தமிழ் - தமிழ் அகரமுதலி - பிரபோதம் முதல் - பிரமவித்தை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பிரபோதம் | பேரறிவு . |
| பிரம்படி | பிரம்பினால் அடிக்கும் தண்டனை . |
| பிரம்படிக்காரர் | பிரம்புகொண்டு தண்டிக்கும் அரசனின் ஏவலாளர் . |
| பிரம்பு | கொடிவகை ; மூங்கில் ; தேர்முட்டி ; வரப்பு ; கடல் ; நெய் . |
| பிரம்புகட்டுதல் | பாத்திரங்கட்கு விளிம்பிலே வளையங்கட்டுதல் . |
| பிரம்புத்தடுக்கு | பிரம்பினாற் செய்த தட்டி . |
| பிரம்மசூத்திரம் | வேதாந்த சூத்திரம் . |
| பிரமக்கியானம் | காண்க : பிரமஞானம் . |
| பிரமக்கிழத்தி | இறைவனது சத்தி . |
| பிரமக்கொலை | பார்ப்பனக்கொலை ; பார்ப்பனக் கொலைப்பாவம் ; பிரமகத்தி செய்தோனைத் தொடர்ந்துவரும் இறந்தவன் உருவம் . |
| பிரமகத்தி | பார்ப்பனக்கொலை ; பார்ப்பனக் கொலைப்பாவம் ; பிரமகத்தி செய்தோனைத் தொடர்ந்துவரும் இறந்தவன் உருவம் . |
| பிரமகற்பம் | பிரமனின் ஆயுட்காலம் ; ஒரு பேரெண் . |
| பிரமகன்னிகை | கலைமகள் . |
| பிரமகாதகன் | பார்ப்பனனைக் கொன்றவன் . |
| பிரமகாயத்திரி | பார்ப்பனர் நாள்தோறும் ஒதும் மந்திரவகை . |
| பிரமகுலம் | பார்ப்பனச்சாதி . |
| பிரமகூர்ச்சம் | தருப்பைமுடிச்சு ; பசுவிடம் கிடைக்கும் ஐந்து பொருள்கள் . |
| பிரமசரியம் | மாணவம் , ஆசிரியனிடம் கற்று விரதங்காக்கும் நிலை ; திருமணமில்லா வாழ்க்கை ; தவம் ; பார்ப்பனர் . |
| பிரமசாரி | திருமணமாகாதவன் ; மாணவன் ; ஓதுதலும் விரதங்காத்தலும் ஆகிய நியமங்களை மேற்கொண்டொழுகுபவன் ; வீடுமர் . |
| பிரமசைதன்னியம் | அறிவுவடிவான கடவுள் ; காண்க : பிரமஞானம் . |
| பிரமஞானம் | கடவுளைப்பற்றிய அறிவு ; எல்லாவற்றையும் பிரமமாகக் காணும் அறிவு ; சமயசமரச மதம் . |
| பிரமஞானி | கடவுளை அறிந்தவன் ; பிரும்மஞான மதத்தைச் சார்ந்தவன் . |
| பிரமணம் | சுழலுகை ; திரிகை ; மயக்கம் . |
| பிரமத்துவம் | கடவுள் தன்மை . |
| பிரமதகணம் | சிவகணம் . |
| பிரமதண்டம் | மந்திர ஆயுதவகை ; யோகதண்டம் ; நற்செயல்கட்கு உதவாத நட்சத்திரம் . |
| பிரமதத்துவம் | இறைவனது உண்மை இயல்பு . |
| பிரமதர் | காண்க : பிரமதகணம் . |
| பிரமதனம் | கடைகை ; கொலை . |
| பிரமதாயம் | பார்ப்பனர்களுக்கு விடப்படும் இறையிலிநிலம் . |
| பிரமதாளம் | சச்சரிப்பறைவகை . |
| பிரமதேயம் | பார்ப்பனருக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட ஊர் . |
| பிரமதேவன் | படைப்புக்குரியவனாகிய பிரமன் . |
| பிரமநாடி | காண்க : சுழுமுனை . |
| பிரமநாதை | தாம்பிரபரணியாறு . |
| பிரமநிருவாணம் | கடவுளுடன் ஒன்றியிருத்தல் . |
| பிரமப்பொழுது | சூரியோதயத்துக்கு இரண்டு நாழிகைக்கு முன்னுள்ள இரண்டு நாழிகை நேரம் . |
| பிரமபத்திரம் | புகையிலை . |
| பிரமபத்திரி | புகையிலை . |
| பிரமபதம் | (வி) பிரமலோகம் ; பிரமனது நிலை . |
| பிரமபாவனை | தன்னைப் பிரமமாகப் பாவிக்கை . |
| பிரமபுரம் | சீகாழிநகரம் ; காஞ்சிபுரம் . |
| பிரமம் | முழுமுதற்பொருள் ; பிரமன் ; திருமால் ; சிவன் ; சூரியன் ; சந்திரன் ; அக்கினி ; முனிவன் ; வேதம் ; தெய்விகம் ; தத்துவம் ; தவம் ; மந்திரம் ; வீடுபேறு ; மாணவம் ; பிரமசரியம் ; ஞானம் ; ஒழுக்கம் ; பிரமசரிய விரதங்காத்தவனுக்குக் கன்னியைத் தானமாகத் தருதல் ; நடு ; சிட்சை ; வீணைவகை ; ஆடு ; கலக்கம் ; சுழல்காற்று ; துரிதம் ; தவறு ; மாயை ; தண்டசக்கரம் . |
| பிரமமணம் | பிரமசாரிக்கு கன்னியைத் தீ முன்னர்க் கொடுக்கும் மணம் . |
| பிரமயாகம் | வேதமோதல் . |
| பிரமரகசியம் | அதிரகசியம் . |
| பிரமரந்திரம் | தலையின் உச்சித்துளை . |
| பிரமரம் | வண்டு ; அபிநயவகை ; குதிரைச் சுழிவகை . |
| பிரமராசனர் | தபோதனர் . |
| பிரமராயன் | பார்ப்பன அமைச்சர் பட்டப் பெயர் . |
| பிரமரி | சுழற்சி ; கூத்தின் விகற்பம் ; ஒரு சமண மந்திரம் . |
| பிரமலிபி | பிரமனால் விதியாக எழுதப்பெற்ற தென்று கருதப்படும் மண்டை எழுத்து ; தெளிவற்ற எழுத்து . |
| பிரமலோகம் | சத்தியலோகம் . |
| பிரமவமிசம் | பிரமனிடந் தோன்றிய மரபு ; பார்ப்பனக் குலம் . |
| பிரமவாதம் | உலகமெல்லாம் பிரமனிட்ட முட்டை என்னும் மதம் ; வேதமதம் . |
| பிரமவாதி | உலகம் பிரமனிட்ட முட்டை என்று வாதிப்பவன் . |
| பிரமவித்தை | மெய்யறிவு , தத்துவஞானம் ; அறிதற்கு அரியது . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 763 | 764 | 765 | 766 | 767 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரபோதம் முதல் - பிரமவித்தை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பிரமகத்தி, பார்ப்பனக், பிரமஞானம், பிரமன், இரண்டு, பிரமதகணம், புகையிலை, மதம், கன்னியைத், பிரமனிட்ட, முட்டை, எழுத்து, அறிவு, மந்திரம், பிரமலோகம், நிலை, செய்தோனைத், தொடர்ந்துவரும், கொலைப்பாவம், பார்ப்பனக்கொலை, இறைவனது, இறந்தவன், உருவம், தவம், மாணவம், பிரமசரியம், பார்ப்பனர், கடவுள்

