தமிழ் - தமிழ் அகரமுதலி - பிரமன் முதல் - பிரவேசம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பிரமன் | மும்மூர்த்திகளுள் ஒருவரும் படைப்புக் கடவுளுமான நான்முகன் ; பார்ப்பனன் ; வறட்சுண்டி ; பிரகிருதிமாயை . |
| பிரமன்றந்தை | பிரமனின் தந்தையான திருமால் . |
| பிரமனாள் | உரோகிணிநாள் . |
| பிரமாண்டம் | உலகம் ; மிகப் பெரியது ; பதினெட்டு உபபுராணத்துள் ஒன்று . |
| பிரமாணஞ்செய்தல் | உறுதிமொழி கூறல் , சத்தியம்பண்ணல் . |
| பிரமாணம் | அளவை ; ஆதாரம் ; விதி ; சான்று ; ஆணை ; பத்திரம் ; கடவுள் நம்பிக்கை ; மேற்கோள் ; உண்மையான நிலை ; மூவகைக் கால அளவை ; மெய்யறிவை அறிதற்குதவும் கருவி . |
| பிரமாணன் | மெய்யன் ; திருமால் . |
| பிரமாணி | சாத்திரங்களைக் கற்றறிந்தவன் ; பிரமாவின் மனைவி ; முதன்மையானவன் . |
| பிரமாணிக்கம் | உண்மை ; ஆணை ; எடுத்துக்காட்டு . |
| பிரமாணிகம் | உண்மை ; ஆணை ; எடுத்துக்காட்டு . |
| பிரமாணித்தல் | நிதானித்தல் ; நம்புதல் ; முடிவாக ஒப்புக்கொள்ளுதல் ; விதித்தல் . |
| பிரமாத்திரம் | நான்முகன் கணை . |
| பிரமாதப்படுதல் | பெரிதாக்கப்படுதல் . |
| பிரமாதம் | தவறு ; அளவில்மிக்கது ; அபாயம் ; விழிப்பின்மை . |
| பிரமாதா | அளப்பவன் ; பிரமாணங்களை அறிபவன் ; மாதாமகன் . |
| பிரமாதி | அறுபதாண்டுக் கணக்கில் பதின்மூன்றாம் ஆண்டு . |
| பிரமாதீச | அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்தேழாம் ஆண்டு . |
| பிரமாயுதம் | பத்து நூறாயிரம் . |
| பிரமானந்தம் | வீட்டின்பம் ; பேரின்பம் . |
| பிரமி | ஒரு பூண்டுவகை . |
| பிரமித்தல் | திகைத்தல் , மயங்குதல் . |
| பிரமிதி | அளவையால் அறியும் அறிவு . |
| பிரமிப்பு | மயக்கம் , திகைப்பு . |
| பிரமியம் | ஒரு நோய்வகை ; ஒரு பூண்டுவகை . |
| பிரமிருதம் | உழவுத்தொழில் ; உழவால் வரும் பொருள் . |
| பிரமுகம் | சிறந்தது ; நிகழ்காலம் . |
| பிரமுகன் | சிறந்தோன் . |
| பிரமேகம் | வெட்டைநோய் . |
| பிரமேயம் | நியாய அளவையால் அளந்தறியப்பட்ட பொருள் ; வாய்ப்பு ; சொல்லப்படும் பொருள் ; ஐயம் . |
| பிரமை | மயக்கம் ; பைத்தியம் ; பெருமோகம் ; அறியாமை . |
| பிரமைபிடித்தல் | பித்துக்கொள்ளுதல் . |
| பிரமோதம் | பெருமகிழ்ச்சி . |
| பிரமோதூத | அறுபதாண்டுக்கணக்கில் நான்காம் ஆண்டு . |
| பிரமோற்சவம் | ஆண்டுக்கொருமுறை கோயில்களில் நடக்கும் சிறப்புத் திருவிழா . |
| பிரயத்தனம் | முயற்சி . |
| பிரயாசப்படுதல் | முயற்சி எடுத்தல் ; வருந்தி உழைத்தல் . |
| பிரயாசம் | உழைப்பு ; முயற்சி ; வருத்தம் ; வேள்விவகை . |
| பிரயாசை | உழைப்பு ; முயற்சி ; வருத்தம் ; முயற்சியுள்ளவர் . |
| பிரயாணம் | பயணம் ; ஆத்திரை ; இறப்பு . |
| பிரயுதம் | பத்துலட்சம் ; கோடி . |
| பிரயோகம் | மந்திர ஏவல் ; செலுத்துகை ; பயன் படுத்துதல் ; மருந்து ; உவமானம் ;மேற்கோள் ; குதிரை . |
| பிரயோகித்தல் | செலுத்துதல் ; பயன்படுத்துதல் . |
| பிரயோசனம் | பயன்படுகை ; ஆதாயம் ; சடங்கு ; பயன் . |
| பிரயோசனம்பண்ணுதல் | உதவிசெய்தல் . |
| பிரயோசனன் | பயன்படுபவன் ; நல்லகுணமுள்ளவன் . |
| பிரலம்பம் | தொங்குகை ; அசைவு ; கிளை . |
| பிரலாபம் | பிதற்றல்மொழி ; புலம்பல் ; பிதற்றுதல் உண்டாக்கும் சன்னி . |
| பிரலாபித்தல் | புலம்புதல் ; பிதற்றுதல் ; ஊன்றிப்பேசுதல் . |
| பிரவசனம் | சொற்பொழிவு . |
| பிரவஞ்சம் | காண்க : பிரபஞ்சம் . |
| பிரவணம் | நான்கு தெருக்கள் கூடுமிடம் ; வளைவு ; பள்ளத்தாக்கு . |
| பிரவர்த்தகம் | முயற்சி ; காண்க : பிரவர்த்தனம் . |
| பிரவர்த்தனம் | செல்லுதல் ; செய்தல் . |
| பிரவர்த்தி | முயற்சி ; மலக்கழிவு . |
| பிரவர்த்தித்தல் | முயலுதல் . |
| பிரவரம் | மரபு , வமிசம் . |
| பிரவாகம் | வெள்ளம் ; குளம் ; தொழில் . |
| பிரவாதம் | காற்று ; ஊர்ப்பேச்சு . |
| பிரவாலம் | இளந்தளிர் . |
| பிரவாளம் | பவளம் . |
| பிரவிடை | காண்க : பிரவுடை . |
| பிரவிருத்தன் | முயல்பவன் ; அதிகாரசிவன் . |
| பிரவிருத்தி | காண்க : பிரவர்த்தி . |
| பிரவிருத்தித்தல் | காண்க : பிரவர்த்தித்தல் . |
| பிரவீணன் | விரகன் ; திறமையானவன் . |
| பிரவுடை | முப்பத்தொன்று முதல் ஐம்பத்தைந்து வயதுவரை உள்ள பெண்பாற்பருவம் ; பருவமடைந்த பெண் . |
| பிரவேசம் | வேலை முதலியவற்றின் தொடக்கம் ; நடிகர் முதலியோர் தோன்றுதல் ; வாயில் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 764 | 765 | 766 | 767 | 768 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரமன் முதல் - பிரவேசம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், முயற்சி, காண்க, பொருள், ஆண்டு, வருத்தம், உழைப்பு, பிரவுடை, பிதற்றுதல், பிரவர்த்தி, பிரவர்த்தனம், பிரவர்த்தித்தல், பயன், மயக்கம், உண்மை, மேற்கோள், அளவை, திருமால், எடுத்துக்காட்டு, அறுபதாண்டுக், அளவையால், பூண்டுவகை, கணக்கில், நான்முகன்

