ; உபரிகை ; கருவறை ; மந்திரம் . |
| பிராசாபத்தியம் | பரிசப்பொருள் பெறாது மகட்கொடை நேரும் மணவகை ; காண்க : பிரசாபத்தியம் ; மைத்துனக் கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மறுக்காது கொடுக்கும் மணவகை ; பகலில் ஒன்பதாம் முகூர்த்தம் ; உரோகிணிநாள் ; தலையிடுகை ; விரதவகை . |
| பிராசி | கிழக்கு ; முன்னுள்ளது . |
| பிராசீனம் | பழைமை ; காண்க : ஆடுதின்னாப்பாளை . |
| பிராசீனர் | முன்னோர் . |
| பிராஞ்ஞத்துவம் | நல்லறிவு ; நல்லறிவுடைமை . |
| பிராஞ்ஞம் | நல்லறிவு . |
| பிராஞ்ஞன் | அறிவுடையவன் ; உயிர் . |
| பிராட்டி | தலைவி ; தேவி ; இறைவி . |
| பிராணசகி | உயிர்த்தோழி . |
| பிராணசங்கடம் | பெருந்துன்பம் . |
| பிராணசினேகம் | பெருநட்பு . |
| பிராணசினேகிதன் | உயிர்நண்பன் . |
| பிராணத்தறுவாய் | உயிர்போகுஞ் சமயம் . |
| பிராணத்தியாகம் | தானே உயிர்விடுகை . |
| பிராணநாதன் | கணவன் . |
| பிராணநாயகன் | கணவன் . |
| பிராணநாயகி | மனைவி . |
| பிராணம் | காண்க : பிராணன் . |
| பிராணவாயு | உயிர்வளி ; பத்து வாயுக்களுள் மூச்சை நிகழ்விப்பது ; வாயுவகை ; நோய்வகை . |
| பிராணவேதனை | இறப்புத் துன்பம் . |
| பிராணன் | உயிர் ; மூச்சு ; பத்துவகை வாயுக்களுள் மூச்சை நிகழ்விப்பது ; வலிமை ; இரணியகருப்பன் . |
| பிராணாந்தம் | இறுதிக்காலம் ; வாழ்நாள் முடிவுவரை . |
| பிராணாந்திகம் | இறுதிக்காலம் ; வாழ்நாள் முடிவுவரை . |
| பிராணாயாமம் | எண்வகை யோகத்துள் ரேசகம் , பூரகம் , கும்பகம் என்னும் மூவகையாய் மூச்சை அடக்கியாளும் யோகமுறை . |
| பிராணி | உயிருள்ளது , உயிரி . |
| பிராணித்தல் | மூச்சுவிடுதல் . |
| பிராணேசன் | காண்க : பிராணநாதன் . |
| பிராத்தி | எண்வகைச் சித்தியுள் ஒன்று , வேண்டுவன அடைதல் ; பயன் ; விதி . |
| பிராத்திகன் | விரும்பியதை அடையச் செய்வோன் . |
| பிராத்தித்தல் | காண்க : பிரார்த்தித்தல் . |
| பிராதக்காலம் | விடியற்காலம் . |
| பிராதானியம் | முதன்மை . |
| பிராது | முறையீடு . |
| பிராந்தகன் | அறிவு மயங்கியவன் . |
| பிராந்தன் | அறிவு மயங்கியவன் . |
| பிராந்தம் | ஓரம் ; நாட்டுப்பகுதி ; திரிபுணர்ச்சி . |
| பிராந்தி | மயக்கம் ; கழிச்சல் ; சாராயம் ; கவலை ; திரிபுணர்ச்சி . |
| பிராந்திஞானம் | திரிபுணர்ச்சி , ஒன்றை ஒன்றாக உணரும் அறிவு . |
| பிராந்திமதாலங்காரம் | ஒப்புமைபற்றிய மயக்கவணி . |
| பிராந்தியம் | சுற்றுப்புறம் ; நாட்டுப்பகுதி . |
| பிராந்து | பருந்து ; மயக்கம் ; அறிவு மயங்கியவன் . |
| பிராப்தி | பேறு ; விரும்பியதை அடைதலாகிய பெரும்பேறு , பயன் ; விதி ; உரிமம் . |
| பிராப்பியம் | பயன் ; பெறத்தக்கது ; எய்தப்படுவதாகிய செயப்படுபொருள் . |
| பிராமணம் | பிராமண சம்பந்தமானது ; மந்திர பாகமல்லாத வேதப்பகுதி . |
| பிராமணன் | பார்ப்பனன் . |
| பிராமணி | பார்ப்பனி ; எழுவகை மாதருள் ஒருத்தி ; காண்க : பாம்பரணை . |
| பிராமணியம் | பார்ப்பனத்தன்மை ; சான்று . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 765 | 766 | 767 | 768 | 769 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரவேசனம் முதல் - பிராமணியம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, அறிவு, பயன், மயங்கியவன், திரிபுணர்ச்சி, மூச்சை, விரும்பியதை, விதி, மணவகை, சம்பந்தமானது, கோயில், மயக்கம், ஒன்று, நாட்டுப்பகுதி, முடிவுவரை, வாழ்நாள், கணவன், பிராணநாதன், உயிர், பிராணன், வாயுக்களுள், இறுதிக்காலம், நிகழ்விப்பது, எண்வகைச், நல்லறிவு

