முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பிராமமுகூர்த்தம் முதல் - பிருட்டம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பிராமமுகூர்த்தம் முதல் - பிருட்டம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பிராமமுகூர்த்தம் | சூரியோதயத்துக்கு இரண்டு நாழிகைக்கு முன்னுள்ள இரண்டு நாழிகை நேரம் . |
| பிராமி | கலைமகள் ; வடமொழியின் பழைய வடிவெழுத்துவகை . |
| பிராமியம் | காண்க : பிராமமுகூர்த்தம் ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று ; சத்தியலோகம் . |
| பிராயச்சித்தம் | பாவசாந்தி , கழுவாய் ; பாவத்தைப் போக்குவதற்கான சடங்கு ; தண்டனை . |
| பிராயம் | வயது ; நிலை ; சமானம் . |
| பிரார்த்தம் | பழவினை . |
| பிரார்த்தனம் | வேண்டுகோள் ; நேர்த்திக்கடன் ; ஒரு விண்ணப்பம் ; துதி . |
| பிரார்த்தனை | வேண்டுகோள் ; நேர்த்திக்கடன் ; ஒரு விண்ணப்பம் ; துதி . |
| பிரார்த்தித்தல் | வேண்டுதல் ; நேர்த்திக்கடன்பூணுதல் ; துதித்தல் . |
| பிராரத்தம் | காண்க : பிரார்த்தம் . |
| பிராரத்துவம் | காண்க : பிரார்த்தம் . |
| பிராரம்பம் | தொடக்கம் . |
| பிராவண்ணியம் | ஈடுபாடு . |
| பிராவம் | கொல்லை . |
| பிராறு | நிறைபுனல் ; நீரூர்பாதை . |
| பிரான் | தலைவன் ; கடவுள் ; சிவன் ; போற்றுபவன் . |
| பிரிசம் | பொருளின் அருமை . |
| பிரிசல் | பொருளின் அருமை ; பாகம் ; பிரிந்து கிடக்கும் நிலை . |
| பிரித்தல் | பிரியச்செய்தல் ; முறுக்கவிழ்தல் ; பகுத்தல் ; வகுத்தல் ; கட்டவிழ்தல் ; பங்கிடுதல் . |
| பிரிதல் | விட்டுவிலகுதல் ; கட்டவிழ்தல் ; பகுக்கப்படுதல் ;வேறுபடுதல் ; முறுக்கவிழ்தல் ; வகைப் படுதல் ; வசூலித்தல் ; நினைத்தல் . |
| பிரிதி | அன்பு ; விருப்பம் ; உவகை ; திருமால் தலமான இமயத்துள்ள நந்தப்பிரயாகை ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று . |
| பிரிந்திசைக்குறள் | ஒத்தாழிசைக் கலியுறுப்பினுள் ஒன்றாகிய அம்போதரங்கம் . |
| பிரந்திசைத்துள்ளல் | பல தளையும் விரவிவரும் கலிப்பா ஓசைவகை |
| பிரிந்திசைத்தூங்கல் | பல தளையும் விரவிவரும் வஞ்சிப்பா ஓசைவகை . |
| பிரிநிலை | வேறுபடுத்திக்காட்டும் நிலை . |
| பிரிநிலையெச்சம் | பிரிக்கப்பட்ட பொருள் விளங்கக் கூறப்பெறாமல் எஞ்சிநிற்கும் வாக்கியம் ; வாக்கியத்தில் கூறப்படாது எஞ்சிநிற்குஞ் சொல் . |
| பிரிப்பு | வேறுபாடு ; பிரிவு . |
| பிரிபு | வேறுபாடு ; பிரிவு . |
| பிரிமணை | காண்க : புரிமணை . |
| பிரிமொழிச்சிலேடை | ஒருவகையானின்ற சொல்லைப் பிரித்துத் தொகை வேறுபடுத்திப் பலபொருள் கொள்வது ; பிரிக்கப்பட்டுப் பலபொருள் பயக்கும் சொற்றொடர் . |
| பிரியகம் | கடப்பமரம் ; வேங்கைமரம் . |
| பிரியங்காட்டுதல் | அன்பு வெளிப்படுத்துதல் . |
| பிரியதரிசினி | வன்னிமரம் . |
| பிரியப்படுத்துதல் | மகிழ்வித்தல் ; இச்சகம் பேசுதல் ; தன்னுடையதை உயர்த்திப்பேசுதல் . |
| பிரியப்படுதல் | அன்புவைத்தல் . |
| பிரியம் | அன்பு ; விருப்பம் ; விரும்பிய பொருள் ; பண்டங்களின் பெறலருமை . |
| பிரியலர் | ஒருவரை ஒருவர் பிரியாதிருக்கும் நண்பர் . |
| பிரியன் | அன்புள்ளவன் ; கணவன் . |
| பிரியாம்பு | மாமரம் . |
| பிரியாமை | நீங்காமை . |
| பிரியாவிடை | உள்ளம் பிரியாதே விடை பெறுகை . |
| பிரியாவுடையாள் | சிவபிரானைப் பிரியாத பார்வதி . |
| பிரியை | பெண் ; மனைவி . |
| பிரிவாற்றாமை | தலைவன் பிரிவைத் தலைவி பொறுக்கமுடியாமை . |
| பிரிவிலசைநிலை | தனியே வழங்காது இரட்டித்தே நிற்கும் அசைநிலை . |
| பிரிவினை | வேறுபாடு ; பிரிகை ; பாகம் ; ஒற்றுமையின்மை . |
| பிரிவு | பிரிதல் ; வகுத்தல் ; பாகம் ; ஒற்றுமையின்மை ; பகுதி ; அவிழ்கை ; வேறுபாடு ; இடையீடு ; மூலமதத்தின் வேறுபட்ட உட்பேதம் ; இறப்பு . |
| பிரிவுக்கட்டை | நீரோட்டத்தைப் பிரிக்கும் மதகு . |
| பிரீதி | அன்பு ; விருப்பம் ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று . |
| பிருகதி | கத்தரிச்செடி ; மாமரம் ; ஒரு வீணைவகை . |
| பிருகற்பதி | வியாழன் ; புரோகிதன் ; அறநூலாசிரியருள் ஒருவர் ; அறநூல் பதினெட்டனுள் பிருகற்பதியால் இயற்றப்பட்ட நூல் . |
| பிருகு | பனை முதலியவற்றின் முற்றாக் கிழங்கு ; சுக்கிரன் ; ஒரு முனிவர் . |
| பிருகுடி | புருவம் ; நெற்றியை நெரிக்கை . |
| பிருங்கம் | வண்டு ; கரிசலாங்கண்ணி . |
| பிருங்கராசம் | கரிசலாங்கண்ணி . |
| பிருங்கிமலை | பறங்கிமலை . |
| பிருசகன் | கொலைஞன் . |
| பிருட்டம் | பின்பக்கம் ; இடுப்பின் பூட்டு ; குண்டி ; முதுகு ; பரப்பு ; அரைத்த மா . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 766 | 767 | 768 | 769 | 770 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிராமமுகூர்த்தம் முதல் - பிருட்டம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், அன்பு, வேறுபாடு, காண்க, பிரார்த்தம், பிரிவு, விருப்பம், நிலை, பாகம், யோகம், ஒன்று, இருபத்தேழனுள், ஓசைவகை, தளையும், பொருள், விரவிவரும், பிராமமுகூர்த்தம், ஒற்றுமையின்மை, கரிசலாங்கண்ணி, மாமரம், ஒருவர், பலபொருள், இரண்டு, பிரிதல், துதி, விண்ணப்பம், நேர்த்திக்கடன், வேண்டுகோள், தலைவன், பொருளின், வகுத்தல், முறுக்கவிழ்தல், சொல், அருமை, கட்டவிழ்தல்

